புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரைத் திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சநேயருக்குக் கோபுரம் கிடையாது.
கோபுரம் இல்லாத ஆஞ்சநேயர் கோவில்
புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்,
நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரே உள்ளது.
இவர் எதிரிலுள்ள நரசிம்மரைத் திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி
தருகிறார். இங்குள்ள ஆஞ்சநேயருக்குக் கோபுரம் கிடையாது.
உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று. மலையின்
கிழக்குப்புறம் அரங்கநாதன் கோவில் உள்ளது. இங்குத் திருவரங்கன்,
5 தலையுடைய பாம்பரசன் கார்க்கோடகன் மீது
படுத்தவாறு பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார். இது ஒரு குடைவரைக்கோவில். இதுவும்
பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
இராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட,
திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது
தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன்மீது ஏறுவதற்கு மலையின்
தென்மேற்குப் பகுதியில் சிறிய படிகளைப் பாறையை (மலையை) செதுக்கிச் செய்துள்ளனர்.
இம்மலையில் இருந்து பார்த்தால் நாமக்கல்லின் சுற்றுவட்டாரம் தெளிவாகத் தெரியும்.
இது பாறையானதால் மாலை நேரத்தில் ஏறினால் வெப்பம் குறைவாக
இருக்கும்; அல்லது
காலை நேரத்தில் ஏறினால், வெப்பம் மலையில் தாக்குவதற்குள் இறங்கினால் நலம் தண்ணீர்
மற்றும் சில தின்பண்டங்கள் எடுத்துச் செல்வது நல்லது. குரங்குகள் உள்ளதால் உங்கள்
உடைமைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும்.
நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கில் ஒரு பூங்காவும் (நேரு
பூங்கா) தென்மேற்கில் ஒரு பூங்காவும் (செலம்ப கவுண்டர் பூங்கா) உள்ளது. நேரு
பூங்காவில் புதியதாகப் படகு சவாரியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நரசிம்மர்-நாமகிரி
தாயார் கோவில் நாமக்கல் மலையின்( மலைக்கோட்டை) மேற்குப்புறம் உள்ளது.
கணித மேதை இராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர். நரசிம்மரின்
சிலை மலையைக் குடைந்து வடிக்கப் பட்டுள்ளது. நாமகிரி தாயாரின் கோவில்,
மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடைவரைக்
கோவில். இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது.
நாமக்கலில் தினமும் காலை 6.30 மணிக்கு ஆஞ்சநேயர் கோவில் திறக்கப்பட்டு,
9.00 மணி வரை சாமி தரிசனம்,
9.00 மணி முதல் 9.30 மணி வரை நித்யபூஜை. 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அபிஷேகம்,
12.30 மணி முதல் 1.00 மணி வரை பொதுமக்கள் சாமி தரிசனம் நடைபெற்று,
நடை சாத்தப்படுகிறது.
மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு,
இரவு 7.00 மணி வரை பொது மக்கள் தரிசனம், இரவு 7.00 மணி முதல் 7.30 மணி வரை தங்கத் தேரோட்டம், 7.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை சாமி தரிசனம் நடக்கிறது.
ஆன்மீகம்: ஆஞ்சநேயர் : கோபுரம் இல்லாத ஆஞ்சநேயர் கோவில் - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spirituality: Anjaneya : Anjaneya temple without tower - Notes in Tamil [ spirituality ]