101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது.
செய்ந்நன்றி அறிதல் அதிகாரம் : 11 101. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்ற லரிது. பிறருக்கு ஓர் உதவியும் செய்யாதிருக்க, பிறர் நமக்குச் செய்கின்ற உதவிக்கு விண்ணுலகும், மண்ணுலகம் ஈடாகாது. 102. காலத்தி னால்செய்த நன்றி சிறுதுஎனினும் ஞலத்தின் மாணப் பெரிது. வேண்டிய காலத்தில் செய்த உதவியானது மிகச்சிறிய தானாலும், அவ்வுதவி உலகைவிடப் பெரியதாகும். 103. பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது. பயனை எதிர்ப்பாராமல் செய்கின்ற உதவியின் சிறப்பை ஆராய்ந்தால், அவ்வுதவி கடலை விடப் பெரியதாகும். 104. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். தினையளவு நன்றி செய்தாலும் அப்பயனை உணர்ந்தவர்கள் பனை அளவாகக் கருதுவார்கள். 105. உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. செய்யப்பட்ட உதவியின் அளவைக் கொண்டதல்ல உதவி செய்யப்பட்டவரின் சால்பின் அளவினதாகும். 106. மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க செயப்பட்டார் சால்பின் வரைந்து. குற்றமற்றவரின் நட்பை மறக்கக் கூடாது, துன்பம் அமைத்த போது துணையாக நின்றவரின் நட்பைக் கைவிடக் கூடாது. 107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு. தனக்கேற்றபட்ட துன்பத்தை நீக்கியவரின் நட்பை சான்றோர் ஏழேழு பிறவியலும் நினைப்பார்கள். 108. நன்றி மறப்பது நன்றன்று: நன்றல்லது அன்றே மறப்பது நன்று. பிறர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல. பிறர் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விடுவது நல்லது. 109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். கொல்லும் படியான துன்பத்தைச் செய்தாலும், அவர் செய்த ஒரு நன்மையை நினைக்க அத்துன்பம் அழியும். 110. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்: உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. எத்தகையை அறத்தை அழித்தவர்களுக்கும் தப்ப வழியுண்டாம். ஆனால் பிறர் செய்த உதவியை மறந்தவனுக்குத் தப்ப வழியில்லை. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
திருக்குறள்: பொருளடக்கம் : செய்ந்நன்றி அறிதல் - அதிகாரம் : 11 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Acknowledgment - Authority : 11 in Tamil [ Tirukkural ]