முடிவெடுக்கும் திறன்

குறிப்புகள்

[ சிந்தனை சிறு கதைகள் ]

Ability to make decisions - Tips in Tamil

முடிவெடுக்கும் திறன் | Ability to make decisions

அது ஒரு சிறிய கிராமம். அக்கிராமத்தில் ஒரு இளைஞன் ஒரு தொழிலும் செய்யாமல் ஊர் சுற்றித் திரிந்தான். பாடசாலைப் படிப்பை கைவிட்டு விட்டான்.

முடிவெடுக்கும் திறன்

அது ஒரு சிறிய கிராமம்.

அக்கிராமத்தில் ஒரு இளைஞன் ஒரு தொழிலும் செய்யாமல் ஊர்

சுற்றித் திரிந்தான்.

பாடசாலைப் படிப்பை கைவிட்டு விட்டான்.

பெற்றோர் சொல்லைக் கேட்பதில்லை.

பெரியவர்களை மதிப்பதில்லை.

உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.

கெட்ட பழக்கங்களைப் பழகிவிட்டான்.

வேலை வெட்டி இல்லை.

உழைப்புப் பிழைப்பு இல்லை.

ஆனால் கோயில் மாடு போல கொழுத்துப் போய் இருந்தான். ஒருநாள் அந்தக் கிராமத்திலிருந்த மாஞ்சோலையுட் புகுந்தான். நல்ல மாங்காய்கள் பல மரங்களில் இருந்தன.

அந்த மாங்காய்களைப் பிடுங்கித் தின்ன வேண்டுமென்று ஆசை வந்தது.

அந்தக் கிராமத்துப் பெரியவர் ஒருவருடைய அந்த மாஞ்சோலை யிலிருந்த ஒரு மரத்தில் ஏறி மாங்காய்கள் சிலவற்றைப் பிடுங்கினான். அந்த மாஞ்சோலையின் காவற்காரன் அதைக் கண்டு ஓடோடி வந்தான். சத்தம் போட்டு ஊரைக் கூட்டினான்.

களவாக மாங்காய் பிடுங்கிய அந்த இளைஞனை ஊரார் பிடித்து விட்டனர்.

அவனுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றனர் யாவரும். 'களவெடுத்தவன் கடுமையாகத் தண்டிக்கப்பட்டால் தான் ஊரில் களவு நடைபெறாது' என்றனர்.

அவனும் தவறை உணர்வதற்கு அது வாய்ப்பாக இருக்கும் என்று சிலர் கூறினர்.

மூன்று விதமான தண்டனையை வழங்கலாம் என்றனர்.

அவற்றில் ஒன்றை அவனே தீர்மானிக்கட்டும் என்றனர்.

அவனுக்கு ஐம்பது பிரம்படிகள் கொடுப்பது.

அல்லது ஐம்பது மாங்காய்களை அவன் தின்று முடிக்க வேண்டும்.

அல்லது ஐநூறு ரூபா பணம் கட்ட வேண்டும்.

அவன் யோசித்து விட்டு ஐம்பது மாங்காய்களைத் தின்னும் தண்டனையை ஏற்றுக் கொண்டான்.

ஒவ்வொன்றாகத் தின்னத் தொடங்கினான்.

ஒன்று இரண்டு மூன்று எனத் தொடங்கி பத்தாவது மாங்காய் வரையில் தின்று முடித்து விட்டான்.

அதன் பின் பல்லுக் கூசத் தொடங்கிவிட்டது.

பல்லால் கடிக்கவே முடியவில்லை.

தன்னால் மாங்காய்களைத் தின்ன முடியாதென்று மறுத்தான். தான் ஐம்பது பிரம்படிகளைப் பெறத் தயார் என்றான்.

அவனது விருப்பப்படி ஐம்பது பிரம்படிகளை வழங்க உத்தர விட்டனர். முப்பது அடிவரையில் வாங்கிய அவன் அதன் மேல் அடிவாங்க முடியாதவனாக அழுதான்.

தான் ஐநூறு ரூபா பணம் தருவதாகச் சொல்லி பணத்தைக் கொடுத்து விடுதலை பெற்றான்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

சிந்தனை சிறு கதைகள் : முடிவெடுக்கும் திறன் - குறிப்புகள் [ ] | Thought short stories : Ability to make decisions - Tips in Tamil [ ]