உலக்கை சத்தம் பிடிக்காத அம்மன்!

புல்லாணி அம்மன் கோவில்

[ அம்மன்: வரலாறு ]

Amman who does not like the sound of the plunger! - Bullani Amman Temple in Tamil

உலக்கை சத்தம் பிடிக்காத அம்மன்! | Amman who does not like the sound of the plunger!

ராமநாதபுரத்திலிருந்து தெற்கே திருப்புல்லாணி செல்லும் வழியில் தாதனேந்தல் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது புல்லாணி அம்மன் கோவில்!.

உலக்கை சத்தம் பிடிக்காத அம்மன்!


ராமநாதபுரத்திலிருந்து தெற்கே திருப்புல்லாணி செல்லும் வழியில் தாதனேந்தல் கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது புல்லாணி அம்மன் கோவில்!.

 

இந்த அம்மனுக்கு உரல், உலக்கை சப்தமும், தயிர் கடையும் ஓசையும் கேட்கக் கூடாது என்பது ஐதீகமாக உள்ளது. அதனால் ஊரின் எல்லையில் எழுந்தருளி இந்த அம்மன் அருள்பாலிக்கிறாள்.

 

இலங்கைக்குச் செல்லும் முன்பு, ராமபிரானும், அதற்கு முன்பே அவரது தந்தை தசரதச் சக்ரவர்த்தியும் இந்தப் பகுதிக்கு வந்ததாக தலபுராணம் கூறுகிறது!.

 

குழந்தை இல்லாதவர்கள், கஷ்டமான சூழ்நிலையில் உள்ளவர்கள் இந்த புல்லாணி அம்மனை வந்து வழிபட்டு, மஞ்சள் காப்பு அமுது வாங்கி தீர்த்தத்தில் கலந்து சாப்பிட்டால் நலம் பெறலாம் என்கிறார்கள்!

 

பில்லி சூன்யத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த புல்லாணி அம்மனை வந்து தரிசித்துச் செல்கிறார்கள். பேய் பிசாசுகளை விரட்டியடிக்கும் வல்லமை பெற்றவள் இந்த புல்லாணி அம்மன்!!.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

அம்மன்: வரலாறு : உலக்கை சத்தம் பிடிக்காத அம்மன்! - புல்லாணி அம்மன் கோவில் [ அம்மன் ] | Amman: History : Amman who does not like the sound of the plunger! - Bullani Amman Temple in Tamil [ Amman ]