ஆரூரில் கிழக்கு ரத வீதியில் திருத்தேர் நிலையின் அருகில் உள்ளது.
ஆரூர்ப்பரவையுண்மண்டளி: (சோழநாடு) ஆரூரில் கிழக்கு ரத வீதியில் திருத்தேர் நிலையின் அருகில் உள்ளது. சுவாமி: தூவாய் நாயனார். பரவையுள்மண்டலேசுவரர். அம்பிகை: பஞ்சின் மெல்லடியம்மை. ஒரு காலத்து வருணன் இந்நகர் மீது அனுப்பிய கடலை உண்டமை பற்றி இத்தலத்திற்கு இப்பெயர் உண்டாயிற்று. துருவாசர் பூசித்த தலம். முனிவர் உருவம் விநாயகர் அருகில் உள்ளது. சுவாமியின் உருவம் கண்ணாடிபோல் பளபளப்பாக இருக்கும். இத்தலத்திலுள்ள சிறிய குளத்தில் மூழ்கிச் சுந்தரர் ஒரு கண் பார்வை பெற்றார். சுந்தரர் பாடிய தலம். திருவாரூர் சோழநாட்டுத் தேவாரம் பெற்ற சிவத் தலங்களில் ஒன்று; காவிரியின் தென்பாலுள்ளது. இதற்குரிய தேவாரப் பதிகங்கள்: 34.(திருஞா. பதிகம். 5; திருநா. 21 சுந். 8) திருவாசகம் முதலிய நூல்களிலேயும் இத்தலம் மிகவும் பாராட்டப் பெற்றுள்ளது. பதினோராந் திருமுறையில் உள்ள சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய திருவாரூர் மும்மணிக்கோவையும், பெரிய புராணத்திலுள்ள திருவாரூர்ச் சிறப்பும் இத்தலப் பெருமையை நன்கு விளக்கும். திருவாரூர் அரநெறி, பரவையுண்மண்டளி என்பன வாகிய பாடல் பெற்ற வேறு இரண்டு தலங்கள் இதனிடத்தே உள்ளன. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்ஆரூர்ப்பொது
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : ஆரூர்ப்பரவையுண்மண்டளி: (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Aururparavaiyunmandali: (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]