ஆவி பறக்க சுவையான அவல் இட்லி

குறிப்புகள்

[ சமையல் குறிப்புகள் ]

Aval Idli is delicious to fly in the spirit - Tips in Tamil

ஆவி பறக்க சுவையான அவல் இட்லி | Aval Idli is delicious to fly in the spirit

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அவலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த அவலைப் போட்டு அரிசி மாவு, தயிர், உப்பு எல்லாம் சேர்த்து தண்ணீர் விட்டு பதமாக இட்லி மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு மணிநேரம் ஊற விடவும். வேண்டுமென்றால் மீண்டும் சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு அரைக்கவும். கடைசியாக சோடா உப்பு சிறிதளவு சேர்த்து கலக்கி விடவும்.

ஆவி பறக்க சுவையான அவல் இட்லி:

ஹெல்தி ரெசிபி இங்க பாருங்க

 

அவல் இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

 

தேவையான பொருட்கள்:

 

அவல்- 1 கப் 

 

அரிசி மாவு- அரை கப் 

 

தயிர்- 1 கப் 

 

சோடா உப்பு - சிறிதளவு

 

உப்பு- அரை டீஸ்பூன் 

 

தண்ணீர்- தேவையான அளவு

 

செய்முறை

 

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அவலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் அரைத்த அவலைப் போட்டு அரிசி மாவு, தயிர், உப்பு எல்லாம் சேர்த்து தண்ணீர் விட்டு பதமாக இட்லி மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.  

 

அடுத்து ஒரு மணிநேரம் ஊற விடவும்.  வேண்டுமென்றால் மீண்டும் சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு அரைக்கவும். கடைசியாக சோடா உப்பு சிறிதளவு சேர்த்து கலக்கி விடவும்.

 

இப்போது அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து இட்லி தட்டில் எப்போதும் போல் இட்லி ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவை,  ஹெல்தியான அவல் இட்லி ரெடி. வேண்டுமென்றால் புளித்த இட்லி மாவு இருந்தால் சேர்த்துக் கொண்டும் இட்லி ஊற்றலாம். 

 

 

வாழ்க வளமுடன்

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

சமையல் குறிப்புகள் : ஆவி பறக்க சுவையான அவல் இட்லி - குறிப்புகள் [ ] | cooking recipes : Aval Idli is delicious to fly in the spirit - Tips in Tamil [ ]