சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. அதெப்படி? திருமால் அதைப் பெற்றார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

As soon as we see the conch wheel, we should remember Lord Shiva! How about that? Don't you want to know that Thirumal got it - Notes in Tamil

சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. அதெப்படி? திருமால் அதைப் பெற்றார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா | As soon as we see the conch wheel, we should remember Lord Shiva! How about that? Don't you want to know that Thirumal got it

சங்கு சக்கரம் பார்த்தவுடன் திருமால் ஞாபகம் தானே வரும்! சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள் அல்லவா?.உண்மைதான். சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள்தான். பரம்பொருளின் ஐந்து தொழில்களுள் ஒன்றான காக்கும் தொழிலைச்செய்யும் தொழிற்கடவுளான திருமால் சங்கு சக்கரம் இரண்டையும் சிவபூசை முறையாகச் செய்து அதனைப் பரம்பொருள் சிவபெருமானிடமிருந்து பெற்றார். சங்கு பெற்ற கதை சகோதர்களான அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட பலப்பல தெய்வீக அற்புதப் பொருட்களில் சங்கும் ஒன்று. பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு ‘நமசிவாய’ என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால் பாஞ்சஜைனம் எனப்பெயர் பெற்றது. காப்போனைக் காக்கும் கடவுளான சிவபெருமான் திருக்கரத்தில் இருந்த இந்தச் சங்கினைப் பெறுவதற்குக் காக்கும் தொழிலைச் செய்யும் திருமால் விரும்பினார். சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து நியமம் தவறாமல் சிவ பூசை செய்தார். திருமால் ஆசைப்பட்ட மங்கலப்பொருளை சங்கினை சிவபெருமான் திருமாலுக்கு அருளிச் செய்தார். திருமால் சிவபூசை செய்து தெய்வீகச் சங்கினைக் கைக்கொண்ட திருத்தலம் திருச் சங்க மங்கை (திருச் சங்கம் அங்கை) எனப்பெயர் பெற்றது. திருமாலுக்குச் சங்கினை அருளித் திருச்சங்க மங்கையில் எழுந்தருளியுள்ள சிவனுக்குச் சங்கநாதர், சங்கேசுவரர் என்ற திருநாமம் உண்டு.

சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. அதெப்படி? திருமால் அதைப் பெற்றார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

 

சங்கு சக்கரம் பார்த்தவுடன் திருமால் ஞாபகம் தானே வரும்! சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள் அல்லவா?.உண்மைதான். சங்கு சக்கரம் இரண்டும் திருமாலின் கருவிகள்தான்.

 

பரம்பொருளின் ஐந்து தொழில்களுள் ஒன்றான காக்கும் தொழிலைச்செய்யும் தொழிற்கடவுளான திருமால் சங்கு சக்கரம் இரண்டையும் சிவபூசை முறையாகச் செய்து அதனைப் பரம்பொருள் சிவபெருமானிடமிருந்து பெற்றார்.

 

சங்கு பெற்ற கதை

 

சகோதர்களான அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட பலப்பல தெய்வீக அற்புதப் பொருட்களில் சங்கும் ஒன்று.

 

பாற்கடலில் தோன்றிய இந்தச் சங்கு ‘நமசிவாய’ என்ற பஞ்சவனான (ஐந்தெழுத்தன்) பரம்பொருளை அடைந்ததால் பாஞ்சஜைனம் எனப்பெயர் பெற்றது.

 

காப்போனைக் காக்கும் கடவுளான சிவபெருமான் திருக்கரத்தில் இருந்த இந்தச் சங்கினைப் பெறுவதற்குக் காக்கும் தொழிலைச் செய்யும் திருமால் விரும்பினார்.

 

சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து நியமம் தவறாமல் சிவ பூசை செய்தார்.

 

திருமால் ஆசைப்பட்ட மங்கலப்பொருளை சங்கினை சிவபெருமான் திருமாலுக்கு அருளிச் செய்தார்.

 

திருமால் சிவபூசை செய்து தெய்வீகச் சங்கினைக் கைக்கொண்ட திருத்தலம் திருச் சங்க மங்கை (திருச் சங்கம் அங்கை) எனப்பெயர் பெற்றது.

 

திருமாலுக்குச் சங்கினை அருளித் திருச்சங்க மங்கையில் எழுந்தருளியுள்ள சிவனுக்குச் சங்கநாதர், சங்கேசுவரர் என்ற திருநாமம் உண்டு.

 

இத்தலத்து இறைவனை, திருமால் வழிபட்டு தனது பச்சை நிறம் நீங்கிப் பவள நிறம் பெற்றார் என்று காஞ்சிப்புராணம் கூறுகிறது.

 

காஞ்சிபுரத்தில் பச்சை வண்ண பெருமாள்,பவள வண்ண பெருமாள்

என்கிற பெயர்களில் இன்றும் தரிசனம் செய்யலாம்.

 

சிவன் சக்கரம் பெற்ற கதை:-

 

ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி  தடுத்தார். கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தெளித்தார் சிவன். அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.

 

அவன் பெரியவனானதும், மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார்.

 

அதற்கு ஜலந்தராசூரன், ""தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்,'' என வரம் வாங்கி விட்டான்.

 

இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான்.

 

சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன் வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். ""இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும்,'' என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன், ""என் மனைவியின் கற்பின் திறனால், எனக்கு அழிவு வராது,'' என சவால் விட்டான்.

 

இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், "" நீர் ஜலந்தராசூரனைப் போல்  வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது.இந்நேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம், ""நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீயும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும்,'' என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது. பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீகுளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது

 

இந்த துளசியால் மாலைதொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது.

 

இந்த சக்கரம் தன்னிடம் இருந்தால், எதிர்காலத்தில் பயன்படும் என்று உணர்ந்தார் திருமால்.

 

பரம்பொருள் சிவபெருமானிடம் அதைப் பெறுவதற்காக வேண்டினார்

 

பூலோகத்தில் வீழிச்செடிகள் நிறைந்த ஒரு இடத்தில் (திருவீழிமிழலை) லிங்க வடிவில் தான் இருப்பதாகவும், அங்கு வந்து பூஜை செய்தால், சக்கரம் கிடைக்குமென்றும் சிவன் கூறினார்.

 

தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் லிங்க பூஜை செய்தார் திருமால். ஒருநாள், ஒரு பூ குறைந்தது. திருமால் சற்றும் யோசிக்காமல் தன் கண்ணை மலராகக் கருதி அதைப் பிடுங்கி பூஜையில் வைத்தார்.

 

அவரின் பூசையை மெச்சிய பரம்பொருள் சிவபெருமான், சக்தி வாய்ந்த அந்த சக்கரத்தைப் பரிசாக அளித்தார்.

 

சிவன் கையில் சக்கரம் காணவேண்டுமா?!

 

இதைக் காண வேண்டுமானால் திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் உள்ள திருவிற்குடி  வீரட்டானேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

 

சிவன் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய அஷ்ட வீரட்டத் தலங்களில் இது ஒன்று.

 

இங்கு சலந்தராசுரனை சக்கர ஆயுதத்தால் சிவன் அழித்தார்.

 

இங்கு எழுந்தருளியிருக்கும் சிவனின் திருநாமம் வீரட்டானேஸ்வரர். அம்மன், பரிமள நாயகி.

 

இங்கு சலந்தரனைச் சம்ஹரித்தமூர்த்தி - 'ஜலந்த்ரவதமூர்த்தி - தலச்சிறப்பு மூர்த்தி (உற்சவத்திருமேனி) தரிசித்து மகிழ வேண்டிய ஒன்று.

 

இவரது வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார். ஏனையகரங்களில் மான்மழு ஏந்தி, ஒருகை முத்திரை தாங்கியுள்ளது. அழகான ஐம்பொன் திருமேனி

 

இங்குள்ள சங்கு, சக்கர, ஞானதீர்த்தங்களினால் ஜலந்தரவத மூர்த்தியை அபிசேகம் செய்ய அவர்களின் தீராத துயரத்தினையும் தீர்த்து மஞ்சள்நிற மலர் அர்ச்சனையும், புளிசாத நைவேத்தியமும் செவ்வாயன்றுக் கொடுக்க விஷப்பூச்சிகள் அரவம் இவற்றினால் ஏற்படும் தொல்லை அழியும்.

 

இங்கு முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு, மயில் மீது தேவியருடன் அமர்ந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

 

வீடு கட்டும் முன் ஏதும் பிரச்னை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

 

முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : சங்கு சக்கரம் பார்த்தவுடன் நமக்கு சிவபெருமானின் ஞாபகம் வரவேண்டும்!. அதெப்படி? திருமால் அதைப் பெற்றார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா - குறிப்புகள் [ ] | Spiritual Notes : As soon as we see the conch wheel, we should remember Lord Shiva! How about that? Don't you want to know that Thirumal got it - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்