11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுரைற் பாற்று.
வான் சிறப்பு 11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுரைற் பாற்று. மழை பெய்வதால் உலக உயிர்கள் வாழ்ந்து வருவதால், மழையே அமுதமாகும். 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. உண்ணும் உணவும் பொருள்களை உற்பத்தி செய்வதும் மழை, உண்பவர்களுக்கு உணவாய் அமைவதும் மழையேயாகும். 13. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. வானில் இருந்து வேண்டும் பொழுது மழை பெய்யாவிடின் கடல் சூழ்ந்த உலகில், பசி நிலை பெற்று உயிர்களை வருத்தும். 14. ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால். மேகம் சூழ்ந்து மழை பெய்யா விடின். ஏர் உழும் உழவர்களும் உழுத்தொழில் செய்யமாட்டார்கள். 15. கொடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூம் எல்லாம் மழை. வேண்டும் பொழுது பெய்யாமல் கெடுப்பதுவும் மழை. கெட்டவர்களுக்குத் துணையாய் பெய்து வாழவைப்பதும் மழையே யாம். 16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. வானத்திலிருந்து மழைத்துளிகள் விழாவிட்டால் பூமியிலிருந்து பசுமையான புல்லின் முனையையும் காணமுடியாது. 17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி தான்நல்கா தாகி விடின். மேகம் தன் இயல்பைக் குறைத்துக் கடலில், மழைப் பெய்யாவிட்டால் அளவற்ற நீரையுடைய கடலும் தன் இயல்பில் குறையும். 18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. மழை பெய்யாது பொய்த்துவிடுமானால், உலகில் வானவர்க்குச் செய்யும் விழாவும், பூசனையும் நடைபெறாது. 19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்காது எனின். மழை பெய்யாவிட்டால், இப்பரந்த உலகில், மக்கள் செய்யும் தானமும் தவமும் நடைபெறாது. 20. நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. எத்தகைய மேம்பட்டவருக்கும் தண்ணீர் இல்லாமல் உலகியல் அமையாது, அந்தத் தண்ணீரும் வானம் வழங்காமல் வராது. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.அதிகாரம் : 2
திருக்குறள்: பொருளடக்கம் : வான்சிறப்பு - அதிகாரம் : 2 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Air Force - Authority: 2 in Tamil [ Tirukkural ]