அன்னம் பரிமாறும் அம்பிகை

தன்னில் நீராடும் தாமிரபரணி, மார்கழி பூஜை இல்லாத கோயில்

[ ஆன்மீகம்: சிவன் ]

Ambigai serving swan - Tamiraparani, which is bathed in itself, is a temple without Margazhi Puja in Tamil

அன்னம் பரிமாறும் அம்பிகை | Ambigai serving swan

இக்கோயிலில் காந்திமதி அம்பாள். கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம்.

அன்னம் பரிமாறும் அம்பிகை

இக்கோயிலில் காந்திமதி அம்பாள். கணவர் நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம்.

இதன் அடிப்படையில் அம்பாள் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு. சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களைச் சிவன் சன்னதிக்குக் கொண்டு செல்கின்றனர்.

அங்குள்ள அர்ச்சகர்கள் அவற்றைச் சிவனுக்குப் படைக்கின்றனர். இப்பூஜை முடிந்தபின், அம்பாளுக்கு அதே நைவேத்யம் படைத்துப் பூஜை நடக்கிறது.

 

தன்னில் நீராடும் தாமிரபரணி

இக்கோயிலில் நாயன்மார் சன்னதி அருகில் தாமிரபரணித் தாய், சிலை வடிவில் இருக்கிறாள். சித்ரா பவுர்ணமி, ஆவணி மூலம், தைப்பூசம் ஆகிய நாட்களில் இவளைத் தாமிரபரணிக்கு பவனியாக எடுத்துச் சென்று தீர்த்தமாடச் செய்வர். தாமிரபரணியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பார்கள்.

இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகத் தாமிரபரணியே, தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாகச் சொல்வதுண்டு. அம்பிகை சன்னதி முன்பாகக் கங்கை, யமுனை இருவரையும் துவாரபாலகிகளாகவும் காணலாம். கங்கையும், யமுனையும் தாமிரபரணி நகர் நாயகிக்குப் பாதுகாவல் செய்வதில் இருந்தே. காந்திமதியம்மையின் மகிமையும், தாமிரபரணி நதியின் பெருமையும் தெரிய வரும்.

 

மார்கழி பூஜை இல்லாத கோயில்

தை மாதத்தில் உத்ராயணம் துவங்குவதால், மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாகக் கருதப்படுகிறது. ஆகவே, கோயில்களில் மார்கழி அதிகாலையில் திருவனந்தல் பூஜை நடக்கும். ஆனால், இங்கு மார்கழி பூஜை கிடையாது.

அதற்குப்பதிலாக, கார்த்திகை மாதத்தில் அதிகாலை 4 மணிக்குக் கோயில் திறந்து, அனைத்து சுவாமிகளுக்கும் பூஜை நடக்கிறது. இந்த 30 நாட்களும் சுவாமி தங்கப்பல்லக்கி எழுந்தருளுகிறார். இங்குக் கந்தசஷ்டி ஐப்பசி அமாவாசையில் தொடங்கி பவுர்ணமி வரையில் 15 நாட்கள் நடக்கிறது. அப்போது ஆறுமுக நாயனாருக்கு லட்சார்ச்சனை செய்யப்படுகிறது.

 

மான் வாகன துர்க்கை

இங்குள்ள துர்க்கை தெற்கு நோக்கியபடி. சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் இருக்கிறாள். சிங்கமும், மானும் ஒரு சேர இருப்பதால், எதிரிகளையும் அன்பால் அடக்கும் சக்தியை அவள் தருகிறாள். அருகில் அவளது தோழி இருக்கிறாள். அம்பாள் சன்னதியில் பண்டாசுரவை வதம் செய்த அம்பாளின் சிலை உள்ளது. இவளை "மஞ்சன வடிவாம்பிகை' என்பர்.

இவளையும் துர்க்கையின் அம்சமாகக் கருதி வழிபடுகின்றனர்.

 

புதனின் மாறுபட்ட திசை

பொதுவாக, நவக்கிரக சன்னதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கியிருப்பார். இங்குள்ள புதனோ, வடக்கு நோக்கியிருக்கிறார். இது மிக அரிய கோலம். தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் புதனின் திசையில் மாற்றமில்லை.

 

முக்குறுணி விநாயகர்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகர் இருக்கிறார். அதுபோல, இங்குள்ள விநாயகரும் இதே திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.

ஆனால், வலது கையில் மோதகம். இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீகம்: சிவன் : அன்னம் பரிமாறும் அம்பிகை - தன்னில் நீராடும் தாமிரபரணி, மார்கழி பூஜை இல்லாத கோயில் [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Ambigai serving swan - Tamiraparani, which is bathed in itself, is a temple without Margazhi Puja in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை








தொடர்புடைய தலைப்புகள்