அபிஷேகப் பொருட்கள் – நற்பலன்கள்
பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டிய அபிஷேகங்களும் நற்பலன்களும் அபிஷேகப் பொருட்கள் – நற்பலன்கள் 1. ஸ்கந்தத் தைலம் - இன்பம் தரும் 2. பச்சரிசி மாப்பொடி - கடன் தீரும் 3. மஞ்சள் பொடி - அரச வசியம் 4. காட்டு நெல்லிப் பொடி - பிணி நீக்கம் 5. திருமஞ்சனத் திரவியம் (களபம்) - பிணி நீக்கம் 6. பஞ்சகவ்யம், பசுவின் பால், தயிர், நெய், சாணம், கோமியம் - சுத்த சகல பாவம் நீக்கம் 7. பழப்பஞ்சாமிர்தம் - முக்தி தரும் 8. பழச்சாறு (பல பழச்சாறுகள்) - முக்தி தரும் 9. பால் - ஆயுள் விருத்தி 10. தயிர் - குழந்தை பேறு கிட்டும் 11. நெய் - முக்தி தரும் 12. வெந்நீர் (இளம் சூட்டில்) - முக்தி தரும் 13. தேன் - சுகம் மற்றும் குரல் இனிமை தரும் 14. இளநீர் - ராஜயோகம் தரும் 15. சர்க்கரை கரைத்த நீர் - பகைவரை அழிக்கும் 16. கரும்புச்சாறு - ஆரோக்கியம் தரும் 17. தம்ரத்தம் பழச்சாறு - ஆரோக்கியம் தரும் 18. எலுமிச்சம் பழச்சாறு - எம பயம் போக்கும் 19. நார்த்தம் பழச்சாறு - மந்திர சக்தி தரும் 20. கொழுஞ்சி பழச்சாறு - சோகம் போக்கும் 21. மாதுளம் பழம் - பகையை அகற்றல் 22. அன்னம் அபிஷேகம் - விளைநிலங்கள் விளையும் 23. வில்வம் கலந்த நீர் (வில்வோதகம்) - மகப்பேறு தரும் 24. தர்ப்பை கலந்த நீர் - ஞானம் தரும் 25. பன்னீர் - குளிர்ச்சி தரும் 26. விபூதி - சகல ஐஸ்வர்யம் தரும் 27. தங்கம் கலந்த நீர் (ஸ்வர்ணோதகம்) - சகல சவுபாக்கியம் கிட்டும் 28. நவரத்தினம் கலந்த நீர் (ரத்னோதகம்) - சகல பாக்கியம் கிட்டும் 29. சந்தனம் - அரசாட்சி பெருகும் 30. கோரோசனை, ஜவ்வாது, புனுகு, பச்சைக் கற்பூரம் குங்குமப்பூ (தனித்தனியாக) - சகல ஆரோக்கியம் மற்றும் புகழ் கிட்டும் 31. சகஸ்ரதாரை (1008 துளை கொண்ட தட்டில்) - சகல பாவம் நீங்கும் 32. கங்காபிஷேகம் - சகல பாவமும் நீங்கும் 33. ஸ்தபன கும்பாபிஷேகம் - சித்த, சுத்தி அடைந்து சிவதரிசனம் கிட்டும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷ காலத்தில் செய்ய வேண்டிய அபிஷேகங்களும் நற்பலன்களும் - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Abhishekams and merits to be done during Pradosha period - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]