சிலர் சிரிக்கையில் புன்முறுவலை போல் இருக்கும். சிறிதும் சத்தம் இருக்காது. சிலரது சிரிப்பு இருமலாக மாறி தொந்தரவு தரும் (சிரிப்பவருக்கும் அருகிலிருப்பவருக்கும்). சிலரது சிரிப்போ கடுகடுவென்று மோசமாக அல்லது சோகமாக இருக்கும். மோசமான உங்கள் மனநிலையை வெல்ல வேண்டுமா? யோசனை செய்யாமல் கொஞ்சம் முட்டாள்தனமாக இருங்கள்! ஒருவர் எவ்வளவு அதிகமாக சிரிக்கிறாரோ அவ்வளவு உற்சாகமாக இருப்பார்! ஒருவர் எவ்வளவு அதிகமாக கோபப்படுகிறாரோ, அவ்வளவு வேகமாக சோர்வு அடைகிறார்! மனதில் அழுத்தமும் அடைப்புகளும் உள்ளவர் வயிறு குலுங்க சிரிக்க முடியாது. சிரிப்பவர்கள் கவலை குறையும் அல்லது மறையும். இரண்டு லாபம்தானே? இப்போது நான் உங்களை வாய்விட்டோ வயிறுவிட்டோ சிரிக்க அழைக்கிறேன். உலக சிரிப்பு தினம் மட்டும் நீங்கள் அழுதுகொண்டே சிரிக்கலாம். ஏன் நீங்கள் அழுதுகொண்டே சிரிக்கவேண்டும் என்று யோசிக்கிறீர்களா? அது வேறு எதுவும் இல்லை. அன்றாவது தினமும் சிரிக்காதவர் நீங்கள் அழுவதை கண்டாவது சிரிப்பாரோ என்ற ஒரு நப்பாசை தான். நீங்கள் சிரிக்க கோபம் தேவை என்றால் கோபப்படுங்கள், நீங்கள் சிரிக்க சத்தம் தேவை என்றால் கத்துங்கள் அல்லது எதையாவது போட்டு உடையுங்கள் (உங்களது உடமைகளை மட்டும்). அப்படி செய்வதன் மூலம் நீங்கள் நன்றாக சிரிப்பீர்கள் என்றால் அப்படியே செய்யுங்கள். சிரிப்பை பெறுங்கள், சிரிப்பை கொடுங்கள், சிரிக்க வையுங்கள்.
சிரிக்கவும் சிரிக்க வைக்கவும் கூடிய ஒரே இனம்
மனிதன் மட்டும் தானோ?
சிலர் சிரிக்கையில் புன்முறுவலை போல் இருக்கும்.
சிறிதும் சத்தம் இருக்காது.
சிலரது சிரிப்பு இருமலாக மாறி தொந்தரவு தரும்
(சிரிப்பவருக்கும் அருகிலிருப்பவருக்கும்).
சிலரது சிரிப்போ கடுகடுவென்று மோசமாக அல்லது சோகமாக
இருக்கும்.
மோசமான உங்கள் மனநிலையை வெல்ல வேண்டுமா? யோசனை செய்யாமல் கொஞ்சம் முட்டாள்தனமாக இருங்கள்!
ஒருவர் எவ்வளவு அதிகமாக சிரிக்கிறாரோ அவ்வளவு
உற்சாகமாக இருப்பார்!
ஒருவர் எவ்வளவு அதிகமாக கோபப்படுகிறாரோ, அவ்வளவு வேகமாக சோர்வு அடைகிறார்!
மனதில் அழுத்தமும் அடைப்புகளும் உள்ளவர் வயிறு
குலுங்க சிரிக்க முடியாது.
சிரிப்பவர்கள் கவலை குறையும் அல்லது மறையும்.
இரண்டு லாபம்தானே?
இப்போது நான் உங்களை வாய்விட்டோ வயிறுவிட்டோ சிரிக்க
அழைக்கிறேன்.
உலக சிரிப்பு தினம் மட்டும் நீங்கள் அழுதுகொண்டே
சிரிக்கலாம். ஏன் நீங்கள் அழுதுகொண்டே சிரிக்கவேண்டும் என்று யோசிக்கிறீர்களா?
அது வேறு எதுவும் இல்லை. அன்றாவது தினமும் சிரிக்காதவர்
நீங்கள் அழுவதை கண்டாவது சிரிப்பாரோ என்ற ஒரு நப்பாசை தான்.
நீங்கள் சிரிக்க கோபம் தேவை என்றால் கோபப்படுங்கள்,
நீங்கள் சிரிக்க சத்தம் தேவை என்றால் கத்துங்கள்
அல்லது எதையாவது போட்டு உடையுங்கள் (உங்களது உடமைகளை மட்டும்). அப்படி செய்வதன் மூலம்
நீங்கள் நன்றாக சிரிப்பீர்கள் என்றால் அப்படியே செய்யுங்கள்.
சிரிப்பை பெறுங்கள், சிரிப்பை கொடுங்கள், சிரிக்க வையுங்கள்.
சிரிப்பை போன்ற ஆரோக்கியமான விருந்து மற்றும்
மருந்து வேறு எதுவும் இல்லை.
மற்றவர்கள் உலக சிரிப்பு தினத்தன்று மட்டும் செயற்கையாக
சிரித்தாலும், நீங்கள் வருடம் முழுவதும் இயற்கை சிரிப்புடன்
இருங்கள் (கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு போகாமல்)
சிரிப்பின் முழு பயனைப் பெற, முடிந்தவரை சிரிப்பில் செயற்கை கவரிங் முகப்பூச்சை கலக்காதீர்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.
- தமிழர் நலம்
நகைச்சுவை : சிரிக்கவும் சிரிக்க வைக்கவும் கூடிய ஒரே இனம் மனிதன் மட்டும் தானோ - குறிப்புகள் [ ] | Comedy : Are humans the only species that can laugh and laugh - Notes in Tamil [ ]