தற்காலத்தில் தோன்றும் சில வியாதிகளுக்கு 'ஒவ்வாமை' என்ற ஒரு குறைபாடே காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வாமைக் குறைபாடும் நரம்புப் பிணிகளும் தற்காலத்தில் தோன்றும் சில வியாதிகளுக்கு 'ஒவ்வாமை' என்ற ஒரு குறைபாடே காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 'ஒவ்வாமை' என்ற என்ற இந்தத் தமிழ்ச் சொல் 'அலர்ஜி' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. சிலருக்கு சில வகையான உணவுப் பொருட்கள் உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை. ஒத்துக் கொள்ளாத அந்த உணவு வகைகளை அவர்கள் உண்ணும் போது உடலுக்கு ஒத்துக் கொள்ளாமல் சில வகையான பாதிப்புகளுக்கு இலக்காக நேரிடும். உணவு வகைகள் மட்டுமல்ல, சுற்றுப்புறச் சூழலும் சிலருடைய உடலுக்கு ஒத்துக் கொள்வதில்லை. காற்றில் பறக்கும் தூசி, தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை போன்றவை சிலருக்கு ஒத்துக் கொள்ளாமல் உடல் பாதிப்புக்கு இலக்காகும். வீட்டில் ஜன்னல் கதவுகளுக்குப் புதிதாக அடிக்கும் வண்ணங்களின் மணம் கூட சிலருக்கு உடலுக்கு ஒத்துக் கொள்ளாமலிருப்பதும் உண்டு. இவ்வாறு உணவுப் பண்டமோ, பிற பொருட்களோ, சுற்றுபுறச் சூழ்நிலையோ ஒத்துக் கொள்ளாமல் உடல் நிலையில் ஏற்படும் பாதிப்பினைத் தான் 'அலர்ஜி' என்ற பெயரால் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அலர்ஜி என்ன காரணத்தால் ஏற்பட்டாலும் அதன் விளைவாக நரம்பு மண்டலமும் அதிர்ச்சிக்கும் கிளர்ச்சிக்கும் உள்ளாகிறது. அலர்ஜி நேரடியாக நரம்பு மண்டலப் பிணிகளுக்குக் காரணமாக இருக்கிறது என்று கூற முடியாது. என்றாலும் அலர்ஜி காரணமாக உடல் பாதிப்புக்கு இலக்காகும் போது நரம்பு மண்டலமும் சேர்ந்து பாதிப்புக்கு உள்ளாகிறது. "அலர்ஜி, என்பது உடலில் ஏற்படுகின்ற ஒரு தீவிர உணர்ச்சி நிலை என்று கூறலாம். 'உணர்ச்சி' என்று சொன்னாலே அது நரம்புகளுடன் தொடர்பு கொண்டது என்று யூகித்துக் கொள்ளலாம். ஆஸ்த்மா என்னும் சுவாச காச நோய் ஒரு அலர்ஜி நோய்தான். அந்த வகைப்பட்ட நோய் தோன்றும் போது சுவாசக் குழாயின் கிளைகள் அதிர்ச்சி அடைகின்றன. அதன் விளைவாகத் தான் ஆஸ்த்மா நோயாளிகளுக்கு மூச்சிரைப்பு, இழுப்பு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. டிராபிகல் ஈசனோபிலியா (tropical Eosinophilia) என்னும் அலர்ஜி தொடர்புடைய பிணியின் போது சுவாச கோசங்களின் சிறுபைகள் அதிர்ச்சி நிலை அடைகின்றன. தட்டம்மை என்னும் நோயும் அலர்ஜி தொடர்பினால் ஏற்படும் பாதிப்புத்தான். பலவிதமான சரும நோய்களும் அலர்ஜி காரணமாகக் தோன்றக் கூடும். முன்னமே நாம் குறிப்பிட்டது போல அலர்ஜி காரணமாக உடலின் எந்த உறுப்பு பாதிக்கப் பட்டாலும் நரம்புகளிலும் அதன் பிரதிபலிப்பைக் காண முடிகிறது. அலர்ஜி தொடர்பான பிணிகளால் நரம்பியல் கோளாறுகள் ஏற்பட்டால் அலர்ஜி தொடர்பான பிணிக்கு சிகிச்சை செய்து குணமாக்கினால்தான் நரம்பு தொடர்பான குறைபாடுகள் அகலும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
மருத்துவ குறிப்புகள் : ஒவ்வாமைக் குறைபாடும் நரம்புப் பிணிகளும் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Allergies and nervous disorders - Medicine Tips in Tamil [ Medicine ]