அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.... நான் என் வீட்டின் மூத்த மகள். வீட்டின் முதல் பிள்ளைகளாக இருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாழ்க்கை எப்பொழுதும் சவாலாகதான் இருக்கிறது. எந்தவொரு ஆபத்தான சூழ்நிலை என்றாலும் அதை முதலில் பரிசோதிப்பதும் அவர்களே!
நீங்கள் வீட்டின் மூத்த பிள்ளையா??
அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்....
நான் என் வீட்டின் மூத்த மகள். வீட்டின் முதல் பிள்ளைகளாக
இருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும்
வாழ்க்கை எப்பொழுதும் சவாலாகதான் இருக்கிறது. எந்தவொரு ஆபத்தான சூழ்நிலை என்றாலும்
அதை முதலில் பரிசோதிப்பதும் அவர்களே!
காதலில் விழுவதற்கும் தயங்கும் உள்ளம் உடையவர்களாக இருப்பார்கள்.
எப்பொழுதும் தனது சகோதர சகோதரிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று
போராடுவார்கள். தீய பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால், என் குடும்பம் பாதிக்கப்பட்டு விடுமே என பல
விதங்களில் தங்களை நல்லவர்களாக தயார் செய்து கொண்டிருப்பார்கள்.
வெகுளி தனம் இருந்தாலும், தனது
குடும்பத்திடம் வெளிப்படுத்த முடியாது. எப்பொழுதும் எதையாவது மறைத்துக் கொண்டே வாழ
வேண்டியதாக இருக்கும்.
உறவுகாரரின் கேள்விகளுக்காகவே பிடிக்காத வேலைக்காக உழைக்க
வேண்டியதாக இருக்கும்.
வயதிற்கேற்ற சந்தோஷத்தை அடைய முடியாமல் கடந்து போக கூடியவராக
இருப்பார்கள். முடிந்தவரை தனக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வை தாங்களே
பார்த்துக் கொள்வார்கள்.
விட்டு கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் வருவதற்கு முன்பே
புரிந்து கொண்டு நடப்பார்கள்.
பொருளாதார நெருக்கடியிலும் மற்றவர்களுக்கு தங்களுடைய பங்களிப்பை செலுத்துவார்கள்.
உண்மையில், மூத்த பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இவர்களை திருமணம் செய்ய மணம் இல்லாதவர்கள் சற்று சுயநலம் உடையவர்களாக தான் இருப்பார்கள். இதை கேட்க உங்கள் மனம் ஏற்கவில்லை என்றால் மன்னித்து விடுங்கள். ஆனால், இதுதான் எதார்த்தமான உண்மை.
ஒரு உண்மைச் சம்பவம் பார்ப்போமா.
தெற்கு ஆப்ரிக்காவில்,
நிற வெறி இருந்த காலத்தில்,
ஒரு வெள்ளை நிற போலீஸ் ஆஃபிசர் ஒரு கருப்பு இன குடும்பத்தில்
தந்தையையும், அவர் மகனையும்
சுட்டுக் கொன்று, உடல்களை
எரித்தும் விட்டார்.
கேஸ் கோர்ட்டுக்கு வந்தது. நீதிபதி எல்லாத் தரப்பு வாதங்களையும்
கேட்டபின், போலீஸ் அதிகாரி நிற வெறி
காரணத்தால் சுட்டதாகவும், இறந்த இருவர் மீதும் எந்த தவறும்
இல்லை என்று நிரூபணம் ஆயிற்று.
தானே தண்டனையை வாசிக்காமல், நீதிபதி
இறந்தவரின் மனைவியை, அந்த மகனின் தாயிடம்,
'என்ன தண்டனை கொடுக்கலாம்'
என்று கேட்டார்.
அப்பெண்மணி
மெதுவாக எழுந்து,
எனக்கு மூன்று விஷயங்கள் வேண்டும் என்றார்.
1. என் கணவரையும் மகனையும் எரித்த இடத்திற்கு அழைத்துச்
செல்லுங்கள். அவர்களது சாம்பலை
எங்கள் முறையில் புதைக்க வேண்டும்.
2. இந்த போலீஸ் அதிகாரியை மாதத்தில் ஒரு நாள்
எங்களுடன் கழிக்கச் சொல்லுங்கள். எங்களைப் பற்றி,
எங்கள் சமூகம் பற்றி
புரிதல் ஏற்படும்.
அவர் என்னைச் சந்திக்க வரும் பொழுது, என்னிடம் எஞ்சியுள்ள அன்பையெல்லாம் அவர் மீது பொழிய விரும்புகிறேன்.
3. நான் அந்தப் போலீஸ் அதிகாரியை என் மகனாக
ஏற்க விரும்புகிறேன்.
அவையில் எல்லோர் கண்களும் பணிந்தன.
இதுவல்லவோ உண்மையான அன்பு.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி,
எந்த ஒரு விருப்பு, வெறுப்பு
இன்றி எல்லோரையும் ஏற்று கொண்டால், அதையே அவர்கள் நம்மீது
காட்டுவார்கள்.
நாளை மரமாக வளரக்கூடிய இளைய தலைமுறையின் உயரம்.
༺🌷༻
150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான்
போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு
செல்வது வழக்கம். ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும்
என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒவ்வொரு மாணவரும் வக்கீல்,
ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே
வந்தனர்.
அப்போது ஒரு மாணவன் கூறினான் “நான் குதிரை வண்டிக்காரனாவேன் ”.
சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர், ஆசிரியரும்
அவனை கேலி செய்து உட்கார சொன்னார்.
༺🌷༻
அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று
கேட்க, நடந்ததை கூறினான் அந்த சிறுவன். அதை கேட்ட அந்த
தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் “ நீ
ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன
காரணம்”.
அந்த சிறுவன் கூறினான் “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை
வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர்
குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும்
என்று ஆசை, அதனால் தான் அப்படி கூறினேன்”.
༺🌷༻
இதை கேட்ட தாய் வீட்டினுள் சென்று ஒரு மகாபாரத படத்தை எடுத்து
வந்தார், அதை மகனிடம் காட்டி “ நீ குதிரை வண்டிக்காரனாக
வேண்டும் என்று சொன்னது தவறில்லை, ஆனால் நீ எப்படிப்பட்ட
குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு
தேர் ஓட்டினானே கிருஷ்ணன், அந்த கிருஷ்ண் போன்ற தேர் ஓட்டியாக
இருக்க வேண்டும்” என்றார்.
༺🌷༻
அந்த சிறுவன் தான், தற்போது
உலகெங்கிலும் உள்ள ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.
༺🌷༻
நாம் செய்வதை தான் வரும் தலைமுறை கவனித்து வளர்கிறது.
கவனமாக இருந்தால் தான் நல்ல தலைமுறையை உருவாக்க முடியும்.
பிள்ளைகளின் எதிர்காலம் வேறு எங்கும் இல்லை நம் கைகளில் தான்
இருக்கிறது.
(நல்ல பிள்ளையாக, புள்ளைங்களாக)
வருவதற்கும் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலையே காரணமாக அமைகிறது.
༺🌷༻
உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால்
பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் – உயர்ந்த எண்ணங்களால் என்ன பயன்? உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும்? ஊரார் என்ன நினைப்பார்கள்? இவற்றை எல்லாம் கருதி
உயர்ந்த எண்ணங்களை (அறம்) சமரசம் செய்து கொள்கிறோம். ஆனால் நம் எண்ணங்கள் நம்மோடு
முடிவதில்லை. நம் எண்ணங்கள் தான் நாளைய தலைமுறைக்கான விதைகள்.
🌿நம் எண்ணங்கள் மீதான நம்முடைய நம்பிக்கையின் உயரம் தான் - நாளை
மரமாக வளரக்கூடிய இளைய தலைமுறையின் உயரம்.
💐நன்றி🙏
நல்லதே நினை நல்லதே நடக்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அனுபவம் தத்துவம் : நீங்கள் வீட்டின் மூத்த பிள்ளையா?? - "விருப்பு வெறுப்பு..." [ ] | Philosophy of experience : Are you the eldest child of the house?? - "Likes and dislikes..." in Tamil [ ]