கண்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம்

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

An overview of the eyes - Medicine Tips in Tamil

கண்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம் | An overview of the eyes

உங்கள் கண்கள் தான் இந்த உலகை பார்ப்பதற்கு உதவும் உலகின் ஜன்னல்கள். நம் மகிழ்ச்சியை உருவாக்கும் இயற்கை காட்சிகள், அற்புத நிகழ்ச்சிகள், மிகவும் அழகான மனிதர்கள், உலகில் உள்ள அழகான அனைத்தையும் பார்க்கும் தெளிவான பார்வைகள் கொண்டவை தான் இந்த அழகான, அற்புதமான நிகரில்லா இரு கண்கள்.

கண்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம்

 

உங்கள் கண்கள் தான் இந்த உலகை பார்ப்பதற்கு உதவும் உலகின் ஜன்னல்கள். நம் மகிழ்ச்சியை உருவாக்கும் இயற்கை காட்சிகள், அற்புத நிகழ்ச்சிகள், மிகவும் அழகான மனிதர்கள், உலகில் உள்ள அழகான அனைத்தையும் பார்க்கும் தெளிவான பார்வைகள் கொண்டவை தான் இந்த அழகான, அற்புதமான நிகரில்லா இரு கண்கள். அந்தக் கண்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டால், அது உங்களுடைய உடம்புக்குக் கடுமையான தொந்தரவுகளை ஏற்படுத்தக் தயாராக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல்படுவதற்கு இந்த கண்களின் பார்வை நமக்கு முக்கியம் அல்லவா? உங்கள் கண்களில் ஒரு பிரச்சனைகள்  ஆரம்பித்தால் நிரந்தர அல்லது சரியான, முறையான  பராமரிப்பு செய்யாததால் கண்கள் ஏதேனும் பாதிக்கப் பட்டுள்ளதா என அடிக்கடி நீங்கள் அவசியம், கண்டிப்பாக கண் மருத்துவருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதே இந்த கட்டுரையின் மையக் கருத்து. மேலும் கண்களின் முக்கியத்துவம், நோய்கள், விழிப்புணர்வு போன்ற பலவற்றை தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து கட்டுரையை படியுங்கள்

 

கண்களின் அமைப்பு

கார்னியா என்பது நம் கண்களின் கருவிழியின் வெளிப்புறத்தில் உள்ள மேரபரப்பை தான் சொல்லுவோம். கான்ஜுன்டிவா என்பது கண்களில் இமைகளின் உட்புறத்தையும், கண்களில் உள்ள வெளிப்புறத்தின் வெள்ளைப் பகுதிகளை குறிக்கும் மென்மையான ஈரப்பகுதியைக் குறிக்கும்.

 

கண் புரை:

கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் கண் சம்பம்ந்த பட்ட நோய்கள் வர அதிக வாய்ப்புகள் உள்ளது. பொதுவாக சம்மர் என்றாலே குழந்தைகளுக்கு பம்பர் பரிசு அடித்த மாதிரி தான். ஏன்னு கேக்குறீர்களா? பள்ளி விடுமுறை அல்லவா? பள்ளிகளுக்கு அந்த நேரத்தில் விடுமுறை கொடுப்பதற்கு காரணமே வெயில் அதிகமா இருக்கும் என்பதற்காகவே. கூடவே வெப்பத்தினால் பாதிக்கும் நோய்கள் என்பது அதிகம். ஆதலால் குழந்தைகள் பாதிக்கப்படகூடாது என்பதால் விடுமுறை கொடுக்கப்படுகிறது. வெப்பம் கண்களை மட்டும் விட்டு விடுமா என்ன? வெப்பத்தினால் கண்களில் பூக்களில் இருக்கும் மகரந்தப்பூ போல கண்ணை தாக்கும் இதை pollen என்று சொல்வார்கள். அதேமாதிரி அலர்ஜி, தூசு படுதலினால் வரும் கண் அரிப்பு, அதிக சூட்டினாலும் கண்கள் சிவக்கும். சமயத்தில் கண்களில் வேனக்கட்டிகள் என்று சொல்வார்களே அதுவும் வர வாய்ப்பு அதிகம். கண் நோய் என்பது எளிதில் மற்றவருக்கு தொற்றக்கூடியது. இதை conjunctivitis என்று சொல்வார்கள். இவர்கள் ஆற்றிலோ, நீச்சல் குளத்திலோ குளித்தால் அவர்கள் அருகில் இருப்பர்களுக்கும் தண்ணீரின் மூலம் பரவ வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி சூரியக் கதிர்கள் ஆனது அதாவது அது வெளியிடும் ultraviolet கதிர்களின் பாதிப்பு பற்றி கேட்கவே வேண்டாம். UV கதிர்கள் கண்களில் சதை போன்று வரக் காரணமே இந்தக் கதிர்கள் தான். நாம் இப்போது கணினி உலகத்தில் இருக்கிறோம். கண்களை இமைப் பொழுதும் அசைக்காமல் அப்படியே கண்களுக்கு அழுத்தம் கொடுத்து இடைவெளி இல்லாமல் பார்த்து வருபவர்கள் உலகில் அதிகம். அதனால் கண்கள் உலர்ந்து, அதுவும் வெப்பக் காலங்களில் கேட்கவே வேண்டாம் அதன் தாக்கத்தை. கண்களிலும் அது தாக்கத்தை சரமாரியாக அள்ளித் தெளிக்கும். கம்ப்யூட்டர் பார்க்கும் நபர்கள் அடிக்கடி இரவு நேரங்களில் லூப்ரிகேசன் இரண்டு சொட்டு போட்டு வருதல் உத்தமம். கண்களில் சற்று ஈரத் தன்மை வருவதற்கு வழி வகுக்கும். வலி கண்களுக்கு வராமல் கண்களை பாதுக்காக்கும். மேலும் கதிர்கள் பாதிக்கா வண்ணம் கண்ணாடிகள் அணிவது சாலச் சிறந்தது. கண்களில் உள்ள நரம்புகள் சேதம் அடைந்தால் கண் அழுத்த நோய் வர அதிகம் வாய்ப்பு இருக்கு. இது சிலருக்கு, சிறிது காலத்திலும் சிலருக்கு பல வருடங்களும் இருக்கும். நாள் பட்டு இருக்கும் நபர்களுக்கு பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு நாளடைவில் கண்கள் பார்வை இன்மையை அடைவதற்கும் வாய்ப்பு அதிகம். ஆரம்பத்திலேயே சரி செய்து நீக்குதலே சரியான வழி. இல்லையேல் வலி தான். பதுங்கி பார்க்கும் திருடன் என்று இந்த கண் அழுத்த நோய்க்கு மறுபெயர் உண்டு. மறு பெயரிலே தெரிகிறதா? இவன் நம் கண்களேயே மாற்றி நமக்கு குருடன் என்ற பெயரை தந்து விடுவான். முதலில் கண்களில் கவனம் வேண்டும். அதுவும் இந்த கண்கள் அழுத்த நோயில் ஆகச்சிறந்த கவனம் வைத்தல் மிகவும் நல்லது. அதனால் தான் அழுத்தமாகப் பதிவு செய்கிறேன். இன்னும் இந்த நோயானது முற்றிய பொழுது தான் கவனிக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள். எதுவாயினும் நாம் தான் நமக்குப் பாதுக்காப்பு. அப்படி செய்தால் நமக்கில்லை பாதிப்பு. அவ்வளவு தான். அநேக நாடுகளில் இதுவே முக்கியக் காரணமாக சொல்லப் படுகிறது. இந்த நோய் அம்பதுக்குள் குறைந்தப்பட்சமும் என்பதுக்கு மேல் அதிகம் பட்சமும் மனிதர்களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒளிக்கதிர் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து விடலாம் ஆரம்பத்துலேயே முன் எச்சரிக்கையாக நாம் சிகிச்சை செய்தால் பிரச்சனை இல்லை இல்லையேல் நோய் முன்னேறி நம் முன்னேற்றத்தை தடுத்துவிடும். அதற்க்கு முன்னே நாம் வராமல் தடுப்பதே நம் கண் ஆரோக்யத்திற்கு நல்லது. கண்களில் infection அதாவது தொற்று ஏற்பட்டால் ஒன்று ஒரு கண் அல்லது இரண்டு கண்களிலும் அறிகுறிகள் தென்படுவதுண்டு. கண்களில் வலி ஏற்பட்டு கண்ணானது உருத்திக்கொண்டே இருக்கும். கண்கள் எரியும், இமைகளுக்கு அடியில் வலி கொடுக்கும் கட்டிகள் தோன்றும். கண்ணீர் தானாகவே வரும். காலையில் எழுகின்ற பொழுது பூலையானது கண்ணின் இமையில் காணப்படும். பூஞ்சை தொற்று நோய் அதாவது பூஞ்சைகளில் இருந்து வருகிறது. இது பெரும்பாலும் கண்கள் காயப்படும் பொழுது, காயத்திற்கு பின்னே வரும் நோயாகும். சுத்தம் செய்யப்படாத துணிகளோ, பொருள்களோ பயன்படுத்தும் பொழுது இந்த பூஞ்சை தொற்று நோய் தொற்றி விடுகிறது.

 

கண்கள் பார்வையை பாதுகாக்கும் வழிமுறைகள்

கண்கள் மூலம் தான் நாம் நம்மால் வெளியுலகத்தை பார்க்க முடிகிறது. இல்லையேல் நம்முடைய நிலைமை எப்படி இருக்கும் என்பதை கண்கள் இல்லாதவர்களிடம் கேட்டால் தான் தெரியும். கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு நடந்து பாருங்கள். ரொம்ப தூரம் இல்லை 10 அடி எடுத்துப் பாருங்கள். முட்டி மோதி கை கால்கள் பேந்து போய் இருக்கும். இன்றைய காலங்களில் சிறு வயதிலே தற்கால தலைமுறையினர்கள் அனேக நபர்கள் மொபைல் மற்றும் உணவு முறைகள், கணினி பயன்படுத்துதல் இன்னும் எதோதோ காரணத்தினால் பார்வை குறைபாடுகள் இருக்கிறது. அதனால் கண்களுக்கு கண்ணாடி அணிந்து தற்காலங்களில் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். அதுவே வாழ்க்கை முறையாகி போய் கொண்டு இருக்கிறது. என்ன ஒரு கொடுமை. குழந்தைகளும் அந்த கண்ணாடியை பாதுகாக்கவே கஷ்டப்படுகிறார்கள். பெரியவர்களோ கண் பார்வைகள் தெளிவடைய கண்களை அறுவை சிகிச்சைகள் செய்து கஷ்டப்படுகின்றார்கள். சிலர் ஒரு கண்ணை முதலில் பண்ணிவிட்டு மறு கண்களை வேதனையின் காரணமாக பண்ணாமல் கூட இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க முடிகிறது அல்லவா? உண்மையில் அது கொடுமை தான். இதற்க்கு காரணமே நாம் பார்வைகளில் ஏதாவது சிக்கல் வரும் போது மட்டும் தான், நாம் நம் கண்களைப் பற்றி அக்கறை கொள்கிறோம். அது வரும் முன்னே தடுத்தால் எப்படி இருக்கும் அதற்க்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் நல்லது. நாம் கண்களை அடிக்கடி இமைக்க வேண்டும். கண் இமைத்தல் இல்லையேல், உதாரணமாக கணினி பார்ப்பவர்கள் பெரும்பாலும் கண்களை தொடர்ந்து இமைப்பது இல்லை. அவர்களது வேலை பளுவோ அல்லது வேறு சில காரணத்திலோ கண்களுக்கு அழுத்தம் கொடுத்து கண்களை கஷ்டப் படுத்துகிறார்கள். பின்னே கண்கள் நம்மை கஷ்டப் படுத்த ஆரம்பிக்கிறது. அதன் வலி அனுபவிப்பருக்கே தெரியும். நாம் அதை சரி செய்ய அடிக்கடி சீரான முறையில் கண்களை இமைத்து வந்தாலே கண்களில் கொஞ்சம் வலி இருக்காது. நல்ல புத்துணர்ச்சி கூடவே ஏற்படும். அடிக்கடி நல்ல இயற்கை காட்சிகளை, மலரும் பூக்களை, குழந்தையின் சிரிப்புகளை, உங்களுக்கு பிடித்த பொருள்களை கூட பார்த்து பழகி வர இந்த கண் இமைத்தல் பழக்க வழக்கமாகி  விடும் பாருங்கள். மேலும் கண்களில் கூடுதல் அழுத்தமோ, எரிச்சலோ உங்கள் கண்கள் உணர்ந்தால், உடனே நல்ல நீரை கொண்டு ஒரு மூன்று அல்லது நான்கு முறை குறைந்தப் பட்சம் கண்களில் ஊற்றி கண்களை கழுவி கொண்டே வாருங்கள். இதையும் பழக்கமாக்கி வரவும். அப்புறம் அடிக்கடி ஒரு ஐந்து நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வளித்து கொண்டே இருங்கள். அப்புறம் பாருங்கள் கண்களுக்கு எப்போதும் புத்துணர்வை உணர்வீர்கள்.

வழக்கமாக உடற் பயிற்சிகளின் அரசன் என்று சொல்வோமே இந்த அதிகாலை நடைப்பயிற்சி இதை தினமும் 30 நிமிடங்கள் நடந்து பழகுங்கள். மேலும் அதிகாலையில் சூரிய ஒளியின் கதிர்கள் கண்களுக்கு மிகவும் நல்லது, புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல்  இது கண்களை அழுத்தமின்றி, எளிமையாக இருக்கிற உணர்வுகளை உணர்வதற்கு உறு துணையாக இருக்கிறது.

கண்களை வைத்து தான் நமக்கு வேலைகள் என்று ஆகிவிட்டது என்று நினைத்தால் நீங்கள் உடனே இந்த பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுங்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும், நடுவே ஒரு சின்ன ஓய்வு கொடுங்கள். உங்களுடைய உள்ளங்கையால், அடிக்கடி இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு சிறிது நேரம் உக்கார்ந்து கண்களுக்கு ஓய்வு கொடுத்துப் பாருங்கள். அதே நேரத்தில் வெயில்லில் அலைந்து வந்து உடனே கண்களை கழுவாதீர்கள். சற்று சூழ்நிலையின் வெப்பநிலை உங்களுக்கு சாதகமாக ஆனப் பிறகு கழுவுங்கள்.

ரொம்ப தூரத்தில் இருக்கின்ற பொருட்களைப் பார்க்கிறேன் என்று கண்களுக்கு அதிகம் அழுத்தம் கொடுத்து, அதிகமான நேரங்கள்  அதையே உற்றுப் பார்த்து கண்களை வலிக்கு வழி வகுக்காதீர்கள். கண்களுக்குத் அப்பப்ப சுருக்கி மூடி அதாவது கண்கள் சிமிட்டி பழகி வாருங்கள். வயிறு சேட்டை பண்ணுவதை கண்களிலே சொல்லி விடுவார்கள். கல்லீரலில் பாதிப்பு கூட கண்களில் மஞ்சள் நிறத்தை கொடுத்து நோயின் அறிகுறியை நமக்கு காட்டும்.

காய்கறிகள், கேரட் அதிகம் சேர்த்து வாருங்கள். பாதிப்புகள் குறைய வாய்ப்பு உண்டு. கண்களின் பார்வைகள் தெளிவாகும்.

நீங்கள் 20/20/20 விதிகளை பற்றித் தெரியும் என்று நினைக்குறேன். அதாவது, ஒரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறையாவது, 20 அடிகள் தூரத்தில் உள்ள ஏதாவது பொருள்கள் ஒன்றை, குறைந்தப்பட்சம் 20 நொடிகளாவது பார்த்து பழகி வர வேண்டும். இது கண்களுக்கு ஒரு நல்ல பயிற்சி ஆகும்.

 

கண் சிவத்தல் காரணம்

உடலில் ஒவ்வாமையால் கண்களில் நமைச்சல், கண்கள் சிவப்பாக இருப்பது. கண்களில் நீர் வருதல் ஆகிய மாற்றங்கள் கண்களில் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட ஒவ்வாமை என்பது அழகு சாதன பொருட்களை கண்களில் பூசுவதினால் கூட வரலாம். ஆகவே சரியான, முறையான தரமான பொருள்களை பயன்படுதுவதில் முன் எச்சரிக்கையாய் இருங்கள். கண்கள் சிவப்பாய் இருக்கும் போது வெது வெது நீரில் கனமான பருத்தி துணியை நன்கு நனைத்து கண்களை சுற்றி மெதுவாக லேசான சூடில் வைத்து ஒத்தடம் கொடுத்து வாருங்கள். அப்படி கொடுக்கும் போது கண்களில் இரத்த ஓட்டமானது அதிகரிக்க வைக்கும். இது கண்களின் இமைப் பகுதிகளில் எண்ணெய் பசைத் தன்மை ஏற்பட செய்து கண்களின் உயவு தன்மையானது கூடுதலாகிறது. சாதரணமாகவே இந்த ஒவ்வாமை இருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல், மூக்கில் நமனமச்சல், தும்மல், கண்களில் எரிச்சல் போன்றவை வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. கண்களில் உள்ள வெள்ளை பகுதிகளில் சிவப்பு நிறம் வருவது  இதன் காரணமாக தான் இருக்கும். இது உடலில் ஏற்படக்கூடிய மாற்றத்தின் நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். அதிகமாக மதுப்பானங்கள் அருந்தினாலும்  ரத்த அழுத்தம் உண்டாகி, கண்களைச் சுற்றியுள்ள மிக நுண்ணிய ரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகரிக்க மற்றும் கண்கள் சிவப்பதர்க்கும் வாய்ப்பு அதிகம். புகைப் பிடித்தாலும் இதே காரணம் தான். நீச்சல் குளத்தில் கிருமிகளுக்காக கலக்கப்படுகிற குளோரின் கண்களில் இருக்கும் நல்ல பாக்டீரியக்களை அழிக்கிறது. இதனால் தான் நீண்ட நேரம் நீச்சல் அடிக்கும் போது கண்கள் சிவப்பாகி கண்கள் வறட்சியை, எரிச்சலை ஏற்படுத்துகிறது.

 

கண்கள் வறட்சி:

கண்களில் ஈரப்பதம் இல்லை என்றால் கண் வறட்சி ஆவது இயற்கை. உங்கள் அருகாமையில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசித்து அவர் தரும் கண் சொட்டு மருந்தை விடுவதால் கண்கள் வீக்கம் குறைந்து, வறட்சியும் சரியாகி விடும். ஓவியம் வரைதல், மொபைல் சரி செய்தல், கடிகார வேலைகள், எம்பிராய்டரி மற்றும் இது போன்ற நுட்பமான வேலை செய்பவர்களுக்கு அஸ்தனோபியா என்ற பிரச்சனைகள் வரும். தொடர்ந்தாற் போல தொலைக்காட்சி, மொபைல், கணினி பார்த்தல், சினிமா பார்த்தல் போன்ற தொடர் வேளைகளில் கண்களை ஓய்வு இல்லாமல் வேலை கொடுக்கும்போது கண்கள் சோர்வடையத்தான் செய்யும். கண்களில் வலியும் கூடுதலாக இருக்கும். தலைவலி வேற கின்னுன்னு ஒரு வித வழியைக் கொடுக்கும். தொடர்ந்து படித்து கொண்டிருக்கும் போது கூட கண்கள் லேசாக சற்று மங்கலாக தோன்றும். கண்கள் சிவத்தல், கண்களில் தூசி விழுதல் அதனால் உறுத்தல், இமைகள் வீக்கம் கொடுத்தல், கண்களில் கூச்சம் கொடுத்தல், நீர் வடிதல் ஆகிய நோய்கள் வர வாய்ப்பு அதிகம். எனவே கண்களில் மட்டும் சின்ன தொந்தரவு ஏற்பட்டாலும் கண் மருத்துவரை அனுகுவது மிக அவசியம் அதை விட்டு சுயமருத்துவம் என்கிற பெயரில் நீங்களே கண்களில் சொட்டு விட்டு கண்களை கெடுத்து கொள்ளாதீர்கள். அப்படி செய்வது மிகவும் செய்வது தவறான விசயம் ஆகும். குறிப்பிட்ட இடைவெளிகளில் குறைந்த பட்சம் 6 மாதத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து வருதல் பிரச்னைகளை துவக்கத்திலே தூர வைப்பதற்கு  சமம். குறைந்த வெளிச்சங்களில் படிக்காதீர்கள். கண்களில் செயற்கை அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கப் பாருங்கள். தலையணை உறைகளை கூட அடிக்கடி மாற்றுவது கூட நல்லதொரு விஷயம் ஆகும். இப்படி  பழக்க வழக்க முறைகளைக் கடை பிடித்தால் கண் நோய் காணாமல் போய்விடும். கொத்துமல்லி இலைகள் ஃப்ரெஷ்ஷாக எடுத்து நன்கு சுத்தம் செய்து நல்ல முறையில் அலசி எடுத்து, மண் தூசு கொஞ்சம் கூட இருத்தல் கூடாது. கொஞ்சம் தண்ணீர் கலந்து அரைத்து களிம்பு போல் தயார் செய்யுங்கள். இதை கண்களை சுற்றி கவனமாக தடவுங்கள். கண் எரிச்சல்களை சரி செய்து சிவப்பு நிறத்தையும் குறைக்க வல்லது. கவனம் பேஸ்ட் கண்களின் பகுதிக்குள் படாத வாறு பார்த்துக் கொள்வது அவசியம். மாறி பட்டால் சொந்த காசிலே சூன்யம் வச்ச கதையாய் மாறிடும்.

மழை அல்லது பனி காலங்களில் பரவும் அடினோ வைரசினால் ஏற்படும் கண் வலிக்கு நம் அனைவருக்கும் தெரியுமே மெட்ராஸ் ஐ ஆனது வலிகளோடு முதலில் ஒருவருக்கு வந்து இருக்கும். அவரை பார்த்த அடுத்தவருக்கு உடனே பரவும்.  அவனை பார்க்காதே கண் வலியை கொடுத்து விடுவான் என்றும் கருப்பு கண்ணாடி அணிந்து வெளியே போ என்று அனைவரும் சொல்லக் கேள்விப் பட்டு இருப்போம். இப்போ அதை விட பெரிய வைரஸ் கொரானா வந்ததால் பழைய நோய் எல்லாம் டம்மி ஆகி விட்டது. எவ்வளவு நோய் வந்தாலும் மருத்துவம் வளர்ந்து வருவதால் எதையும் சரி செய்யலாம். குறிப்பு ஆரம்பத்தில் அதை எப்போதும் மனதில் வைக்கவும். மேலும் பழைய காலத்தில் இருந்தே குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கண்களில் உண்டாகும் சிவப்பு நிறத்தை நீக்க ஒரு தீர்வு தாய்ப்பால். இதை அனைவரும் கேள்வி பட்டு இருப்போம். தாய்பாலில் தான் கிருமி எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இவை தொற்றை நல்ல  முறையில் நீக்குவதாக நிருபிக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு தாய்ப்பாலை மட்டுமே கண்களில் விடுவதால் கண்களில் சிவப்புத் தன்மை குறைகிறது.

 

கண்விழிகளை காப்பீர்! செல்போன்களை தவிர்ப்பீர்! வருமுன் கவனிப்பீர்!

அகத்தின் அழகு முகத்தில். இந்த முகம் என்பதில் முதலில் கண், மற்றும் புருவம், மூக்கு, உதடு, நெற்றி காது, கன்னம், தாடை அனைத்துமே அடங்கும். அனைத்துமே தான் அழகு. அப்பேற்பட்ட அழகை நாம் தான் வேதிபோருள்கள் பூசி கெடுத்துக் கொள்கிறோம். இந்த முகம் அழகை வைத்தே உடம்பின் ஆரோக்யத்தை கண்டுபிடுத்து விடுவர் பலர். கண்களை சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. அதனால் கிரீம் என்ற பெயரில் வரும் எந்தவொரு கெமிக்கலையும் தரம் பார்த்து ஆலோசனையின்  பெயரில் பயன்படுத்துங்கள். கண்ணை சுற்றி கருவலையங்கள் தோன்ற தூக்கம் இன்மையும் ஒரு காரணம் சொல்கிறார்கள். நம் கட்டுரையில் உணவு பொருள்கள், நல்ல தூக்கம், தண்ணீர் குடித்தல் இதை அழுத்தி சொல்வதற்கு காரணமே நோயின்மை வாழ்வு வாழ வேண்டும் என்பதை மையப்படுத்துவதற்காக தான். கரு வளையம் தவிர்க்க தயிரைச் சேர்க்கவும். சந்தனம், மஞ்சள் கலந்து கண்ணுக்கு அடியில் 10 நிமிடம் பூசி இருத்தல் குளிர்ச்சி மற்றும் கண் வளையம் போக வாய்ப்பு இருக்கு. பூசும் போது கண்ணின் உள்ளே படாதவாறு கவனம் தேவை. கவனமாகப் பார் என்று இந்த கண்ணை தான் சொல்கிறார்கள். நாம் அப்பேற்பட்ட கண்களை கண்மணியாய் பார்க்க வேண்டாமா? கண்ணும், கருத்துமாக வேலையை பாருங்கள் என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? கண்கள் என்றாலே கவனம் தான். கருத்து என்றால் அந்த வேலையை ஏன் செய்கிறோம் என்று தெரிந்து, அறிந்து செய் என்று அர்த்தம். இப்பொழுது புரிகிறதா? கண்ணும் கருத்துமாக செய்யும் செயல் என்றுமே வெற்றி தான் என்பது இப்பொழுது புரிந்து இருக்கும். பேஷியல் செய்யும் போது கண்ணை சுற்றி தடவி மஜாஷ் செய்யுங்கள். கொஞ்சம் புத்துணர்வை உணர்வீர்கள். மேலும் வெள்ளரிக்காய் கண்களை சுறுசுறுப்பாக்கும். சோற்று கற்றாளை நல்ல பலன் தரும். பொதுவாக கண்கள் ஆனது பெண்களுக்கு இமை முடிகள் சும்மா மேல்நோக்கி வில்லு மாதிரி இருந்தால் எடுப்பாகவும், பார்ப்பவரை கவர்ந்து இழுக்கவும் செய்யும். கண்களை தான் உண்மைக்கு ஒப்பீடு செய்வார்கள். கண்ணை பார்த்து பேசுங்கள் என்று. கண்ணின் பார்வை வைத்து நடவடிக்கைகளை சொல்லி விடுவர். ஒவ்வொரு பார்வைக்கும் ஒவ்வொரு குணம் என்று பார்வையிலே சொல்கிறார்கள் என்றால் நாம் அந்த பார்வை கொடுக்கும் கண்களை எப்படி பாதுக்காக்க வேண்டும். கண்கள் போல காக்க வேண்டாமா? மீன்டும் மீண்டும் கண்கள் தான் முன்னாடி வருகிறது. அப்படி பட்ட கண்களுக்கு நாம் முன்னாடி கண்ணாடி அல்லவா அணிய விடுகிறோம். இது எவ்வளவு பெரிய கவனமின்மையை காட்டுகிறது. நாம் சிறு குழந்தைகளிடம் கூட மூக்கு கண்ணாடி அணிய பார்க்கும் போது வேதனையைத் தருகிறது. மேலும் கண்களுக்கு அணியும் கண்ணாடியை கண் கண்ணாடி என்று தானே சொல்ல வேண்டும். மாறாக மூக்கு கண்ணாடி என்று சொல்வதினால் தானோ அந்த கவனமின்மை முன்னாடி கண்ணாடியாய் கண்களுக்கு முன்னே இருக்கிறது. இனியாவது கண்களை கவனத்துடன் கவனிப்போம். இரவில் தூங்கும் முன்னே கண்களை தண்ணீர் கொண்டு கழுவுவது நல்லது. தயவு செய்து கண்களை கசக்குவது, அழுத்தி தேய்ப்பது தவிர்ப்பீர். கண்கள் பிரகாசமாக ஜொலிக்கும்.

நம்முடைய தினசரி வேலைகளை செய்வதற்கு தெளிவான பார்வையுள்ள  கண்கள் அவசியம் தேவைப்படும் அல்லவா? அப்பேற்பட்ட கண்களை பார்வைக் குறைபாட்டில் தள்ளி விடலாமா? நாம் எல்லாவற்றையும் முக்கியப்படுத்த கண்களுக்கு ஒப்பாக சொல்வோம் என்னவென்று தெரிகிறதா? கடமை ஆகட்டும் கடமை கண் போன்றது. என்று சொல்வோம். ஏன் கொஞ்சும் போதும் கூட கண்ணே! என்று தானே கண்களை மையப்படுத்தி முக்கியப்படுத்தி பேசுகிறோம். அழைக்குறோம். அப்படிபட்ட மதிப்பு வாய்ந்த கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டியது என்பது தலையாய கடமை அல்லவா? அவசியம். பாது காப்போம். கண்களுக்கு பலம் சேர்ப்போம். பலன் அடைவோம். வணக்கம்.

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன்  நாளை ஒரு நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

 

மருத்துவ குறிப்புகள் : கண்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : An overview of the eyes - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்