இராமாயணம், பாடத் தொடங்கிய கம்பர், கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்காகவும் ஒரு பாடல் பாடி உள்ளார். அந்தப் பாடலில் நிலம், நீர், தீ, காற்று. ஆகாயம் என்னும் ஐம்பூதங்களோடு ஆஞ்சநேயரைத் தொடர்புபடுத்தி உள்ளார்.
ஐம்பூதங்களும் ஆஞ்சநேயரும்
இராமாயணம், பாடத் தொடங்கிய கம்பர், கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்காகவும் ஒரு பாடல்
பாடி உள்ளார். அந்தப் பாடலில் நிலம், நீர், தீ, காற்று. ஆகாயம் என்னும் ஐம்பூதங்களோடு ஆஞ்சநேயரைத்
தொடர்புபடுத்தி உள்ளார். இதோ அந்த பாடல்:
'அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டு அயலார்
ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை
அளித்துக்காப்பான்'
இதன் பொருள்: ஐம்பூதங்களுள் ஒன்றாகிய காற்றுக்கு மைந்தனாகிய அனுமன்,
ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நீர்ப்பரப்பாகிய கடலைத்தாண்டி,
ஐம்பூதங்களுள் ஒன்றாகிய ஆகாயத்தையே வழியாகக் கொண்டு
இலங்கையை அடைந்து, ஐம்பூதங்களுள்
ஒன்றாகிய நிலமகள் பெற்றெடுத்த சீதையைக் கண்டு, அயலார் ஊரில் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயை வைத்தான்.
இதன் மூலம் ஆஞ்சநேயர் ஐம்பூதங்களையும் தமக்குள்
சுட்டுப்படுத்தியவர் என்பது தெளிவாகிறது. எனவே ஆஞ்சநேயரை வணங்கினால்
ஐம்பூதங்களையும் வணங்கியதற்குச் சமமாகும். ஆஞ்சநேயரை வணங்கினால் ஐம்பூதங்களின்
சக்தியும் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அனுமன் ஒன்பது அவதாரம் கொண்டவர். அந்த அவதாரங்கள் வருமாறு:-
விசாந்தி புஜ ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர் பிரசன்ன ஆஞ்சநேயர். வீர ஆஞ்சநேயர்,
18 கரங்கள் கொண்டு திகழ்பவர்,
கூவர்கலாபதி, சதுர்புஜ அனுமன், 32 கரங்களுடன் திகழ்கின்ற அனுமன், மற்றும் வானர அவதாரம் என்ற இந்த ஒன்பது அவதாரமெடுத்தவர்
அனுமன்.
1. அஞ்சனாதேவியின் மகன் என்பதால் அனுமனுக்கு ஆஞ்சநேயர் என்ற
பெயர் ஏற்பட்டது.
2. ஆஞ்சநேயருக்கு 'சிறிய திருவடி' என்ற சிறப்பு
பெயரும் உண்டு (பெரிய திருவடி என்பவர் கருடன்)
3. ஆஞ்சநேயர்
படத்தை வீட்டின் வாசலில் வெளியில் மாட்டக்கூடாது.
4. ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி என்றாலும், பெண்கள்
ஆஞ்சநேயரைப் பூஜித்து வழிபடலாம்.
5. ஆஞ்சநேயர் வாலில் சந்தனப்பொட்டு வைத்து
ஒரு மண்டலம் (40 முதல் 18 நாட்கள்)
வழிபட்டால் நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
6. ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை போடும்போது. வெறும்
வெற்றிலை மாத்திரம் கட்டிப் போட்டால் போதும்.
7. ஆஞ்சநேயர் வீரத்திலும், தியாகத்திலும்
சிறப்பாகப் போற்றப்படுவர். அவரது படத்தை வீட்டில் வைத்து வணங்கினால் நிச்சயம்
சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
8. தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லை- தூத்துக்குடி தேசிய
நெடுஞ்சாலையில், தெய்வச்செயல்புரம் என்ற ஊரில் ஆஞ்சநேயருக்கு 77 அடி
உயரத்தில் பிரமாண்ட சிலை உள்ளது.
9. தமிழ்நாட்டில் ஆஞ்சநேயருக்கு உள்ள உயரமான
சிலை இதுதான். தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு எப்படி முக்கியச் சந்திப்புகளில்
உள்ளதோ, அது போல வட மாநிலங்களில் ஆஞ்சநேயர்
கோவில்கள்தான் அதிகமாக உள்ளன.
10. ஆஞ்சநேயருக்கு 'நைஷ்டிகப் பிரம்மச்சாரி' என்று ஒரு
பெயரும் உண்டு.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: ஆஞ்சநேயர் : ஐம்பூதங்களும் ஆஞ்சநேயரும் - ஒன்பது அவதாரங்கள் [ ஆன்மீகம் ] | spirituality: Anjaneya : Aimbhutas and Anjaneyas - Nine incarnations in Tamil [ spirituality ]