வந்தவாசி - காஞ்சிபுரம் வழியில் உள்ளது தென்னாங்கூர். இந்தத் தென்னாங்கூர் எழில் நிரம்பிய சிறு கிராமம்தான்!
பாண்டுரங்கன் கோயில்!
வந்தவாசி - காஞ்சிபுரம் வழியில் உள்ளது
தென்னாங்கூர். இந்தத் தென்னாங்கூர் எழில் நிரம்பிய சிறு கிராமம்தான்! இங்கே, ஒடிசா மாநிலத்து பூரி ஜெகநாதர் ஆலயத்தைப்
போன்ற பிரம்மாண்ட தோற்றத்துடன் ஸ்ரீ பாண்டுரங்கன் கோயில் அமைந்திருக்கின்றது.
120 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் உச்சியில், ஒன்பதரை அடி உயரமுள்ள தங்கக் கலசமும்
அதன்மேல் அற்புதமான சுதர்சன சக்கரமும், பட்டொளி வீசிப் பறக்கும் காவி வண்ணக்கொடியும் காண்போரை பிரமிப்பில்
ஆழ்த்தும் விதமாக உள்ளது. அதே சமயம், கிழக்கே உள்ள ராஜகோபுரத்தின் அம்சம் தமிழகக் கட்டடக் கலையோடு
திகழ்கின்றது!
கோவிலினுள் நுழைந்ததும் பலிபீடமும், அடுத்து நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த
பதினாறு கால் மண்டபமும் உள்ளன. நடுவில் கருடாழ்வார் சேவை சாதிக்கிறார். முழுவதும் சலவைக் கற்களால் அமைக்கப்பட்ட தியான மண்டபம்
பார்க்க வெகு அழகாக இருக்கின்றது. விழாக்காலங்களில் ஸ்ரீ பாண்டுரங்கன் இந்த மண்டப ஊஞ்சலில்
எழுந்தருளுகின்றார்!
மகா மண்டபத்தினுள் கண்ணனின் லீலா வினோதங்கள், கண்ணாடியில் இழை ஓவியங்களாகக் காட்சியளிக்கின்றன.
மேற்கூரையில் விஷ்ணு தன் பத்து அவதார வண்ண ஓவியங்களால் நம்மை ஆசிர்வதிக்கின்றார். பலவகையான ஆபரணங்கள்
அணிந்து பாண்டுரங்கனும். ரகு மாயியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி அருள்கின்றனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் ராஜஸ்தானின்
பாரம்பரிய ராஜ அலங்காரத்துடன் சுவாமி தரிசனம் தருகின்றார்! வெள்ளிக் கிழமைகளில் விஷேச
திருமஞ்சனத்திற்கு பின், கவசம், ஆபரணம் ஏதுமின்றி எளிமையாகக் காட்சியளிக்கிறார்
ஸ்ரீபாண்டுரங்கள். அன்றைய தினம் பாத தரிசனமும் காணலாம்.
பிரதி சனிக்கிழமையில் எம்பெருமானும், எம்பெருமாட்டியும் திருப்பதி ஏழுமலையான்
அலர்மேல் மங்கைத் தாயாராகக் காட்சி யளித்து, பக்தர்களின் ஏழ்மையை விரட்டிப் பாதுகாப்புத் தருகின்றார்கள்.
துவாபர யுகத்தில் கிருஷ்ணன், 'தமால
மரத்தடியில் நின்று புல்லாங் குழல் கானம் இசைத்திருக்கிறார். அந்த தமால மரமே இத்தலத்தின்
தல விருட்சமாக உள்ளது.
மழலைச் செல்வம் வேண்டுவோர் இத்திருக்கோயிலுக்கு
அனுதினமும் வந்து தரிசித்துச் செல்கிறார்கள். கல்வி, செல்வ வளம் அனைத்தையும் வேண்டி வருவோர்க்கெல்லாம் வாரி வழங்கும்
அற்புத ஆலயம் இது!!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : பாண்டுரங்கன் கோயில்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Bandurangan Temple! - Perumal in Tamil [ Perumal ]