ஒரு நாத்தீகனின் வாதம் எம்பெருமானுடன்

ஒரு இறைவன் அடியாரின் நிலை

[ ஆன்மீக குறிப்புகள் ]

An Atheist's Argument with an Emperor - The status of a Lord's servant in Tamil

ஒரு நாத்தீகனின் வாதம் எம்பெருமானுடன் | An Atheist's Argument with an Emperor

நெடுநாட்கள் ஒருவன் தீவிர நாத்திகனாக இருந்தான். யார் என்ன சொல்லியும், பரம்பொருள் என்ற சக்தி உண்டென்பதை ஏற்க மறுத்தான்.

ஒரு நாத்தீகனின் வாதம் எம்பெருமானுடன் 

 

நெடுநாட்கள் ஒருவன் தீவிர நாத்திகனாக இருந்தான். யார் என்ன சொல்லியும்பரம்பொருள் என்ற சக்தி உண்டென்பதை ஏற்க மறுத்தான். 

 

எப்போதும் கடவுள் பற்றிக் கிண்டல் செய்வதே  அவன் வழக்கமாயிற்று.

 

பூமி, மலை, கடல் போன்ற ப்ரஹ்மாண்ட  வஸ்துக்கள்  'பெரு வெடிப்புக் கோட்பாடு' (Big Bang Theory) என்னும் அண்டத்தின் வெடிப்பினால், இயற்கையாக ஏற்பட்டன என்றே திடமாக நம்பினான். இவற்றை உருவாக்கிடும் எவரும் யாரும் எங்குமில்லை என்பது அவன் நம்பிக்கை.

 

ஒரு நாள் யாரும் இல்லத்தில் இல்லாத போது, இரவில்  நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் கனவிலோ, நிஜத்திலோ பெரும் இடி, மின்னல், காற்று வீசுவதை உணர்ந்தான்.

 

அளவில்லாத வெள்ளம் ஒன்றில் அவன் சிறிது சிறிதாக முழுகுவது போலவும், அவனைக் காப்பாற்றிட யாருமற்று, பெரு வெள்ளத்தில் முழுவதும் மூழ்குவது போன்று பயம் ஏற்பட்டு,

 

'உங்களில் மிக மிக வலிமையாளர் யாராவது என்னை எப்படியாவது உடனே காப்பாற்றுங்கள்' என்று பிதற்ற ஆரம்பித்தான். தூக்கம் விழித்த உடன் எல்லாம் கனவென்று புரிந்தது.  அவனுக்குள் சிறிய மாற்றத்தை உணர்ந்தான்.

 

எந்த வலிமை மிக்கவனை நான் கனவில் அழைத்தேன் கண்டிப்பாக நம் எல்லோரையும் விட மிக மிக வலிமை மிகுந்தவன் ஒருவன் தான் இயற்கையை உண்டாக்கியிருக்க வேண்டும் என்று சிறிது சிறிதாக நம்பத் துவங்கினான்.

 

ஆனாலும் உடலில் ஊறிப்போன நாத்தீகம் இறைவன் பற்றிய பல கேள்விகளைக் கிளப்பத் துவங்கியது.

 

வேடிக்கையாக பெருமாளிடம் பேசுவதும் கேள்விகள் கேட்பதும் அவனுடைய புதிய வழக்கமானது.

 

'ஒய் பெருமாளே நீர் சர்வ வல்லவன், உன்னை விட சமர்த்தன் யாருமில்லை’ என்கிறார்கள். என்னுடைய சின்ன சந்தேகம் ஒன்றைத் தீர்த்து வையும்.

 

நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்ந்திடும் ஆல மரத்தின் காய்களைச் சிறிது சிறிதாக படைத்திருக்கிறீர்கள்.

 

ஆனால் பாரமே தாங்க முடியாத மெல்லிய கொடிகளில் பெரிய பெரிய பூசணிக்காயைப் படைத்துள்ளீர்கள். இரண்டு காய்களையும் இடம் மாற்றிப் படைப்பது தானே சமர்த்தம். நீர் எப்படி ஐயா சமர்த்தர் ஆக முடியும்?'

 

ஒரு நாள் இந்த முன்னாள் முழு நாத்தீகன், வழிப் பயணம் செல்லும் போதில், நடுப் பகலில் வெய்யில் தாங்காமல் ஒரு ஆல மரத்தின் கீழ் நிழலுக்காக படுத்து உறங்கினான். இவ்வளவு பெரிய ஆலமரத்தை எவன் படைத்தானோ அவனுக்கு நன்றி என்று சொல்லி ஆழ்ந்து தூங்க ஆரம்பித்தான். உறங்கி விழித்தவன் உடல் ஆடை எல்லாவற்றிலும் ஆலம் காய்கள் வீழ்ந்திருந்தன

 

அவனுக்குக் கண்ணீர் பெருகியது 'பெருமாளே உம்மை இப்போது நன்றாகக் புரிந்து கொண்டேன். ஒரு சமயம் ஆல மரத்தின் காய்கள் பூசணிக் காயின் அளவில் படைத்து இருந்தீர்கள் என்றால், இத்தனை நேரம் என்னுடைய தலை பொடிப் பொடியாயிருக்குமே. ஒரு விஷயம் தெளிவாகிறது. ஆல மரமானாலும், பூசணிக் கொடியானாலும் தாங்குவது பூமி அல்லவோ?  

 

கண்டிப்பாக உம்மை விட சமர்த்தரோ சக்தி மானோ எவரும் இல்லை. அடியேனின் மூடத் தனத்தை மன்னித்து அருளுங்கள்' என்று இறைஞ்சி நின்றான். .

 

அதற்குப் பின் அவன் நாத்தீகம் பேசுவதில்லை.

 

ஒரு இறைவன் அடியாரின் நிலை:

நான் கடவுளை மனதார நம்புகிறேன்! எனினும் எனக்கு துயரத்தின் மேல் துயரம் வருகிறது என்ன செய்ய?

எப்போது நமக்கு துயரம் தொடர்ந்து வருகிறதோ அப்போதே நாம் இறைவனின் பார்வைக்கு இலக்காகி இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

வாரியார் சுவாமிகளும் அதைத்தான் கூறினார்.

சோதனை அதிகமாக இருந்தால் சுகம் பெரிய அளவில் வரப் போகிறது என்று அர்த்தம்.

உண்மையான பக்தனை தான் இறைவன் சோதிக்கிறான்.

திருடர்களை அவர்கள் இஷ்டம் போல போகவிட்டு தண்டனைக்கு ஆளாக்குகிறான்.

 

பக்தர்களை பரமன் சோதித்து இறுதியில் சிறந்த அருள் வழங்கியதாக நமது புராணங்களில் உள்ளன.

முதலில் சோதனைகளாலே மனம் மரத்துப்போய் பக்குவம் பெற்று விடுகிறது.

பக்குவம் வந்தபின் கைக்கு வரும் எந்த லாபமும் தலைமுறைக்கு தொடர்ந்து வருகிறது.

வீண் ஆராவாரங்கள், ஆர்ப்பாட்டங்கள் அடிபட்டு போய் நிதானம் வந்து விடுவதால், பெரிய நன்மை வரும்போது ஆணவமோ அகந்தையோ வருவதில்லை உள்ளம் அதை அமைதியாக வரவேற்கிறது.

சோதனைகளின் பலனாக கிடைத்த அடக்கமும், பணிவும் அதிகமாகின்றன.

சோதிக்கப்பட்ட மனிதன் பிறகு பலருடைய மரியாதைக்கும் உரியவனாகிறான்.

 

நல்லவனை மிக நல்லவன் ஆக்குவதற்கு வேதனைகளையும் சோதனைகளையும் இறைவன் தொடர்ந்து வழங்குகிறான்.

 

வருகின்ற சோதனைகளை எல்லாம் தாங்கிப் பார்க்க வேண்டும்.

ராசி மாறும் போது ஜாதகத்தில் நல்ல நேரம் தோன்றும் போது அதன் பலன் தெரியும்.

 

" நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன்

கழலருமை வெவ்வினையில் காண்மின்"

என்றார்கள்.

 

விழுந்தவன் விழுந்து கொண்டே இருந்து வாழ்ந்தவன் வாழ்ந்து கொண்டே இருந்தால் இறைவனின் இயக்கம் சரிவர இயங்கவில்லை என்று பொருள்.

 

ஆனால் வீழ்ந்தவனுக்கு எழுச்சியையும் எழுந்தவனுக்கு வீழ்ச்சியையும் மாறி மாறி நான் காண்கிறேன்.

 

இந்த எழுச்சியும் வீழ்ச்சியும்தான் இறைவன் இயங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை குறிக்கின்றன.

 

பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதன் ஜாதகமும் இறைவனாலே கணிக்கப்படுகிறது.

 

வேறுவேறான பாதைகளும் வாதைகளும் இறைவனை நினைக்க வைக்கின்றன.

 

மனிதனை பிரக்ஞையோடு வைத்திருப்பதற்குத்தான் இறைவன் ஒவ்வொருவருடைய விதியையும் மாற்றி அமைக்கிறார்.

 

விதியும் பூர்வ ஜென்மமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக இருப்பதற்கு காரணமும் இதுதான்.

 

ஆகவே சிக்கல் வரும்போதெல்லாம் 'கண்ணா' என்றோ 'கந்தா' என்றோ ஒருமுறை அழைத்து அதைத் தாங்கிக் கொண்டு அமைதி அடைய வேண்டும்.

 

துன்பம் வரும்போது சிரி. அதற்கு அடுத்தார் போல வருவது துன்பமாக இருக்காது என்று வள்ளுவன் அறுதியிட்டு கூறினான்.

 

இந்து மதம் வேரூன்றி உள்ள இந்தியாவில் காலநிலையின் மாறுபாட்டு கணிதத்தை நாம் பார்க்கிறோம் அல்லவா?

 

கோடைக்கால வெயிலால் காய்ந்து போன ஏரிகள் மழையால் மறுபடியும் நிரம்பவில்லையா?

 

காலம் ஒரு நாள் மாறும்!

நம் கவலைகள் யாவும் தீரும்!

 

என் வாழ்க்கையிலேயே கூட பல நேரங்களில் துன்பம் தாங்காமல் தற்கொலையைப் பற்றி நான் சிந்தித்ததுண்டு.

 

அது நடக்காமல் போனதற்கு காரணம் என்னாலும் ஏதோ ஆகும் என்று இறைவன் எழுதியிருப்பதுதான்!

 

பலமுறை தற்கொலைக்கும் முயன்ற ராபர்ட் கிளைவ் இந்தியாவையே ஆளக்கூடியவனாக வந்து சேரவில்லையா?

 

பாழும் மனது சில நேரங்களில் சஞ்சலிக்கும்.

 

போதுமே இந்த கஷ்டம் என்று தோன்றும்.

 

போய் சேர்ந்து விடலாம் அவனிடம் என்று எண்ணும்.

 

குழம்பும்!

புலம்பும்!

தவிக்கும்!

தத்தளிக்கும்!

நன்மை கிடைத்தவுடன் வாழ்ந்து பார்க்கலாம் என்ற சபலம் வரும்.

அது அதிகமாகும் போது வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையும் வந்துவிடும்.

அந்த நம்பிக்கையிலேதான் சோதனைகளை தாங்கிக் கொள்ள வேண்டும்.

இறைவன் யாரையும் கைவிடமாட்டார்!

இது சத்தியம்!


ஆன்மீக பணியில்!

தமிழர் நலம்

நன்றி...🙏


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : ஒரு நாத்தீகனின் வாதம் எம்பெருமானுடன் - ஒரு இறைவன் அடியாரின் நிலை [ ஆன்மீகம் ] | Spiritual Notes : An Atheist's Argument with an Emperor - The status of a Lord's servant in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்