பதட்டமும், மன உளைச்சலும்...!

வாழ்வை எதிர்கொள்ளும் ஆறுதல் வார்த்தைகள்....

[ ஊக்கம் ]

Anxiety and depression...! - Words of comfort to face life…. in Tamil

பதட்டமும், மன உளைச்சலும்...! | Anxiety and depression...!

பதட்டமும், மனஉளைச்சலும் பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது...*

 

பதட்டமும், மன உளைச்சலும்...!


பதட்டமும், மனஉளைச்சலும் பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது...*

 

அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகி விடக்கூடும்...*

 

உறுதியான சிமெண்ட் தரையையும், மரப்பெட்டியையும் தன் கூர்மையான பற்களாலும், நகத்தாலும், குடைந்து ஓட்டை போடும் எலி...*

 

அதே மரத்தால் செய்யப்பட்ட எலிப்பொறியில் சிக்கிக் கொண்டால்!, அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்தப் பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னாலும் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக் கொண்டு விடும்...*

 

நமக்கும் சரி!, சாதாரண எலிக்கும் சரி!, பதட்டமும், மனஉளைச்சலும் பலரின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...*

 

ஆம் தோழர்களே...!

 

சிக்கல்களில் இருந்து தப்பிக்க வேண்டுமா...? பதட்டம், மன உளைச்சல் ஆகிய சிறைகளில் இருந்து விலகி இருங்கள்...!

 

உறுதியாக!, அனைத்து சிக்கல்களுக்கும் விடைகான தெளிவான, பதட்டமற்ற மனத்தினால் முடியும்...!!

 

ஆம்.!, எப்படிப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் மன உளைச்சலுக்கு ஆளாகிப் பதற்றத்தை உண்டு செய்யாமல் சற்று மனத் தெளிவுடன் செயல்பட்டாலே  அதற்கான தீர்வு எளிதில் கிடைத்து விடும்...!!!✍🏼🌹

 

உண்மையான மகிழ்வு பிறருக்கு அளிப்பதில் தான் உள்ளது... நல்ல நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கப் தேநீர் அருந்தும் போது கிடைக்கும் ஆனந்தம் நாம் மட்டும் தனியாக நம் வசதிக்கேற்ப ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடும் போது நிச்சயமாக கிடைக்காது...

 

மனிதம் வளருங்கள்... அன்பை விதையுங்கள், சக மனிதனை மனிதனாய் மதியுங்கள்.

 

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

 

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!

 

🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩

 

வாழ்வை எதிர்கொள்ளும் ஆறுதல் வார்த்தைகள்....

 

வலிகளை மறைத்து

சிரித்து வாழப் பழகுங்கள்..

ஆறுதல் என்ற பெயரில்

வலியை அதிகப்படுத்த

ஒரு கூட்டம் அலைந்துக்

கொண்டிருக்கிறது.

 

தன்னைத் தானே சரி

செய்து கொள்ள முயலுங்கள்.

அதை விடச் சிறந்த மாற்றம்

வேறொன்றுமில்லை.

 

எந்த சூழ்நிலையிலும் உனக்கு நீயே ஆறுதலும் தைரியமும் சொல்லும் பக்குவம் உனக்கு

இருந்தால், வாழ்க்கையில்

எதையும் கடந்துப் போகலாம்.

 

கலங்கிய நீரும் குழம்பிய மனமும் ஒரு நாள் தெளிந்தே தீரும்.

கவலை வேண்டாம்.

இதுவும் கடந்துப் போகும்....

 

உன்னுடன் பேசுவது

மட்டும் தான் எனக்கு இருந்த ஒரே ஆறுதல். அதிலும் இப்பொழுது மாறுதல் என்றால்

நான் என்ன செய்வேன்.

தனித்து நின்றாலும் சில எழுத்துக்களுக்குப் பொருளுண்டு.

தனியாக நின்றாலும் மரங்கள் ஊருக்கே நிழல் கொடுப்பதுண்டு.

தனியாக நின்றாலும் கலங்காதே. சமுதாயம் படிப்பதெல்லாம்

தனி மனித சரித்திரங்களைத் தான்.

 

வலிகளைத் தரும் உறவுகள் வேண்டாம். ஆறுதல் தரும்

தனிமையே போதும்.

காயங்கள் இல்லாமல் கனவுகள் காணலாம், ஆனால் வலிகள் இல்லாமல் வெற்றிகள் காண முடியாது.

பொய்யான அன்புக்காக ஓடியது போதும், இனி ஊர் ஓட்டம் வாழ்வின் இலட்சியத்தை நோக்கி.

 

செய்த பாவங்கள் கேள்வி கேட்கும்,

செய்த புண்ணியங்கள்

பதில் சொல்லும்.

 

பாம்பானது தன் தோலை எத்தனை முறை தான் உரித்தாலும் அது எப்போதும் பாம்பு தான்.

சில நபர்களை உங்கள் வாழ்க்கையில் மீண்டும் அனுமதிக்கும் முன் இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

ஆறுதல் சொல்லும் உறவே அழ வைத்தால் யாரிடம் போவேன் ஆறுதலைத் தேடி....

 

குள்ளநரியின் புத்தி கொஞ்சமாவது இருக்க வேண்டும்,குழி பறிக்க அல்ல, அடுத்தவர் பறிக்கும் குழியில் விழாமல் இருக்க.

 

வாழ்க்கை உன்னை

அழ வைப்பதற்கு

நூறு காரணங்கள் கொடுத்தால்

என்னிடம் சிரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது என்று காட்டுங்கள்.

 

மனசு காயப்பட்டால் நமக்குப் பிடித்தவர்களிடம் ஆறுதல் தேடலாம்.

ஆனால்...

பிடித்தவர்களே காயப்படுத்தினால் யாரிடம் ஆறுதல் தேடுவது.

 

நல்ல விஷயத்திற்காக தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை

வந்தாலும் தைரியமாக நில்.

 

வாழ்க்கையில் அன்பைத் தருபவரைக் காட்டிலும் அனுபவத்தைத் தருபவர்கள் தான் அதிகம்.

 

காயம் கொண்ட என் இதயத்தில் உனது ஆறுதல் அவ்வப்போது மருந்தாகிறது.

 

உனக்கு ஆறுதல் கூற இயலவில்லை என்னால் உங்கள் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்ததால்.

அடைய வேண்டிய இலக்கு அவசியம் என்றால் பாதை கடினமானாலும் பயணிக்கத் தான் வேண்டும்.

 

தூக்கி எறியப்படும் ஒன்று தான் இன்னொருவருக்குப் புதியதாகின்றது.

அது மனம் ஆக இருந்தாலும் சரி. பொருளாக இருந்தாலும் சரி.

 

வாழ்க்கை வாழ்வதற்கே தவிர,இல்லாததை கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு இல்லை.

 

வாழ்ந்து உயர்ந்து விட்டால் பொறாமையில் பேசுவார்கள். தாழ்ந்து வீழ்ந்து விட்டால் கேவலமாகப் பேசுவார்கள். இவ்வளவு தான் மனிதர்களின் உலகம்.

👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑

🌷தமிழர் நலம்🌷

💥நன்றி!

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

 

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

 

வாழ்க 🙌 வளமுடன்

 

அன்பே🔥இல்லறம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

💦💦💦💦💦💦💦💦💦💦💦💦

ஊக்கம் : பதட்டமும், மன உளைச்சலும்...! - வாழ்வை எதிர்கொள்ளும் ஆறுதல் வார்த்தைகள்.... [ ஊக்கம் ] | Encouragement : Anxiety and depression...! - Words of comfort to face life…. in Tamil [ Encouragement ]