ஆழ்வார்திருநகரி (வியாழன்) - நவதிருப்பதி

ஆன்மீக குறிப்புகள், தல வரலாறு

[ ஆன்மீக குறிப்புகள் ]

Alvarthirunagari (Thursday) - Navathirupati - Spiritual Notes, Head history in Tamil

ஆழ்வார்திருநகரி (வியாழன்) - நவதிருப்பதி | Alvarthirunagari (Thursday) - Navathirupati

ஆழ்வார்திருநகரி திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இத்திருத்தலம், புகைவண்டி நிலையம், பேரூந்து வசதி இருக்கிறது.

ஆழ்வார்திருநகரி (வியாழன்) - நவதிருப்பதி


ஆழ்வார்திருநகரி திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் உள்ளது. இத்திருத்தலம், புகைவண்டி நிலையம், பேரூந்து வசதி இருக்கிறது. பல மடங்களம் சாத்திரங்களும் இருக்கின்றன. நம்மாழ்வார் அவதரித்த திருத்தலம். நம்மாழ்வாருக்கு தனி சன்னதி, புளிமரத்திற்கு (உறங்கா புளி - இது இக்கோவிலின் தலவிருட்சம். இப்புளியமரத்தின் இலைகள் இரவில் மூடிக் கொள்வதில்லை. நம்மாழ்வார் சன்னதிக்கு மேல்மாடத்தில் உள்ளது.) 


தல வரலாறு:

ஒரு சமயம் திருமாலிடம் பிரம்மா தான் தவமிருக்க இடம் கூறுமாறுவேண்ட திருமால் உன்னை படைப்பதற்கு முன்னமே தாமிரபரணி நதிக்கரையில் யாம் எழுந்தருளி உள்ளோம் என்று கூறினார். ஆதியிலே தோன்றி நாதன் என்பதால் ஆதி நாதன், ஆதிபிரான் என திருநாமம் கொண்டார். திருமாலே வந்து பிரம்மனுக்கு குருவாக காட்டிய இடம் என்பதால் குருகூர் என கூறப்படுகிறது. இங்கு ஆற்றில் வந்த சங்கு இப்பெருமானை வழிபட்டு மோட்சம் பெற்தால் சங்கின் வேறு பெயர் குருகு. குருகு மோட்சம் பெற்ற தலம் குருகுஊர் குருகூர் என்றும் கொள்ளலாம். சங்குமோட்சம் பெற்றதலம் இன்றும் திருச்சங்கண்ணி துறை என்று கூறுகின்றனர்.

 

சாளக்கிராமத்தில் மந்தன் என்ற அந்தணச் சிறுவன் வேதம் படிக்கும் காலத்தில் அதை சரியாக படிக்காமலும் வேதத்தை இகழ்ந்து பேசியும் வந்தான். இதனால் கோபமுற்ற குரு அவனை ஈழிகுலத்தில் பிறக்க சபித்தார். அவனும் படிப்பதை நிறுத்திவிட்டு திருமால் ஸ்தலங்களின் ஆலய துப்புரவு பணிகளில் ஈடுபட்டு தன் காலங்கடந்தான் மறு பிறவியில் தாந்தன் என்னும் பெயரில் கீழ்குலத்தில் பிறந்து ஒழுக்கத்தில் சிறந்தவனாக விளங்கினான். பின்னார் குருகூர் திருச்சங்கண்ணி துறைக்கு வந்து ஆதிநாதனை வழிபட்டு வந்தான். அங்கே இருந்தவர்கள் இவனை வெறுத்து ஒதுக்க அவன் கிழக்கே சென்று மறுகரையில் ஆதிபிரானை மணலில் அமைத்து வழிபட்டான். திடீரென தாந்தனை ஒதுக்கியவர்களுக்கு கண் தெரியாமல் போகவே அவர்கள் பெருமாளை சரணடைய அசரீரியாய் நீங்கள் தாந்தனை ஒதுக்கியதற்கு தண்டனை என்று கூற அவர்கள் அவன் இருப்பிடம் சென்று மன்னித் தருள வேண்டிய பின் கண்ணொளி பெற்றனர். பெருமாளும் தாயார்களோடு காட்சி கொடுத்து தாந்தனை தன்னுடன் இணைத்துக் கொண்டார். இதனால் தாந்த ஷேத்ரம் என கூறுகின்றனர்.

 

பிற்காலத்தில் தாந்தன் தங்கிய ஆலமரத்தில் முன்பு ஒருமுறை தங்கி: வேடன் ஒருவன் மறு பிறவியில் சங்கன் என்னும் முனிவராக கடுந்தவம் கொள்கையில் நாரத முனி அவனிடத்தில் தவத்திற்கான காரணம் கேட்க அவன் மோட்சம் வேண்டும் என்று கூற அவரும் குருகூர் சென்று பெருமாளை வேண்டுமானு அறிவுறுத்த முனிவரும் சங்காக மாறி குருகுகூல் வேண்டி பெருமாள் காட்சி அளித்து மோட்சம் பெற்றார். அந்த இடம்தான் இன்றும் திருச்சங்கண்ணி துறை என்று அழைக்கப்படுகிறது. இங்கு இருக்கும் புளியமரம் இலக்குமணன் எனப்படுகிறது. ஆதிசேஷனாக இலக்குமணம் இருப்பதால் சேஷ சேஷத்திரம் எனவும். வராஹ அவதாரம் காண முனிவர்கள் இத்தலத்தில் தவமிருந்து அவர்களுக்கு பிராட்டியுடன் வராஹ நாராயணன் காட்சியளித்ததால் வராஹஷேத்திரம் எனவும் நாய்க்கும் மோட்சம் அளித்த தீர்த்தகரை என்பதால் தீர்த்த ஷேத்திரம் எனவும் பஞ்ச மஹா ஷேத்திரம் என்றும் கூறுவர். நம்மாழ்வார் குழந்தையாக இருந்த பொழுது தவழ்ந்த புளியமரத்தில் இன்றுமே குழந்தையின் உருவம் காணப்படுகிறது.

 

நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தை எழுத நினைத்த நாதமுனிகள், மதுரகவி வம்சத்தினரிடம் கண்ணி நுண் சிறுத்தாம்பு பெற்று அதை பலாயிரம் முறை ஜெபிக்க நம்மாழ்வாரே நேரில் வந்து அருள நாதமுனி அவற்றை எழுதினார் என்று கூறப்படுகிறது.

 

இங்குள்ள ஆதிபிரான் சுயம்பு உருவம் கால்கள் பூமியுள் இருப்பதாக ஐதிகம். நம்மாழ்வார் மூல வடிவம் தாமிரபரணி நீரை காய்ச்சி அதில் மதுர கவி தன் சக்திகளை பிரையோகித்து உருவாக்கிய சிற்பம் கைப்படாத சிற்பம் என்று கூறப்படுகிறது.

 

மூலவர் - ஆதிநாதன் பொலிந்து நின்ற பிரான், நின்ற திருக்கோலம், கிழக்கு பார்த்த திருமுகமண்டலம்,

தாயார் - ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி. தாயர்களுக்கு தனித்தனி சன்னதி) தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், திருசங்கண்ணி துறை. விமானம் - கோவிந்த விமானம்.

பிரத்யட்சம் - பிரம்மா, மதுரகவி, நம்மாழ்வாருக்கு. ஆகமம்- பாஞ்சராத்ரம் – சம்பிரதாயம் தென்கலை.

 

நம்மாழ்வார் மங்களாஸாஸனம்

ஒன்றுந்தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா

அன்று, நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்

குன்றும் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்

நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றெத் தெய்வம் நாடுதிரே.

                                               - பாடல் 3106


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : ஆழ்வார்திருநகரி (வியாழன்) - நவதிருப்பதி - ஆன்மீக குறிப்புகள், தல வரலாறு [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Alvarthirunagari (Thursday) - Navathirupati - Spiritual Notes, Head history in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்