ஆவூர்ப்பசுபதீச்சுரம்: (சோழநாடு)

திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Aaurpasubathichuram: (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil

ஆவூர்ப்பசுபதீச்சுரம்: (சோழநாடு) | Aaurpasubathichuram: (Chola Nadu)

பட்டீச்சுரத்திற்குத் தென்மேற்கே 4% மைலில் உள்ளது. சுந்தரப்பெருமாள் கோயிலிலிருந்து 4 மைல்.

ஆவூர்ப்பசுபதீச்சுரம்: (சோழநாடு)


பட்டீச்சுரத்திற்குத் தென்மேற்கே 4% மைலில் உள்ளது. சுந்தரப்பெருமாள் கோயிலிலிருந்து 4 மைல்.


வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு வந்து வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம். காமதேனு உலகிற்கு வந்த இடம் கோவந்தகுடி. தற்காலத்தில் கோவிந்தகுடி என்று மருவி வழங்குகின்றது. மணிகூடம், அசுவத்தவனம் என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.


கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில். பிரமன், சப்த ரிஷிகள், தேவர்கள், இந்திரன், சூரியன் முதலியோர் வழிபட்ட தலம். சங்ககாலப் புலவர்களாகிய ஆவூர்கிழார், ஆவூர் மூலங்கிழார் முதலிய புலவர்கள் தோன்றிய தலம்.


நித்த விநோத வளநாட்டின் உட்பிரிவான ஆவூர்க் கூற்றம் தஞ்சாவூர் கல்வெட்டுக்களில் அடிக்கடி கூறப்பட்டுள்ளது.


இத்தலக்கோயிலின் பெயர் பசுபதீச்சரம். சம்பந்தர் பாடிய தலம். 


சுவாமி : பசுபதீசுவரர், அசுவத்தநாதர், ஆவூருடையார். 


அம்பிகை : மங்களாம்பிகை, பங்கஜவல்லி.


தீர்த்தம் : காமதேனு தீர்த்தம், பிரமதீர்த்தம். 


விருட்சம் : அரசு.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : ஆவூர்ப்பசுபதீச்சுரம்: (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Aaurpasubathichuram: (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்