உங்கள் மனம் உடைக்கப்படும் ஒவ்வொரு தருணமும் நீங்கள் உருவாக்கப்படுகிறீர்கள்! செதுக்கப்படுகிறீர்கள்!
தன்னம்பிக்கையுடன் தொடங்கும் செயல்கள்
உங்கள்
மனம் உடைக்கப்படும் ஒவ்வொரு தருணமும்
நீங்கள்
உருவாக்கப்படுகிறீர்கள்! செதுக்கப்படுகிறீர்கள்!
அதனால்
வலிகளுக்கு நன்றி கூறி பழகிக்கொள்ளுங்கள்!
புன்னகையுடன்
ஏற்றுக்கொள்ளுங்கள்!
தவிப்பதை விட
தவிர்ப்பது நல்லது
"எதுவாயினும்"
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
தன்னம்பிக்கையுடன்
தொடங்கும் செயல்கள் வெற்றியில் முடியும். வெற்றியில் மட்டுமே முடியும்.
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
யாரையும் உடலாலும் மனதாலும் காயப்படுத்தாதீர்கள். இன்று நீங்கள் பலம் மிக்கவராக இருக்கலாம்,
ஆனால் காலம் அதை அப்படியே புரட்டிப் போட ஒரு நொடி போதும்.
காலம் உங்களை விட பலம் மிக்கது என்பதை மறந்து விடாதீர்கள்.
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
விருப்பங்களுக்கு
மத்தியிலும், விதித்தது இதுவே என கடந்து
போகும் மனப்பக்குவம் இருந்துவிட்டாலே போதும்..
வாழ்ந்து
விடலாம்....
செமையாக!
செம்மையாக!!
செழுமையாக!!!
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
நம்
ஆசைகளையும்
உணர்வுகளையும்
கொன்ற
பின்னர்தான்,
வாழ்க்கையை
நிம்மதியாக
கடக்க முடிகிறது..
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
நிராகரிப்பற்ற,
வலிகள்
இல்லாத தனிமை
போன்றதொரு
செளகரியம்
வேரோன்றில்லை..
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
முட்டாளின் நட்பை விட,
தனியாக
வாழ்வது
எவ்வளவோ
மேலானது......!
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
நீங்கள்
போடும் கணக்கு காரியக்
கணக்கு
தப்பாகலாம்......!!
ஆனால்
ஈசன்
போடும் கணக்கு கர்மக்
கணக்கு
தப்பவே முடியாது......!
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
உங்களின்
உண்மைக்கும்
உண்மையில்
உண்மைக்கும்
இருக்கிற இடைவெளியே
உங்களின்
நேர்மை.......!!
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
நிம்மதி இழப்பது எதனால்?...
''தன்னிடம்
இருப்பதே போதும்'' என்ற எண்ணம் வராத வரை, நாம்
தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக அலைந்து கொண்டே தான் இருக்கின்றோம்.
எத்தனை
கிடைத்தாலும் மனம் திருப்தி,, நிம்மதி அடைவது இல்லை..
நம்மிடம்
இருப்பதை வைத்து சரியான முறையில் பயன்படுத்தத் தவறும் போது, நிம்மதியை
இழக்கக் கூடிய சூழல்கள் ஏற்படுகிறது..
இருப்பதைக்
கொண்டு திருப்தி காணும் உள்ளம் இல்லையெனில் கோடிகோடியாக கொட்டினாலும் போதாது
தான்.!
ஒரு
அறிஞரிடம் பணக்காரர் வந்து,'' அய்யா என்னிடம் நிறைய செல்வமிருந்தும் மனதில் கொஞ்சம்
கூட நிம்மதியே இல்லை... என்ன காரணம் என்பது புரியவில்லை? என்று
கேட்டார்.
அதற்கு
அந்த அறிஞர் பதில் சொல்லவில்லை.
அங்கே
அருகில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.
அதன்
கையில் ஒரு மாம்பழத்தைக் கொடுத்தார்.
குழந்தை
அதைத் தன்னுடைய ஒரு கையால் வாங்கிக் கொண்டது.
அடுத்து
ஒரு பழத்தைக் கொடுத்தார்.அதையும் இன்னொரு கையால் வாங்கிக் கொண்டது. மீண்டும் ஒரு
பழத்தைக் கொடுத்தார்.
தன்னுடைய
ஒரு கையால் இரு பழங்களையும் மார்போடு அணைத்துக் கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற
முயற்சித்தது.
ஆனால்
ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது. அதைக் கண்டு அந்தக் குழந்தை அழுதது.
இதை
கவனித்துக் கொண்டு இருந்த அந்தப் பணக்காரரிடம் அந்த அறிஞர்,
"இந்தக்
குழந்தையைப் பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை
அந்தக் குழந்தைக்கு வந்திருக்குமா?" என்றார்.
அதே
போன்று தான் "போதும்" என்ற திருப்தி ஏற்பட்டு விட்டால் பிரச்னை
வாரது.நிம்மதி கிடைக்கும். தனக்கு ஏன் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்ற விவரம் இப்போது
அந்தப் பணக்காரருக்குப் புரிந்து விட்டது.
தங்களிடம்
உள்ளதை வைத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்..
அது, வாழ்க்கையில்
மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும்.
┈❀🌿🀼┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈
பல
நேரங்களில் நல்லதாக, ஆதரவாக சொல்லப்படும் அன்பான வார்த்தைகள் ஏற்படுத்தும்
தாக்கத்தை, பணத்தாலும், பொருளாலும்
ஏற்படுத்த முடிவதில்லை...
அதுவும்
துன்ப காலங்களில் ஒருவர் சிக்கித் தவிக்கும் போது அவனிடம் அன்பாகவும், ஆறுதலாகவும், நம்பிக்கையூட்டும்
செயலாகவும் சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் நன்மைகளுக்கு அளவே இல்லை...
தண்ணீரில்
மூழ்கித் தத்தளிக்கும் நீந்தத் தெரியாத மனிதனுக்குக் கிடைக்கும் மரக்கட்டை
பிடிகொடுத்து மிதக்க உதவுவதைப்போல, அந்த அன்பான நல்ல வார்த்தைகள்
துன்ப காலங்களில் தாக்குப் பிடிக்க ஒருவருக்கு உதவுகின்றன...
மிகவும்
தன்னம்பிக்கை உடையவர்கள், திறமையாளர்கள் கூட சில நேரங்களில் தங்கள்
தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் இழந்துவிடுவதை நாம்
பார்த்திருக்கின்றோம்...
அவர்களே
தங்களுக்குள் அவற்றை இழந்து நிற்கும் அந்தக் குறுகிய காலத்தில் அடுத்தவரிடமிருந்து
வரும் நம்பிக்கை வார்த்தைகள் எப்படிப்பட்ட ஊக்க மருந்தாக வேலை செய்கிறது
என்பதைக் கண் கூடாகக் கண்டு இருக்கின்றோம்...
இன்றைய
நாட்களில் ஆதரவான நான்கு வார்த்தைகள் கேட்பது உண்மையிலேயே அரிதாக இருக்கிறது...
எத்தனையோ
வசதி, வாய்ப்புகள்
பெருகி இருந்தாலும் மனப் பற்றாக்குறையாலும்,நேரப் பற்றாக்குறையாலும் நல்ல
நம்பிக்கை, ஆறுதலூட்டும்
வார்த்தைகள் கேட்பது அபூர்வமாகவே இருக்கிறது...
இந்த
சிறிய குறைபாட்டின் விளைவுகள் வார்த்தைகளில் அடங்காதவை. பூதாகாரமானவை...
எவ்வளவு
கோபம் வந்தாலும் வார்த்தைகளை விட்டு விடக்கூடாது.
ஏனெனில்
அடிகளை விட அது தரும் வலிகள் மிக அதிகமாகும்.
*பிறகு
எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அந்த காயம் ஆறவே ஆறாது.!!*🌱✌🇸🇾
ஆம்
நண்பர்களே...!
🟡 சொற்கள் சக்தி வாய்ந்தவை. அவை ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவை. அவைகளை ஆக்கத்திற்கே பயன்படுத்துங்கள். சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள நல்லதைக் கண்டு பிடித்துப் பாராட்டுங்கள்...!
🟡 அப்படி நல்லதைப் பாராட்டும்போது
அவர்கள் மேலும் நல்லதைச் செய்ய நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்துகிறீர்கள்.
மற்றவர்கள் வருத்தத்தில் மூழ்கியிருக்கையில் மனமுவந்து ஆறுதல் வார்த்தைகளைச்
சொல்லுங்கள்...!
🔴
வருத்தங்களையும், தோல்விகளையும்
கடக்காமல் எவரும் பெரிய வெற்றிகளை அடைந்ததில்லை என்பதை நினைவூட்டுங்கள்.
உங்களுக்குத் தெரிந்து அதே போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு மேலே வந்தவர்கள்
பற்றி எடுத்துச்சொல்லி தைரியப்படுத்துங்கள்...!!
🔴
அதன்
மூலம்
அதிலிருந்து
மீண்டு
வர
அவர்களுக்கு
நீங்கள்
உதவுகிறீர்கள்.
காணும்
ஒவ்வொரு
திறமையையும்
சுட்டிக் காட்டி வாழ்த்தத் தயங்காதீர்கள்...!!
⚫
பிறையாகத்
தோன்றும்
எல்லாமே
முழு
நிலவாகிப்
ஒளிர்வதில்லை.
எத்தனையோ
பிறைகள்
அலட்சியத்தாலும், கடுமையான
விமரிசனங்களாலும் அமாவாசை இருட்டாய் தொலைந்து போய் இருக்கின்றன...!!!
⚫
ஒரு
திறமை
வெளிப்படுகையில்
அடையாளம்
காணப்பட்டு
பாராட்டப்படும்
போது
அந்தத்
திறமை
வேரூன்ற
உதவுகிறீர்கள்.
தங்கள்
திறமைகள்
மீது
உண்மையிலேயே
நம்பிக்கை
ஏற்படும்
வரை
எல்லாத்
திறமையாளர்களுக்கும்
ஆரம்பத்தில்
இது
போன்ற
நல்ல
வார்த்தைகள்
தேவைப்
படுகின்றன...!!!
🔘
அந்த
நல்ல வார்த்தைகளைச் சொல்ல என்றுமே தயக்கம் கொள்ளாதீர்கள். தன்னலமில்லாத சேவைகளை செய்ய நமக்கு
முடியாமலிருக்கலாம். ஆனால் ,அன்பாய் நான்கு வார்த்தைகள்
சொல்லலாம் இல்லையா...?
🔘
_*அதற்கு
என்ன செலவு இருக்கிறது...? அதில் என்ன சிரமம் இருக்கிறது...? இந்தக்
கணத்திலிருந்து சிரமமில்லாத, செலவில்லாத அந்த நல்ல செயலை நாம்
செய்ய ஆரம்பிப்போமா...!?*_🙏
முக
மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே
நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல
எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த
நாள் இனிய நாளாகட்டும்
வாழ்க
🙌
வளமுடன்
அன்பே🔥சிவம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை
பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
ஊக்கம் : தன்னம்பிக்கையுடன் தொடங்கும் செயல்கள் - அன்பான ஆதரவான வார்த்தைகள்...!, நிம்மதி இழப்பது எதனால்?... [ ஊக்கம் ] | Encouragement : Actions that start with confidence - Kind words of support...!, Why lose peace? in Tamil [ Encouragement ]