வெண்ணிற ஆடை அம்பிகை

காந்திமதி சீர், தாமிரபரணித் தாய்க்குச் சிலை

[ ஆன்மீகம்: சிவன் ]

Ambigai in white dress - Statue of Gandhimati Seer, mother of Tamiraparani in Tamil

வெண்ணிற ஆடை அம்பிகை | Ambigai in white dress

காந்திமதிக்குத் தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில், அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள்.

வெண்ணிற ஆடை அம்பிகை

காந்திமதிக்குத் தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில், அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள். இறுதிக்காலத்தில் உலகம் அனைத்தும் அம்பிகையிடம், ஐக்கியமாவதை உணர்த்தும்விதமாக இவ்வாறு காட்சி தருவதாக ஐதீகம்.

 

காந்திமதி சீர்

பெண்கள். திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு. சீர் கொண்டு செல்வதுபோல, காந்திமதி அம்பிகையும் தனது திருக்கல்யாணத்தின் போது, சீர் கொண்டு செல்கிறாள். ஐப்பசி பிரம்மோற்ஸவத்தின் முதல் பத்து நாட்கள் அம்பாள், சிவனை மணக்க வேண்டித் தவமிருப்பாள்.

பத்தாம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள்வாள்.11ஆம் நாள் மகாவிஷ்ணு, தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று, அம்பிகையை மணம் செய்வார். அப்போது பக்தர்கள். மணமக்களுக்குத் திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

12ஆம் நாளிலிருந்து இருவரும், 3 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் காண்கின்றனர். 14ஆம் நாள் இரவில் சுவாமியும், அம்பாளும் மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என சீர் பலகாரங்கள் கொண்டு செல்கிறாள். இதனை, "காந்திமதி சீர்' என்பார்கள்.


நெல்லையப்பர் கோவிலைச் சார்ந்த கிராமங்கள், நிலங்கள்

நெல்லையப்பர் ஆலயத்திற்கு சுமார் 512 ஏக்கர் 49 செண்டு நன்செய் நிலங்களும், 2960 ஏக்கர் 81 செண்டு புன்செய் நிலங்களும் உள்ளன. திருநெல்வேலி கஸ்பா. தென்பத்து, பாட்டப்பத்து, கண்டியப்பேரி, அருகன் குளம், சேந்திமங்கலம், மேலப்பாளையம், பாளையங்கோட்டை. பாளையம், பல்லிக்கோட்டை, தென்கலம், அபிசேகப்பட்டி. மேகமுடையார்குளம், மணிமூர்தீஸ்வரம், பிரான்சேரி, தெய்வேந்திரபேரி, சேரன்மகாதேவி. சுப்பிரமணியபுரம், மாரமங்கலம், செட்டிக்குறிச்சி. திருப்பணி கரிசல் குளம், திருப்பணி நெடுங்குளம், திருப்பணி நல்லாண்டார் குளம்,

பூவாணி முதலிய கிராமங்களில் நிலங்களும், சுமார் 215 கடைகளும் மற்றும் காலி மனைகளும் உள்ளன. ஆலயத்தில் தங்கச் சப்பரம், தங்கப்பல்லக்கு முதலியவைகள் இருக்கின்றன.

 

தாமிரபரணித் தாய்க்குச் சிலை

இக்கோயிலில் நாயன்மார் சன்னதிக்கு அருகில் தாமிரபரணித்தாய், சிலை வடிவில் இருக்கிறாள். சித்ரா ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளைத் தாமிரபரணிக்கு. பவானியாக எடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர். தாமிரபரணியில் நீராட பாவம் நீங்கிப் புண்ணியம் கிடைக்கும் என்பார்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீகம்: சிவன் : வெண்ணிற ஆடை அம்பிகை - காந்திமதி சீர், தாமிரபரணித் தாய்க்குச் சிலை [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Ambigai in white dress - Statue of Gandhimati Seer, mother of Tamiraparani in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை








தொடர்புடைய தலைப்புகள்