ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.
அறிவுரை
ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது
அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில்
ஒதுங்கி நின்றது. அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன்
மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
மரத்தடியில் குரங்கு
நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது. மனம்
பொறுக்காமல் "குரங்காரே.. என்னைப்பாரும் வெய்யில் மழையிலிருந்து என்னையும்
என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன். அதனால் தான் இந்த
மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு
செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா?" என்று புத்தி சொன்னது.
இதனைக் கேட்ட
குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. "உன்னைவிட நான் எவ்வளவு
வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?. இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்" என
மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது. பறவைக்கு
அப்போதுதான் புரிந்தது அறிவுரைகளைக் கூட, அதைக் கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும் என்று.
துஷ்டனுக்கு நல்லது
சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து
நனைகின்றோமே என மனம் வருந்தியது. நாமும் ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை
ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்க வேண்டும்.
ஒருவர் உங்களை எப்போதும்
குறை சொல்லிக் கொண்டிருந்தால்
அமைதியாக இருங்கள்..
ஏனென்றால் பல ஆயிரம் ரூபாய்
நோட்டுக்களை விட
சில்லறைகளுக்கு சத்தம்
அதிகம் தான்..!😳
வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவனும்,
சோதிக்கப்பட்டவனும்
பாவப்பட்டவன் அல்ல..
பக்குவப்பட்டவன்..!
நல்லவர்களுடன் பழகினால்
ஏமாற்றாமல் இருக்க
கற்றுக் கொள்வாய்..
கெட்டவர்களுடன் பழகினால்
ஏமாறாமல் இருக்க
கற்றுக் கொள்வாய்..!
முயற்சிக்கு நீ அடிமை என்றால்
வெற்றி உனக்கு அடிமை..
பணிவுக்கு நீ அடிமை என்றால்
புகழ் உனக்கு அடிமை..!😳 😒
★ஒரு பெண்ணின் அழகை
வெளிப்படுத்த விலை உயர்ந்த
ஆடை தேவையில்லை.. அவளது
அழகான சிரிப்பு போதும்..!😒 😳
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஊக்கம் : அறிவுரை - [ ] | Encouragement : advice - in Tamil [ ]