முன்னோர்களின் ஆசியை பெற அமாவாசை வழிபாடு

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Amavasya worship to seek the blessings of ancestors - Tips in Tamil

முன்னோர்களின் ஆசியை பெற அமாவாசை வழிபாடு | Amavasya worship to seek the blessings of ancestors

🌞சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே சித்திரை. உடல் ஆரோக்கியம், கம்பீரம், அந்தஸ்து போன்றவற்றை தரும் சூரியபகவான் சித்திரை மாதம் முழுவதும் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த நாளில் விரதமிருந்து முன்னோர்களையும், சூரிய பகவானையும் வணங்கினால் நற்பலன்களை பெற்றிடலாம்.

முன்னோர்களின் ஆசியை பெற அமாவாசை வழிபாடு..!!

 

🌞சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே சித்திரை. உடல் ஆரோக்கியம், கம்பீரம், அந்தஸ்து போன்றவற்றை தரும் சூரியபகவான் சித்திரை மாதம் முழுவதும் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த நாளில் விரதமிருந்து முன்னோர்களையும், சூரிய பகவானையும் வணங்கினால் நற்பலன்களை பெற்றிடலாம்.

 

இந்நாளில் என்ன செய்யலாம்?

 

திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அமாவாசை நாளில் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

 

முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யுங்கள்.

 

வீட்டில் உள்ள முன்னோர்களின் படங்களுக்கு, பூக்களால் அலங்கரித்து, தீப தூப ஆராதனைகள் செய்யுங்கள். சந்தனம், குங்குமம் இடுங்கள்.

 

 

முன்னோர்களை நினைத்து, தினமும் காகத்திற்கு உணவிடுவது நம் குலத்தையும், வம்சத்தையும் வாழ செய்யும்.

 

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

 

அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து செய்கிற காரியங்கள் அனைத்துமே, அவர்களை போய் சேரும் என்று நம்பப்படுகிறது. ஆகவே, அமாவாசையன்று, முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்து ஆசியை பெறுங்கள்.

 

குலதெய்வ வழிபாடு அவசியம் :

 

இந்த நாளில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். எதிர்மறை எண்ணங்களை போக்கி மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.

 

காகத்திற்கு உணவிடுங்கள் :

 

காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.

 

தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக... என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

 

முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.

 

சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளைப் பூரணமாக பெறமுடியும்.

 

பலன்கள் :

 

பித்ரு சாபம் மற்றும் குலதெய்வ சாபங்களால் உங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

 

திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் நீடித்த தடை, தாமதங்கள் நீங்கும்.

 

உணவிற்கு கஷ்டப்படும் நிலை என்றென்றும் ஏற்படாமல் தடுக்கும். செல்வ நிலை உயரும்.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : முன்னோர்களின் ஆசியை பெற அமாவாசை வழிபாடு - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Amavasya worship to seek the blessings of ancestors - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்