வழிகாட்டிகள் அவசியமாக இருக்க வேண்டுமா?

சித்தா மருத்துவம்

[ சித்தா மருத்துவம் ]

Are guides necessary? - Siddha medicine in Tamil

வழிகாட்டிகள் அவசியமாக இருக்க வேண்டுமா? | Are guides necessary?

வழிகாட்டிகள் நல் வழியாக காட்டவேண்டும் கல்-முள் நிறைந்த வழியை காட்டினால் பயணம் எப்படி தொடரும்?

வழிகாட்டிகள் அவசியமாக இருக்க வேண்டுமா?

வழிகாட்டிகள் நல் வழியாக காட்டவேண்டும் கல்-முள் நிறைந்த வழியை காட்டினால் பயணம் எப்படி தொடரும்? சக்கரம் இல்லாத சைக்கிள் ஒடுமா? பெட்ரோலுக்கு பதில் தண்ணீர் ஊற்றினால் மோட்டார் சைக்கிள் ஓடுமா? ஓடாது.  இளைய சமுதாயத்தினரே இருட்டு வாழ்க்கையும் குருட்டு வாழ்க்கையும் கற்றுத் தரும் வழிகாட்டுபவரிடம்  ஆலோசனை கேட்காதீர்கள். நல்லது கெட்டது எது என்று ஆராய்ந்து செய்பட்டு நலமாக வாழுங்கள். நீங்கள் நலமாக வாழ்ந்தால் உங்களை சார்ந்தவர்களும் நலமாக வாழ்வார்கள். எல்லோருக்கும் தலையின் உச்சியில் அதிக மூளையை இயற்கை கொடுத்திருக்கிறது. அந்த மூளையை பயன்படுத்தி அறிவாளிகளாக வாழுங்கள். மனிதர்களின் கட்டுப்பாட்டில் வாழாத உயிர்கள் அனைத்தும் இயற்கை கொடுத்த மூளையை பயன்படுத்தி அறிவுடன் வாழ்கின்றன. அடுத்தவரிடம் ஆலோசனை கேட்பதில்லை. நாமும் நம் மூளையை பயன்படுத்தி வாழ்ந்தால் என்றும் மகிழ்ச்சியான வாழ்வு தாள். இதைப் படிக்கும் பெரியவர்கள் என்னை திட்டாதீர்கள். காரணம் திறமை இருப்பவர்கள் எந்த ஆலோசனையும் பிறரிடம் கேட்பதில்லை. ஒன்று பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். அனுபவ பட்டும் தெரிந்து கொள்கிறார்கள். எதுவாயினும் காலம் விரயம் ஆகாமல் பார்த்துக் கொள்வது சாலச் சிறந்தது. தீய பழக்கங்கள் இருந்தால் மறந்து விடுங்கள். நல்ல உணவுகளை சாப்பிடுங்கள். நீங்கள் நலமாக வாழ்ந்து உங்கள் வாரிசுகளுக்கு நல்வழி காட்டுங்கள். இளைய சமுதாயமே நல்லது. எது கெட்டது எது என்று உங்களின் பகுத்தறிவால் ஆராய்ந்து பார்த்து செயல்படுங்கள். கடவுள் ஜோசியம், ஜாதகம், இன்னும் பல மூடப்பழக்க பொய்களை தம்புகிறவர்கள் என்றும் நிம்பதியாக வாழ முடியாது. பக்தன் என்பவன் மூடன் என்று ஒருஅறிவான கவிஞர் சொல்லியிருக்கிறார். முட்டாளாக வாழாதீர்கள் அறிவாளியாக வாழ்ந்து அறியாளிகளை உருவாக்குங்கள் உலக உயிர்களை படைத்து வாழ வைத்துக் கொண்டிருப்பது இயற்கை என்ற உண்மையை மற்ற அனைத்து உயிர்களும் உணர்ந்து இயற்கையை மதித்து மனதால் வணங்கி இயற்கை உணவுகளை மட்டும் சமைக்காமல் சாப்பிட்டு வாழும் காலம் வரை மகிழ்ச்சியாக வாழ்கின்றன. ஆனால் மனித இனம் மட்டும் இயற்கையை மதிப்பதில்லை. இயற்கையை வணங்குவதில்லை. இயற்கை உணவுகளையும் உண்பதில்லை. பூமியில் விளையும் மனித உணவுகளையும் முறையாக உண்பதில்லை. அதனால் தான் மனித இனம் மட்டும் பல துன்பங்களை அனுபவித்து மகிழ்ச்சி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

உலகம் ஒன்று. உலகத்தை படைத்த கடவுளும் ஒன்று ஒரு கடவுளால் தான் ஒரு உலகத்தை உருவாக்க முடியும். முஸ்லிம் மதத்தினர் எங்கள் கடவுள்தான் உலகை படைத்தார் என்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தினர் எங்கள் கடவுள்தான் உலகத்தை படைத்தார் என்கிறார்கள். இந்து மதத்தினர் ஆயிரக்கணக்கான கடவுள்களை உருவாக்கி எங்கள் கடவுள்தான் உலகத்தை படைத்தார் என்கிறார்கள். இயற்கையை நம்புகிறவர்கள். இயற்கை கடவுளின் சக்தியால் தான் உலகம் உருவாகி இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். உலகைப் படைத்தது எங்கள் கடவுள்தான் என்று நான்கு வகைகளில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையாக ஆராய்ந்து பார்த்தால் ஏதாவது ஒரு கடவுள் தான்  உலகை படைத்திருக்க வேண்டும். ஒரு குழந்தையை ஒரு தாயால் தான் பெறமுடியும். நான்கு தாய்கள் சேர்ந்து ஒரு குழந்தையை பெற முடியாது. ஒரு குழந்தையை ஒரு தாய் பெறுவது உண்மையென்றால் இந்த உலகை நான்கு வகையான கடவுள்கள் படைத்திருக்க முடியாது. இந்த ஒரு உலகத்தை படைத்தது ஒரு கடவுளாகத்தான் இருக்க முடியும். யார் அந்த உண்மையான கடவுள் அதுதான் இயற்கை. மனிதர்கள் கண்டுபிடித்த சிலைகளின் துணை இல்லாமல் நாம் வாழ்ந்து விடலாம். ஆனால் இயற்கை சக்திகளின் துணை இல்லாமல் உலகில் எவ்வுயிரும் வாழ முடியாது. உண்மையான இயற்கை கடவுளை நம்புபவர்கள் குழப்பமில்லாமல் தெளிந்த மனதுடன் வாழ்வார்கள். உண்மையை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் விருப்பம். இயற்கை உண்மை. தீராத நோய்கள் அனைத்தையும் குணமாக்கும் சக்தி இயற்கை அன்னைக்கு மட்டும் தான் உண்டு. இயற்கை அன்னையில் மடியிலிருந்து (பூமி) பிறக்கும் இயற்கை உணவுகளாலும் பலவகை மூலிகைகளாலும் பலர் நோய்களிலிருந்து குணமடைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் இயற்கை அன்னையின் சக்தியே உலகில் மிக மிக உயர்ந்தது. நான் தெரிந்து கொண்ட உண்மை என்னவென்றால் எல்லா உயிர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தடையில்லாமல் வாரி வழங்குவது இயற்கைதான் அப்படியானால் இயற்கைதான் கடவுள் என்று சொல்வதில் என்ன தவறு? அன்று உண்மையான இயற்கையை வணங்கியவர்கள் இன்பமாக வாழ்ந்தார்கள். உலக உயிர்களுக்கு சேவை செய்யும் இயற்கை சக்திகளை நேசியுங்கள். வணங்குங்கள். இயற்கை தாய் படைத்த வாயில்லா ஜீவன்களை அடிமைப்படுத்தாதீர்கள். சித்ரவதை செய்யாதீர்கள். கொன்று தின்னாதீர்கள். இது இயற்கையின் கட்டளை, இயற்கையின் கட்டளையை மீறி பாவங்கள் செய்தால் பல மடங்கு தண்டனை நிச்சயம் உண்டு. தண்டனையிலிருந்து யாரும் தப்பமுடியாது.

இன்றைய வாழ்வில் உண்மை பேசுபவன் முட்டாளாம். நல்லவைகளை சொல்பவன் பைத்தியக்காரனாம். என்னை படைத்து வாழவைத்துக் கொண்டிருக்கும் இயற்கையை வணங்குபவன். ராசிக்கல் இரண்டு ரூபாய், தாயத்து நான்கு ரூபாய், கலர் கலரான சுயிறுகள் 50 பைசா, மலிவாக கிடைக்கும் செம்புத் தகடுகள், குங்குமம் கிலோ பதினைத்து ரூபாய், இலவசமாக கிடைக்கும் சாம்பல் வைக்கோலை எரித்த சாம்பலில் விளக்கெண்ணெயை ஊற்றி நன்றாக குழப்பினால் வசிய மை, மந்திரம் என்றும் பொய். புதிதாக ஒரு கடவுளையும் உருவாக்கி சாமியாடும் பித்தலாட்டம் இன்னும் பல பொய்களை உங்களிடம் புகுத்தி பணத்தை கொள்ளை அடிக்கலாம். பூஜையில் வைக்காத பொருட்களின் விலை நூற்றுக்கணக்கில் 40 நாட்கள் பூஜையில் வைத்தவைகளின் விலை ஆயிரக்கணத்தில், ஒரு வருட பூஜையில் வைத்தவைகள் பல்லாயிரக் கணக்கில் என்று சொன்னால் போட்டிபோட்டுக் கொண்டு பணத்தை கொண்டு வந்து கொட்டுவீர்கள். அப்படி வழிகாட்டும் நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்பதும், நல்ல முறையில் உங்களுடைய குருவை தேர்ந்தெடுத்தாலே உங்கள் வாழ்க்கை செழிக்கும் என்று சொல்வதுமே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும். நீங்கள் நன்கு செயல்பட்டாலே உங்கள் பின்னால் நீங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக மாறலாம். நிறைய புத்தகங்களை படியுங்கள். மனம் தெளிவு பெறும். வழிகள் தானாகவே பிறக்கும். வலிகள் பறக்கும். 


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

சித்தா மருத்துவம் : வழிகாட்டிகள் அவசியமாக இருக்க வேண்டுமா? - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Are guides necessary? - Siddha medicine in Tamil [ Health ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்