திருமால் எட்டு கைகளுடன் ஒவ்வொன்றிலும் ஆயுதம் ஏந்தி அருள்புரியும் மகிமைமிக்க தலம், அட்டபுயகரம்.
அபயம் அருளும் அட்டபுயகரத்தான்!
திருமால் எட்டு கைகளுடன் ஒவ்வொன்றிலும்
ஆயுதம் ஏந்தி அருள்புரியும் மகிமைமிக்க தலம், அட்டபுயகரம்.
நான்முகன் செய்த யாகத்தை அழிக்கும்
நோக்குடன் சரஸ்வதி தேவி, காளி
தேவியை ஏவினாள். காளியை அடக்க, தன்
எட்டுத் திருக்கரங்களிலும் எட்டு விதமான ஆயுதங்களை ஏந்தி ஆதி கேசவன் எனும் பெயரில்
திருமால் நிலைநின்ற திருத்தலம் அது.
சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று
காளியைப் பெருமாள் அடக்கியதாக ஐதீகம். அதற்கு ஆதாரமாக இந்த சன்னிதியின் அருகே கருங்காளியம்மன்
ஆலயம் உள்ளது.
முனிவரான மகாசந்தன், சாபத்தால் கஜேந்திரன் எனும் யானையாக
மாறினார். இருந்தாலும் புண்ணியவசத்தால் ஸ்ரீநாரா யணனை அந்த யானை உருவிலேயே தினமும்
நீராடி வழிபட்டார். ஒரு முறை நீராடும்போது முதலை ஒன்று யானை உருவில் இருந்த முனிவரைப்
பற்றியது. ஆதி மூலமே'- என்று
அந்த யானை அழைக்க. பெருமாள் தனது எட்டுக்கரங்களோடு கருடனில் பறந்து வந்து அந்த யானையைக்
காப்பாற்றியதாகவும் ஐதீகம்!! இந்த அபயம் அருளும் அட்டபுயகரத்தானை வணங்கினால், ஆபத்துக் காலத்தில் ஓடி வந்து பக்தருக்கு
அருள்வார்!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : அபயம் அருளும் அட்டபுயகரத்தான்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Abhayam is a blessing! - Perumal in Tamil [ Perumal ]