சீதையை மீட்க நடந்த போரில், இராமனது தம்பி லட்சுமணன் காயங்களுடன் மூர்ச்சை அடைய, லட்சுமணனைக் காப்பாற்ற சஞ்சீவி மலையில் இருந்து மூலிகை மருந்தினைக் கொண்டு வருவதற்காக அனுமன் அனுப்பப்பட்டார்.
சஞ்சீவி மலையைப் பெயர்த்த ஆஞ்சநேயர்
சீதையை மீட்க நடந்த போரில், இராமனது தம்பி லட்சுமணன் காயங்களுடன் மூர்ச்சை அடைய,
லட்சுமணனைக் காப்பாற்ற சஞ்சீவி மலையில் இருந்து மூலிகை
மருந்தினைக் கொண்டு வருவதற்காக அனுமன் அனுப்பப்பட்டார்.
இதை அறிந்த ராவணன் அனுமனுக்குப் பல்வேறு தடைகளை
ஏற்படுத்தினான். அனுமன் அவற்றைக் கடந்து சஞ்சீவி மலையை அடைந்தார். ஆனால் அங்குக்
குறிப்பிட்ட மூலிகையினை அவரால் அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. அன்றைய தினம்
முடிவடையும்முன் மூலிகையினைக் கொண்டு வந்தால்தான் லட்சுமணனைக் காப்பாற்ற இயலும்.
எனவே அனுமன் பெரியதோர் உருக்கொண்டு, சஞ்சீவி மலையினை அப்படியே அடியோடு பெயர்த்தெடுத்து,
வானத்தில் பறந்து போர்க்களத்தினை வந்தடைந்தார். பின்னர்
மலையில் இருந்து மூலிகை மருந்து லட்சுமணனுக்குத் தரப்பட, லட்சுமணன் உயிர் பிழைத்தான். இராமன் பெருமகிழ்ச்சி கொண்டு,
அனுமனைக் கட்டித் தழுவினார்.
அனுமனைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்போடு அறிவித்தார்.
அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு அயோத்தி வழியே வானத்தில் பறந்து வருகையில்,
இராமனது தம்பி பரதன், யாரோ அரக்கன் ஒருவன் அயோத்தியைத் தாக்க வருகிறான் என்று
நினைத்துக் கொண்டு அனுமனை நோக்கி அம்பினைத் தொடுத்தார்.
அம்பினில் இராமன் பெயர் இருப்பதைக் கண்டு. அனுமன் சும்மா
இருக்க, அவ்வம்பு
அனுமனது காலைத் துளைத்துவிட்டது. உடனே வானத்தில் இருந்து கீழிறங்கி பரதனிடம் அவன்
தம்பி இலக்குவனைக் காக்கவே மலையைத் தூக்கிச் செல்வதாக அனுமன் கூறினார். அதைக்
கேட்டதும் பரதன் தன் தவற்றை நினைத்து வருந்துகிறார்.
பதிலுக்குப் பரதன், தான் ஒரு அம்பினை இலங்கையை நோக்கிச் செலுத்தினால்,
அதில் அனுமன் அமர்ந்து எளிதாக இலங்கையை அடையலாம் என்கிறார்.
அனுமனோ அதை மறுத்துவிட்டு, அடிபட்ட காலுடனே இலங்கையை நோக்கி விரைந்து சென்றார்.
இதன்மூலம் ஆஞ்சநேயர் கடமை தவறாதவர் என்பது தெரிய வருகிறது.
ஆஞ்சநேயர் அற்புதமான பிரமச்சாரி. இராமன் புகழ்பாடுவதே
ஆஞ்சநேயரின் குறிக்கோள். நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் என்ற ஐம்பூதங்களோடு ஆஞ்சநேயர் தொடர்புடையவர்.
ஐம்பூதங்களில் ஒன்றான வாயு பெற்ற ஆஞ்சநேயர். கடலாகிய நீரைத் தாண்டி. ஆகாய வழியாகப்
பறந்து, நிலம்
பெற்ற சீதாப்பிராட்டியைக் கண்டு. அயலார் ஊராகிய இலங்கையில் தீ வைத்து எரித்தவர்;
அத்தகைய ஆற்றல் பெற்ற ஆஞ்சநேயர் நம்மைக் காப்பார் என்பதே
ஐதீகம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: ஆஞ்சநேயர் : சஞ்சீவி மலையைப் பெயர்த்த ஆஞ்சநேயர் - பிரம்மச்சாரி [ ஆன்மீகம் ] | spirituality: Anjaneya : Anjaneya who moved the Sanjeevi mountain - Brahmachari in Tamil [ spirituality ]