மனதை தைரிய படுத்தும் கட்டுரை .. இதை பொறுமையாய் படிங்க...

பெருமையாய் உணர்வீர்கள்..., ஈர்ப்பு விதி, சாதனை., காற்றுக்கு ஒரு கவிதை

[ தன்னம்பிக்கை ]

An encouraging article.. read this patiently... - You will feel proud..., Law of Attraction, Adventure., A Poem to the Wind in Tamil

மனதை தைரிய படுத்தும் கட்டுரை .. இதை பொறுமையாய் படிங்க... | An encouraging article.. read this patiently...

சில மனிதர்கள், உங்கள் வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்லத்தான் செய்வார்கள் ....! அதனாலேயே உங்கள் வாழ்க்கை முடிந்தது என்று சொல்லிவிட முடியாது .....!! உண்மையில், அப்படி போனவர்களின் பங்குதான் உங்கள் வாழ்க்கையில் முடிந்து போகிறது ...‌‌!!!

மனதை தைரிய படுத்தும் கட்டுரை .. இதை பொறுமையாய் படிங்க...

பெருமையாய் உணர்வீர்கள்...

சில மனிதர்கள்,  உங்கள் வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்லத்தான் செய்வார்கள் ....!

அதனாலேயே உங்கள் வாழ்க்கை முடிந்தது என்று சொல்லிவிட முடியாது .....!!

உண்மையில்,  அப்படி போனவர்களின் பங்குதான் உங்கள் வாழ்க்கையில் முடிந்து போகிறது ...‌‌!!!

Some people are going to Leave

you Anyway ....!

But it is not the End of your Story ....!!

In face , it is the end of their PART in your Story ....!!!

ஈர்ப்பு விதி

1. ஈர்ப்பு விதியால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து அனுபவங்களையும் நீங்கள்தான் படைக்கிறீர்கள், என்று தெரிந்தால் அதே ஈர்ப்பு விதியை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் சாதனைகளையும் விருப்பங்களையும் அனுபவங்களையும் நிச்சயமாக உங்களால் படைக்க முடியும்.

 

2. உங்கள் எண்ணங்கள் மூலம் உருவாகும் உணர்வுகளில் இருந்து வெளிப்படும் சக்தியே உங்கள் வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணமாகிறது.

 

3. உங்கள் எண்ணங்கள் எப்படி அனுபவமாக மாறுகிறது?

 

4. உங்கள் தேவையில்லாத எண்ணங்களை அனுபவமாக மாறாமல் எப்படி தடுப்பது?

 

5. நீங்கள் விரும்பும் மகிழ்ச்சிகரமான வெற்றிகரமாக வாழ்க்கையை எப்படி படைப்பது?

 

6. நாம் விரும்பும் ஆரோக்கியம் உறவுகள் பொருளாதாரம் மற்றும் எதுவானாலும் அதை அனுபவங்களாக படைப்பது அனைவருக்கும் சாத்தியமே.

முற்றிலும் புதிய வாழ்க்கையை உருவாக்க நீங்கள் தயாரா!

கொஞ்ச காலம் கொஞ்ச காலம் இந்த உலக வாழ்க்கையே  கொஞ்ச காலம்

வாழும் காலம் கொஞ்சம்

கடைசியில் குணமே மிஞ்சும்

மனிதம் போற்றுவோம்

மனிதம் வளர்ப்போம் 

மனிதனாய் வாழ்வோம்.

பழையன கழிந்து புதிய ஆண்டு மலரும் வேளையில்

 

கசப்புகள் களிப்பாக மாறிட வேண்டும்

 

வெறுப்புகள் மறைந்து விருப்புகள்  வளர்ந்திட வேண்டும்

 

தோல்விகள் நீங்கி வெற்றிகள் அணிந்திட வேண்டும்

 

பிணிகள் இல்லாது பணிகள் நிறைந்திடல் வேண்டும்

 

மகாலட்சுமியின் கடாட்சம் மனையில்  பெருகிட வேண்டும்

 

நீங்கள் நினைக்கும் செயல் யாவும் எளிதில் நிறைவேற வேண்டும்

 

அன்பு வளரட்டும்

ஆசைகள் நிறைவேறட்டும்

இன்பம் பெருகட்டும்

ஈகை வளரட்டும்

உறவு பெருகட்டும்

ஊர் மகிழட்டும்

எருது பெருகட்டும்

ஏர்த்தொழில் சிறக்கட்டும்

ஐயம் தெளியட்டும்

ஒற்றுமை பெருகட்டும்

ஓங்கு புகழ் வளரட்டும்

வெற்றி எனும் உயரத்தை அடைய ஏணியாக இருக்கும் ஆயுதம் தான் தன்னம்பிக்கை அதை எப்போதும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

கஷ்டங்கள் மட்டும் இல்லையெனில் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.

🌷

தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் தான் மாமனிதன்.

வாழ்க்கையில் முன்னேற குன்றாத உழைப்பு குறையாத முயற்சி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இம்மூன்றும் இருந்தால் போதும்.

🌷

வாழ்வில் ஜெயிக்க வேண்டுமெனில் தன்னம்பிக்கை அவசியம். மனித வாழ்வானது இன்பம் துன்பம் இரண்டும் இரண்டறக் கலந்தது.

தோல்விகள் பல அடையக்கூடும் அவமானங்களைச் சந்திக்க நேரிடலாம் கஷ்ட துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம் இவற்றையெல்லாம் எதிர்நீச்சல் போட்டு வெற்றி கொள்ள மகரயாழ் தன்னம்பிக்கை அவசியமாகும்.

வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டுமெனில் தன்னம்பிக்கை முக்கியமாகும்.

🌷

நல்லதே நடக்கும் என்று நம்புங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாய் வைத்திருக்கும்.

கொடுப்பவர்  எவரோ அவரே நன்றியுடன் இருக்க வேண்டும். அது தான் உண்மையான உதவி செய்தமைக்கு அடையாளம்..

ஒருவர் ஒரு பரிசை மற்றவர்களிடம் இருந்து பெறுகிறார் என்றால், அது கொடுப்பவரை உலகிற்கு அறிமுகம் செய்யும் செயலாகும்..

அந்தப் பொருளைப் பெறுபவர் அதைப் பெறுவதற்கு மறுத்து இருக்கலாம். அவர் அந்தப் பரிசை ஏற்றுக் கொள்வதன் வழியாக அவர் கொடுப்பவரை நன்றியுடன் ஏற்றுக் கொள்கிறார்.

கொடுப்பவர் எவரோ அவரே நன்றிக்கு உரியவனாக இருத்தல் வேண்டும்.இல்லையேல் அது உதவி செய்வது அல்ல, பேரம்.

ஜென் குரு டோஜோவின் மடாலயத்துக்கு ஒரு பணக்காரன் வந்து பத்தாயிரம் தங்க நாணயங்களை நன்கொடையாக அளித்தான்.

டோஜோ அந்த நன்கொடையை ஒன்றுமே சொல்லாமல் ஏற்றுக் கொண்டார்.

அந்தப் பணக்காரனோ கடுமையாகத் தொந்தரவுக்கு உள்ளானான். “நான் கொடுத்த நன்கொடை பத்து ஆயிரம் தங்க நாணயங்கள் தெரியுமா?” என்று ஆதங்கத்துடன் கேட்டான். டோஜோ தெரியுமென்று சொன்னார்.

“எனக்குக் கூட, பத்தாயிரம் தங்க நாணயங்கள் என்பது மிகவும் பெரிய தொகை தான். ஒரு நன்றியைத் தானே உங்களிடம் எதிர் பார்க்கிறேன். சொல்லக் கூடாதா?”

“நீயும் திரும்பத் திரும்பச் சொல்லி விட்டாய். நானும் கேட்டு விட்டேன். எனக்குக் காது கேட்கவில்லை என்று நினைத்தாயா? இல்லை, நான் உனக்கு நன்றியாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறாயா?” என்றார்.

“அதுபோதும்…அதுவே எதிர் பார்க்கப்படுகிறது” என்றார் பணக்காரர்.

“உனது தங்க நாணயங்களை நீ திரும்ப எடுத்துச் செல்லலாம். நீ உண்மையிலேயே ஆலயத்துக்குக் கொடையளிக்க விரும்பினால் நான் அந்த நன்கொடையை ஏற்றுக் கொண்டதற்கு நீ தான் நன்றியுடன் இருக்க வேண்டும்.” என்றார்

டோஜோ குருவாக இருந்த அந்த ஆலயத்தில் இன்னும் அவை வாக்கியங்களாக எழுதப்பட்டுள்ளன.

கொடுப்பதற்குப் பலனை எதிர்பார்ப்பவரோ கொடையை விட மதிப்பு மிக்க ஒன்றை எதிர்பார்க்கிறார்.

யாருக்கும் உதவி செய்து நன்றியை எதிர் பார்க்காதீர்கள்,

"நன்றி என்பது பயனடைந்தவர் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாத ஒன்று ஆகும்;

எதிர்பார்ப்பது சிறுமைக் குணமேயாகும்!

எலிகள் எந்த காலத்திலும் உணவு இன்றி செத்தது இல்லை. பூனைகளுக்கு மத்தியிலும் அவைகள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை போல பிரச்சினைகளைச் சமாளிக்கக் கற்று கொள்ள வேண்டும்...!

 

கடனாக இருந்தாலும் சரி.அன்பாக இருந்தாலும் சரி. திருப்பி செலுத்தினால் தான் மதிப்பு..!!

 

உண்மையான அன்பு கொண்டவர்கள். எப்பவுமே ஏமாளிதான்...!

 

கடவுளே வந்து கை கொடுத்தாலும், தன்னம்பிக்கை இல்லையென்றால் கரை சேர்வது கடினம் தான்...!

 

சில நேரங்களில் வளைந்து போகுதல் வீரமாம். மரம் வெட்டுபவனின் முதல் இலக்கு. நேராய் நிமிர்ந்து நிற்கும் மரங்களே...!

 

பலவீனம் தெரியும்படி எல்லோரிடமும் பேசாதீர். பலம் தெரிய வேண்டும் என்றால் யாரிடமும் அதிகம் பேசாதீர்...!!

 

இல்லாதவன் மட்டுமே நினைக்கிறான் இருந்தால் நல்லா இருக்கும் என்று...!!இருப்பவன் இருப்பதை நினைத்து ஆனந்த பட்டதே இல்லை...!!

 

உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்..!!அவர்களுக்கு விளையாட ஏதேனும் தேவைப்படும் போது உங்கள் ஞாபகம் வரலாம்...!!

 

கஷ்டங்களும் அனுபவமும் நம்மை சூழும் போது தான் வாழ்க்கை நமக்கு நல்ல பாடத்தையும் பாதையும்தெளிவாகக் காட்டும்...!!

 

மகிழ்ச்சி என்பது நீங்கள் யாராக இருந்தாலும் அல்லது நீங்கள் என்ன வைத்து இருக்கிறீர்கள் என்பதை பொறுத்தது அல்ல.அது நீங்கள் நினைப்பது பொறுத்தது.

 

வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. வாழ்வது உயிர்கள் மட்டும் அல்ல, வார்த்தைகளும் தான்.

 

தன் வலிமை தெரியாமல் உயரப்பறக்க நினைக்கும் பறவைகள் எல்லாம் வானில் உயரப்பறந்து விடுவதில்லை.

 

கழுகும் பறவை தான். குருவியும் பறவை தான்.அதனதன் வலிமை அதனதன் உயரம்.

 

தோல்வி என்பது இழிவு அல்ல. தோல்வி வந்து விடும் என்று அஞ்சி பின் வாங்குவது தான் இழிவு. தோல்வியை கண்டு அஞ்சாதீர்கள்.

 

அறிவு என்பது வெறும் விவரத் திரட்டு வாசிப்பின் வரம் அல்லது கணிப்பொறியின் இரவல்...!

 

இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால், இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது...!!

 

தினம் தவறாமல் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டே இருக்கும் உறவிடம் திடீரென எதையும் மறைத்துவிடவும் இயலாது. மறைக்க மனம் முன்வருவதும் கிடையாது....!!!

 

* உங்களின் தோல்வி எங்கே ஒளிந்து உள்ளது தெரியுமா..?பிரச்சனைகள் வரும் போது அல்ல. பிரச்சனைகளை கண்டு நீங்கள் பயந்து விலகும் போது...

🌷 நம் வாழ்கின்ற வாழ்க்கை அழகானது. அதை உங்களுக்குப் பிடித்த மாதிரி வாழுங்கள்🌷

 

🌷 மற்றவன் என்ன நினைப்பான் என வாழ நினைத்தால் உங்கள் சந்தோஷசம் உங்களை விட்டுப் போய் விடும்🌷

 

🌷 உங்கள் வாழ்க்கையை முதலில் காதலியுங்கள். உங்களுக்கு நீங்க தான் முதல் ரசிகன்🌷

 

🌷 எது உங்களுக்கு சந்தோஷசமோ அதைச் செய்யுங்கள்🌷

 

🌷 வாழ்க்கை ஒரு நெடுந்தூரப் பயணம் தான் ஆனால்🌷

 

🌷 எப்படி இருக்கும், எங்கே முடியும் என்று யாருக்கும் தெரியாது🌷

 

🌷 நாம் வாழும் நாட்களில் ஒவ்வொரு மணித்துளியையும், மகிழ்ச்சியானதாய் மாற்றுவோம்🌷

 

🌷 முடிந்த பயணம் யாருக்கும் தொடர்வதில்லை, இயற்கையின் நீதியிலே🌷

 

🌷 ஆயிரம் மைல் பயணம் கூட ஒரு அடியில் தான் தொடங்குகிறது🌷

 

🌷 ஆகையால் உங்கள் சந்தோஷம் உங்கள் கையில்  வாழ்க்கை வாழ்வதற்கே👍

 

குத்துவிளக்கு எவ்வளவு

பிரகாசமாக எரிந்தாலும்.....

 

அதனடியில் சற்று இருள்

இருக்கத்தான் செய்யும்....

சிலரின் வாழ்க்கையும்

இதைப் போலவே.....!!!!

 

அதிர்ஷ்டத்திற்காக

காத்திருப்பதும்....

சாவுக்காக காத்திருப்பதும்

ஒன்றே.....!!!!

 

நல்லதிற்கு மட்டுமே

தலையாட்டுபவர் நண்பர்....

சொல்வதற்கெல்லாம்

தலையாட்டுபவர் கள்வர்.....!!!!

 

உறுதியான தன்னம்பிக்கையானது மலை

போன்ற பிரச்சினைகளை....

நகர்த்தி, தெளிவான

பாதையை உருவாக்கி

தரக்கூடியது......

 

எனவே மனதில் பலகீனமான

எண்ணங்கள் வராமல்

கவனமாக இருங்கள்....!!!!!

 

ஒரு மனிதர் சுயமாக

சம்பாதிக்க ஆரம்பித்த

பின்னர் தான்....

அவர் வாழ்க்கை தொடங்குகிறது.....!!!!!

 

துயரங்களை நம் மனத்தினுள்

புகுத்தி வைத்தால்....

பல மடங்கு மிகுதியாகி

மனச்சோர்வும் மேலும் பல

துயரங்களும் ஏற்படும்.....

 

துயரங்களை மறந்து

மகிழ்ச்சியாக வாழப்

பழக வேண்டும்....!!!!

 

ஆண்கள் தனக்குக்

கிடைக்காததைப் பற்றி

சிறிதும் கவவைப்பட

மாட்டார்கள்....

 

ஆனால்....

தன் குடும்பத்திற்கு எதுவும்

கிடைக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக

மிகவும் கவலைப்படுவார்கள்........!!!!!

 

பாலைவனத்தில் மண்

எல்லாம் பொன் ஆனாலும்....

 

அங்கே...

நீருக்கும்  நிழலுக்கும்

தான் மதிப்பு அதிகம்....!!!!

 

சிறு புன்னகையுடன்

நல்லா இருக்கேன்

என்பதோடு

நகர்ந்து விடுங்கள்.....

 

யாருக்கும் உங்கள்

கதை கேட்க நேரம்

இல்லை இந்த

இயந்திர உலகில்....!!!!

 

கஷ்டமும்.....

வாஷிங் மெசினும்

ஒன்னு.....

 

கசக்கும், துவைக்கும்

பிழியும், நல்லா வெளுக்கும்

காய வைக்கும்....

 

கடைசியில் தான்..

பளிச்சின்னு

காட்டும்.....

 

ஆனால்....

நாமதான் அதுக்குள்ள

தொங்கிப்போறோம்....!!!!

 

பெருமளவில் கற்பனையை விதைப்பவர்கள்.....

 

பெரும்பாலும். கஷ்டத்தையே அறுவடை

செய்கிறார்கள்....!!!!

நிலைக் கண்ணாடியில் இருக்கும் தூசு, எப்படி நம் முகத்திற்கு சொந்தம் இல்லையோ,

அதைப் போலவே

நம்மைப் பற்றிய மற்றவர்களின் எண்ணமும், சிந்தனையும், நமக்கு சொந்தம் இல்லை...!

சாதனை.

*உண்மை

தனியாகச் செல்லும்.

பொய்க்குத்தான் துணை வேண்டும்*

 

*வாழ்வதும்

வாழவிடுவதும்

நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக் கொள்வோம்.*

 

*தன்னை ஒருவராலும்

ஏமாற்ற முடியாது

எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்*

 

*உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்

தம் பங்கை நடிக்கிறார்கள்*

 

*செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .

அப்போது தான் முன்னேற முடியும்*

 

*அன்பையும்

ஆற்றலையும்

இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்*

 

*வெற்றி பெற்றபின்

தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்

வென்ற மனிதனாவான்*

 

*தோல்வி ஏற்படுவது

அடுத்த செயலைக்

கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.*

 

*பிறர் நம்மைச்

சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல்,

நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.*

 

*கடினமான செயலின்

சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்*

 

ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

 

*சரியானது எது என்று

தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.*

 

*ஒரு துளி பேனா மை

பத்து இலட்சம் பேரைச்

சிந்திக்க வைக்கிறது.*

 

அதே மாதிரி இந்த தமிழர் நலம் பல கோடி பேருக்கு நல்லதொரு உத்வேகத்தை கொடுக்கட்டும்..

நன்றி

 

வெற்றிக்கான நிரந்தர வழி தோல்வி அடைந்தப் பிறகும், இன்னும் ஒரு முறை முயற்சி செய்வதே.

 

தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அதுதான் உண்மையான தோல்வி.

 

உங்களை வெல்லும் தகுதி தோல்விக்கே இருக்கும் போது. தோல்வியை வெல்லும் தகுதி உங்களுக்கு இல்லாமலா போய் விடும்.

 

காலத்தின் மீது பழி போடாமல் உங்கள் முயற்சியைக் கை விடாமல் தொடருங்கள்.

 

விளக்கால் வெளிச்சத்தைத் தான் காட்ட முடியும். பாதையில் நாம் தான் பார்த்துப் போக வேண்டும்.

தோற்க

 தயங்காதவன் ..

 

 வெற்றியை

 அனுபவிக்காமல்

 ஓய்வதில்லை !

🌸 ஓடுகின்ற கப்பலின் நிலைகளை மாற்றுவது

கடலின் அலைகளே🍂

 

🌸 அடுக்குகின்ற மாடிகளின் நிலைகள்

அதன் அஸ்திவாரத்தைப் பொறுத்தே🍂

 

🌸 எந்த விஷயத்திலும் அஸ்திவாரம் உறுதியாக இருந்தால் மட்டுமே🍂

 

🌸 அடுத்து ஒரு ஒரு செயல் திட்டமும் உறுதி அளிக்கும்🍂

 

🌸 அஸ்திவாரம் என்பது உன் நம்பிக்கை விடா முயற்ச்சி🍂

 

🌸 சில வேளைகளில் உன் அஸ்திவாரத்தையே அசைத்து பார்க்கும் சோதனைகளும் வேதனைகளும் வரலாம்🍂

 

🌸 எந்த சூழலிலும் நம்பிக்கையை இழக்காதே🍂

 

🌸 எதிர் வரும் சோதனையை கண்டு ஒளிந்து விடாதே🍂

 

🌸 நேருக்கு நேராக எதிர்கொள்🍂

 

🌸 ஒரு நேரம் புயலாக தோன்றும் பிரச்சனைகளும் பனி துளியாக மாறி விடுவதை உன்னால் உணர முடியும்🍂

காற்றுக்கு ஒரு கவிதை

ஏய்....!! காற்றே நில்

கொஞ்சம் சொல்...

 

உன் பிறப்பிடம் எது?

இருப்பிடம் எது ?

ஏன் இப்படி

ஓயாமல் இப்படி

சுற்றிக் கொண்டே

இருக்கிறாய் ...?

 

எத்தனை நாள்

விடுமுறை விட்டாலும்

பற்றாமல் சலிக்காமல்

சுற்றி திறியும்

பள்ளிக்கூட

மாணவர்களைப் போல்

அலைந்து கொண்டிருக்கிறாய்....

 

உன் குறும்புத்தனத்திற்கு

ஒரு அளவே இல்லாமல்

போய்விட்டது.....

 

பூத்திருக்கும்

பூக்களை எல்லாம்

பறித்துப் போடுகிறாய்....., விரிந்திருக்கும்

வாழை இலைகளை எல்லாம்

 உண்பதற்கு உதவாமல்

கிழித்து போடுகிறாய்.....

 

மூடி இருக்கும்

கதவுகளை எல்லாம்

தட்டி விட்டு ஓடி விடுகிறாய்....

திறந்திருக்கும்

ஜன்னல்களை

திடீரென்று படார் படார் என்று

சாத்தி அடித்து

பயத்தை ஏற்படுத்துகிறாய்.....

 

காலிபாத்திரங்களை

உருட்டுகிறாய்....

இலலை

இடம் மாற்றி வைக்கிறாய்...

 

நறுமணத்தைக்

கொண்டு வருவது சரி....

நாற்றத்தையும்

சில சமயங்களில்

கொண்டு வருகிறாயே

உன் குறும்புக்கு

அளவே இல்லையா...?

 

உன்னை

பிடிக்கவும் முடியாது

அடிக்கவும் முடியாது

என்கின்ற தைரியத்தினாலோ...?

 

திடீரென்று ஓடி

எங்கேயாவது

ஒளிந்து கொண்டு

வேர்க்க  வைத்து

வேடிக்கை பார்க்கிறாய்......

 

இல்லையென்றால்

எங்காவது

ஒளிந்திருந்து

திடீரென்று  ஓடிவந்து

அகல் விளக்கை

அணைத்துவிட்டு

எங்களை

தர்ம சங்கடத்திற்கு

உள்ளாக்குகிறாய்.......

 

உன் பெற்றோர்

யார் என்று தெரிந்தால்

அவர்களிடமாவது

உன்னை பற்றி சொல்லி

மிரட்டி வைக்க சொல்வேன்

அதுவும தெரியவில்லை.....

 

பள்ளிக்கூடம்  போகாத

பிள்ளையாக

இப்படி ஊர் சுற்றிக்

கொண்டிருக்கிறாய்....

ஒருவேளை

பள்ளியில்

ஒரே இடத்தில்

உட்கார்ந்து கற்பதை விட

நான்கு இடத்திற்குச் சென்று

கண்டு தொட்டு

கேட்டு  நுகர்ந்து

தெரிந்து கொள்வது

சிறந்த கல்வியாக இருக்கும் என்று

விட்டுவிட்டார்களோ

என்னவோ உன் பெற்றோர்.....?

 

குறும்பு

இருக்கும் இடத்தில் தான்

குணம் இருக்கும் என்று

சொல்வார்கள்

அதை உன்னிடம் தான்

தெரிந்து கொண்டேன்.....

 

மரங்களை ஆட்டி

குழந்தைகளுக்கு

பழங்கள் பறித்துப்போடுகிறாய்,.....

வீதியில் இருக்கும்

குப்பைகளையெல்லாம்

கூட்டு பெருக்கி

ஒரு ஓரமாக தள்ளுகிறாய்.....

 

வண்டிச்சக்கரங்களின் டியூப்புக்களில்

உன்னை

சிறைப்படுத்திக் கொண்டு

வண்டி எளியதாக இயங்க

உதவி செய்கிறாய்....

 

மின்சாரம் தடைப்படும் போது

புழுக்கம் தாளாமல்

வெளியே வருவோருக்கு

விசிறிவிடுவார்.......

 

ஜாதி மதம்

உயர்வு தாழ்வு

மொழி இனம் என்று

வேறுபாடு பார்க்காமல்

இவ்வுலகில் உள்ள

புழு பூச்சிகள் முதல்

மனிதன் திமிங்களம்

வரையிலான

உயிரினங்கள் வாழ்வதற்கு

ஆக்சிஜன் வழங்கி

உதவி செய்கிறாய்..

 

இப்படிப்பட்ட

உயரிய மனதை

நீ எப்படி தான் பெற்றாயே?

எனக்கும் சொல்வாயோ?

 

உன்னை

உலக அதிசயங்களில்

ஒன்றாக ஒப்பிட மாட்டேன்

ஏனென்றால் ?

உலக அதிசயங்களே

வியந்து பார்ப்பது

உன்னைத்தான்.......!!

சுருங்கக் சொன்னால் நீ இல்லாமால் நான் இல்ல.. இல்லை..அப்படி சொலவதை விட நீ இல்லாமல் எவரும் இல்லை...

நீ இலவசமாக கிடைக்கிறாய் என்று உன் மதிப்பு தெரியவில்லை சிலருக்கு என்று

தவற்றை உணர்த்தவே  வெண்டிலேடரில் இருக்கும் போது உணர்த்த செய்கிறாய்..

அனைவரின் முடிவும் உன் கைகளில்...

ஒரு செயலை செய்யும்போது வெற்றி அடைய எது முதலில் செய்யவேண்டும், எப்படி என்று ஒரு குருவிடம் ஒருவன் கேட்கும்போது அவர் தண்ணீரில் அவனை மூழ்கி முக்கும் போது இப்போ எது உனக்கு தேவை என்று கேட்டார்..அவன் அப்போ சொன்னான் பாருங்க ...அது தான் முயற்சியின் உச்சம்..ஆம் காற்றே நீ தான் தேவை..மூச்சு காற்றில் தான் மனிதன் உயிர் இருக்கிறது...அப்போது நமக்கு தெரியும் முயற்சி எப்படி இருக்க வேண்டும் என்று..

ஆம் நண்பர்களே நம் முயற்சியும், முன்னுரிமையும் இப்படி இருந்தால் வெற்றி கனி பறிக்காமல் எவர் இருப்பர்..நன்றி காற்றே!!!

 

எங்கள் மூச்சி இருக்கும் வரை நன்றி சொல்வோம் காற்றே...

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

தன்னம்பிக்கை : மனதை தைரிய படுத்தும் கட்டுரை .. இதை பொறுமையாய் படிங்க... - பெருமையாய் உணர்வீர்கள்..., ஈர்ப்பு விதி, சாதனை., காற்றுக்கு ஒரு கவிதை [ ] | self confidence : An encouraging article.. read this patiently... - You will feel proud..., Law of Attraction, Adventure., A Poem to the Wind in Tamil [ ]