அபய முத்திரை பயத்தைப் போக்கும்

செய்முறை, இருக்கும் முறை, கால அளவு, பலன்கள்

[ யோக முத்திரைகள் ]

Abhaya Mudra removes fear - Recipe, mode of existence, duration, benefits in Tamil

அபய முத்திரை பயத்தைப் போக்கும் | Abhaya Mudra removes fear

ஆபத்துக் காலத்தில் காப்பாற்றுவரே அபயம் அளிப்பவர் ஆவார். அதேபோல், பயத்தைப் போக்கும் முத்திரை என்றால், அது அபய முத்திரைதான்.

அபய முத்திரை பயத்தைப் போக்கும்

ஆபத்துக் காலத்தில் காப்பாற்றுவரே அபயம் அளிப்பவர் ஆவார். அதேபோல், பயத்தைப் போக்கும் முத்திரை என்றால், அது அபய முத்திரைதான்.

பாதுகாப்பு, அமைதி, பயத்தை விரட்டுதல் ஆகிய வற்றின் அடையாளமாக இந்த முத்திரை விளங்குகிறது. புத்தர் பிறப்பதற்கு முன்பே இந்த முத்திரை நடைமுறையில் இருந்துவந்தது. முன்பின் அறியாதவரை அணுகும்போது நட்பை தெரிவிக்கப் பயன்படுத்தும் ஒரு சின்னமாக இந்த முத்திரை உள்ளது. எனவே, இந்த முத்திரையை பாதுகாப்புக்கான ஒரு சமிக்ஞை (அடையாளம்) என்று கூறலாம்.

இந்து மதத்தில், பல கடவுளர்கள் கையில் அபய முத்திரை காட்டியபடி இருப்பதைக் காணலாம். வேதங்களில் காணப்படும் குறிப்புகளின்படி, நமது பயத்தைப் போக்க, இந்தக் குறிப்பிட்ட முத்திரையை ஆண் மற்றும் பெண் தெய்வங்கள், துறவிகள் ஆகியோர் காட்டியதாகத் தெரிகிறது. யோகாசனத்தில், இந்த முத்திரை ஒரு பயிற்சியாகவே செய்யப்படுகிறது.

செய்முறை

வலது கையை தோள்பட்டை வரை உயர்ந்த வேண்டும். புஜத்தை வளைத்து, உள்ளங்கை முன்புறம் இருக்குமாறும், பின்புறக் கை நம்மை நோக்கி இருக்குமாறும் வைக்க வேண்டும். விரல்கள் நேராக மேல் நோக்கி இருக்க வேண்டும். இடது கை, கீழே தொங்குமாறு இருக்க வேண்டும்.

இருக்கும் முறை

இந்த முத்திரையை கிழக்குத் திசையைப் பார்த்துச் செய்ய வேண்டும். நின்ற நிலையிலோ, அமர்ந்த நிலையிலோ இதைச் செய்யலாம்.முதுகு நேராக இருக்க வேண்டும். கண்கள் திறந்த நிலையிலோ அல்லது மூடிய நிலையிலோ இருக்கலாம். இரண்டு கைகளிலும் இந்த முத்திரையைச் செய்யலாம்.

கால அளவு

இந்த முத்திரையை தினமும் 15 நிமிடங்கள் செய்யலாம். பின் படிப்படியாக நேரத்தை அதிகரிக்கலாம்.

பலன்கள்

1. நமது மனத்திலுள்ள பயம் நீங்கி, பாதுகாப்பு உணர்வு அதிகரிக்கும்.

2. தன்னம்பிக்கையும், சக்தியும் அதிகரிக்கும்.

3. மனம் அமைதி அடையும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

யோக முத்திரைகள் : அபய முத்திரை பயத்தைப் போக்கும் - செய்முறை, இருக்கும் முறை, கால அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Abhaya Mudra removes fear - Recipe, mode of existence, duration, benefits in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்