பெருமாள் கோயில் வழிபாடுகளில் முக்கிய இடம் பிடிக்கிறது துளசி!!
துளசி பற்றி...
பெருமாள் கோயில் வழிபாடுகளில் முக்கிய
இடம் பிடிக்கிறது துளசி!! அங்கு தரப்படும் தீர்த்தத்தில் துளசி முக்கிய இடம் வகிக்கிறது!!
நந்தவனம் என்றால் கூட அங்கே துளசி இருக்கவேண்டும்.
அப்போதுதான் அது நந்தவனம் என்கிற தகுதியைப் பெறும் என்கிறார்கள். துளசி மட்டுமே இருந்தால்
கூட அது சிறந்த நந்தவனமாகி விடும் என்பதும் ஆன்மீக அன்பர்களின் கருத்தாக உள்ளது.
துளசி படர்ந்த இடம் 'பிருந்தாவனம்' என்று அழைக்கப்படுவதால், துளசிக்கு பிருந்தை என்று இன்னொரு பெயரும்
உண்டு. துளசி மாலையைக் கையில் பிடித்தோ, துளசி மாலை அணிந்தோ பூஜிப்பவர்களுக்கு ஆயிரம் அஸ்வமேத யாகம்
செய்த பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம்!
மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களைப்
பெருமாள் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார் என்பது வைஷ்ணவ பக்தர்களின் நம்பிக்கை!!
பவுணர்மி, அமாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளைகளிலும், எண்ணெய் தேய்த்துக் கொண்டும் துளசி
பறிக்கக்கூடாது! அதே நேரம் அதிகாலை நேரத்திலும், சனிக்கிழமைகளிலும், விஷ்ணு பெயரை உச்சரித்துக் கொண்டு விரல் நகம் படாமல் துளசியைப்
பறிக்கலாம். துளசியைப் பறித்த மூன்று நாள் வரை அதை உபயோகப்படுத்தலாம்.
விரதநாள், மூதாதையரிள் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் நேரம், தானம் செய்யும் வேளைகளில் துளசி பயன்படுத்தினால்
அந்தச் செயல் பரிபூரண பலன் தரும் என்பது ஐதீகமாக உள்ளது!
சங்கு, துளசி, சாளக்கிராமம் இம்மூன்றையும் ஒன்றாகப்
பூஜிப்பவர்களுக்கு மகா ஞானியாகும் பாக்கியமும், முக்காலத்தையும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது உண்மை!
சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல்
வைத்து சங்காபிஷேகம் செய்வதும்
சிறப்பு!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : துளசி பற்றி... - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : About Tulsi... - Perumal in Tamil [ Perumal ]