மது அருந்தும் பழக்கம் நரம்பு தொடர்பான மோசமான பிணிகளுக்கு எவ்வாறு வழியமைக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும்.
நீங்கள் டீ, காபி அடிக்கடி அருந்துபவரா? மது அருந்தும் பழக்கம் நரம்பு தொடர்பான மோசமான பிணிகளுக்கு எவ்வாறு வழியமைக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். மதுப் பழக்கம் மட்டுமின்றி காப்பி - தேநீர் போன்ற பானங்களையும் வரைமுறையின்றி பருக நேர்ந்தால் இந்தப் பழக்கமும் நரம்புத் தளர்ச்சி நோய்களுக்கு வித்தூன்றிவிடும். இந்த உண்மையை பலர் உணர்ந்து கொள்வதில்லை. காப்பி, தேநீர் போன்றவை தீங்கான பானங்கள் அல்ல என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அறியாமை காரணமாக ஏற்படும் மனக் கருத்தாகும். ● காப்பி, அல்லது தேநீர் பருகும் போது உடல் சுறு சுறுப்பு அடைகிறது என்றும் மூளை தெளிவடைந்து உற்சாகமாக இயங்குகிறதென்றும் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ● காப்பி தேநீர் போன்ற பானங்கள் அருந்தும் போது செயற்கையாக உடல் சுறுசுறுப்பும் உற்சாகமும் அடைவது உண்மை தான். ஆனால் அது ஒரு கோளாறான நிலையாகும். ● காப்பி, தேநீர் போன்ற பானங்கள் அருந்தும் போது உணர்ச்சி நரம்புகள் காரணமில்லாத கிளர்ச்சிக்கு இலக்காகின்றன. அந்தக் கிளர்ச்சி நரம்புகளின் இயக்கத்தை பலவந்தமாக இயக்குகின்றன. இப்படிப்பட்ட ஒரு நிலையை நாம் இயற்கையாக உற்சாகமடைந்திருப்பதாகவும், புதுத் தெம்பு நமது உடலில் வந்து சேர்ந்திருக்கிறது என்றும் எண்ணிக் கொள்கிறோம். காப்பி, தேநீரின் செயற்கைத் தூண்டுதலால் ஊக்கம் பெறப்பட்டால் நரம்புகள் வெகுசீக்கிரத்திலேயே தளர்ச்சியடைந்து உடல் கடுமையான சோர்வுக்கும் களைப்புக்கும் இலக்காகிறது. காப்பி, தேநீர் அருந்துபவர்கள் இதனை உணரத்தான் செய்கிறார்கள். ஆனால் அதற்கான காரணம் அவர்களுக்கு விளங்குவதில்லை. ● காப்பி என்ற பானத்தில் 'காபீன்' எனப்படும் ஒரு பொருள் அடங்கியிருக்கிறது. இது ஒரு வகையான நச்சுப் பொருளாகும். ● நாம் காப்பியை அருந்தும் போது அந்த நச்சுப்பொருள் நரம்புகளை செயற்கையாகத் தூண்டி கிளர்ச்சியடையச் செய்கிறது. இந்தச் செயற்கைத் தூண்டுதலினால் நரம்புகளின் ஆற்றல் வீணாக்கப்படுகிறது. நடக்க முடியாமல் களைப்புற்றிருக்கும் ஒரு வண்டி மாட்டை ஈவிரக்கமில்லாமல் அடித்து அதனை நடக்கச் செய்வது போன்றதாகும் இது. நியாயமான காரணம் இல்லாமல் இவ்வாறு காபின் மூலம் நரம்புச் சக்தியை அடிக்கடி வீணாக்கிக் கொண்டிருந்தோமானால் நாளடைவில் மிகவும் மோசமான நரம்புப் பிணிகளுக்கு இலக்காக நேரிடும். இம்மாதிரி ஏற்படும் நரம்புப் பிணிகளை எளிதில் குணமாக்கிக் கொள்வதும் சிரமமாகிவிடும். ● நாம் சுறு சுறுப்பாக செயற்படுவதற்கு நமது உடலின் நரம்புகள் தான் ஆதாரமாக உள்ளன. ஒரு மனிதனின் உற்சாகத்திற்கு நரம்புகள் தான் நிலைக்களனாக உள்ளன. ● நமது உடல் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் நரம்புகளின் ஆற்றல் உயர்ந்த நிலையில் இருக்கும். அப்போது நம்மிடம் சுறுசுறுப்பும் உற்சாகமும் இயற்கையாகவே அமைந்திருக்கும். செயற்கையான சாதனங்கள் மூலம் நமக்கு நாமே சுறு சுறுப்பையும் உற்சாகத்தையும் ஊட்ட வேண்டிய அவசியம் இல்லை. ● காப்பி, மூலம் நாம் செயற்கையாக உற்சாகத்தைத் தூண்டி விடுவதன் மூலம் நம்முடைய நரம்பின் வலிமையை வீண் விரயமாக்கிக் கெடுத்துக் கொள்கிறோம். தொடர்ந்து காப்பி சாப்பிடும் வழக்கமுள்ளவர்களுக்கு இரைப்பையில் புண் தோன்றுவது வழக்கம். காப்பி குடிப்பதை நிறுத்தாத வரை வேறு சிகிச்சை மூலம் இரைப்பைப் புண்ணை அகற்றி விட முடியாது. ● நம்மில் காலையிலோ மாலையிலே சிற்றுண்டி அருந்துகிறார்கள் என்றால் காப்பி சாப்பிடாமல் சிற்றுண்டி முழுமை அடைந்ததாகக் கருதுவதில்லை. ● உணவுக்கு இடைப்பட்ட வேளையில் ஏதாவது பலகாரங்களைக் காப்பியுடன் சேர்த்து உண்ணும் போது ஜீரண சக்தி பெரிதும் பாதிக்கிறது. இந்தப் பழக்கம் தொடர்ந்து இருக்குமானால் இயல்பான பசி உணர்ச்சி மந்தித்து விடும். உணவு நேரத்தில் வயிறார உணவு உண்ண முடியாது போய் விடும். தீவிரமான பசி இல்லாமல் ஏதோ வேளா வேளைக்கு உணவு உண்டோம் என்ற முறையில் சிலர் உணவுப் பழக்கத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். ● முழுப் பசியுடன் போதிய அளவுக்குச் சத்துணவை உண்ணும் போதுதான் உணவின் சத்து முழுமையாக உடலால் கிரகிக்கப்பட்டு உடலுக்குச் சக்தியளிக்கிறது. பசியின்றி அரை குறையாக உணவு உண்ணும் போது உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காமல் உடல் சக்தி குன்றிப் பலவீன நிலையை அடைகின்றது. ● இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கும், நீரிழிவு போன்ற நோய் தோன்றுவதற்குங்கூட காப்பி, தேநீர் போன்ற பானங்கள் வழியமைத்து விடுகின்றன. ● காலையிலோ, மாலையிலோ சிற்றுண்டி. அருந்தும்போது காப்பிக்குப் பதில் பழரசம் உட்கொள்ளலாம். ● சூடான பானம் அவசியம் தேவையென்றால் சுக்கு காப்பி சாப்பிடலாம். பச்சைப் பயிறு கஞ்சி, கோதுமைக் கஞ்சி போன்றவற்றை அருந்தலாம். ● வசதியிருப்பின் சூடான பசுவின்பால் அருந்தலாம். ● தற்காலத்தில் மனித வாழ்க்கையில் காப்பி போன்ற பானத்தை அடியோடு விலக்குவது சாத்தியமானது அல்ல. உடல் நலத்தில் அக்கறையுள்ளவர்கள் கொஞ்சங் கொஞ்சமாக காப்பி போன்ற பானங்களைப் படிப்படியாக குறைத்துக் கொள்வது நல்லது. ● ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காப்பி போன்ற பானங்களை அடியோடு விட்டு விடத் தான் வேண்டும். காப்பி பழக்கத்தை விடமுடியவில்லை என்று வீம்பு பேசினால் நமது ஆரோக்கியத்தை மறந்து விட வேண்டியது தான். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்நரம்புத் தளர்ச்சி உண்டு பண்ணும் பானங்கள்
மருத்துவ குறிப்புகள் : நீங்கள் டீ, காபி அடிக்கடி அருந்துபவரா? - மருத்துவ குறிப்புகள், நரம்புத் தளர்ச்சி உண்டு பண்ணும் பானங்கள் [ மருத்துவம் ] | Medicine Tips : Are you a frequent drinker of tea and coffee? - Medicine Tips, Nervous drinks in Tamil [ Medicine ]