மனச்சுமை அகற்றி, குடும்பத்தில் நிம்மதி ஏற்படுத்தும் ஸ்ரீ கடம்பவனேஸ்வரரர் ஆலயம், கரூர் மாவட்டத்தில் திருச்சியிலிருந்து கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் அழகுற அமைந்திருக்கிறது.
குளித்தலை - கடம்பவனேஸ்வரர் ஆலயம்!
மனச்சுமை அகற்றி, குடும்பத்தில் நிம்மதி ஏற்படுத்தும்
ஸ்ரீ கடம்பவனேஸ்வரரர் ஆலயம், கரூர்
மாவட்டத்தில் திருச்சியிலிருந்து கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் அழகுற அமைந்திருக்கிறது.
நாள்தோறும் இங்கே பக்தர்கள் கூட்டம் மிகுதியாக வரக்காரணம், இவ்வாலயத்தில் அருள்புரியும் ஸ்ரீ கடம்பவனநாதரும், அருள்மிகு பாலகுஜாம்பிகை என்றழைக்கப்படும்
திருவேணி அன்னை, மற்றும் கன்னிமார் எழுவரும்தான் மிக
சக்தி படைத்த ஆலயமிது.
கோவிலுக்கு வடக்கே அகண்ட காவிரி ஓடுகிறது.
இக்கோவில் இரண்டு பிரகாரங்களைக் கொண்டிருக்கிறது. கோவிலைச் சுற்றி தேரோடும் வீதி உள்ளது.
கோவிலின் நுழைவு வாயிலுக்கு முன்புறம் ஒரு மண்டபம் இருக்கிறது. தென்கிழக்கு மூலையில்
பிரம்ம தீர்த்தமும், வடமேற்கு
மூலையில் நவராத்திரி மண்டபமும், இதன்
அருகில் அம்பாள் சன்னிதி கிழக்கு நோக்கியும் அமைந்திருக்கிறது. அம்பாள் சன்னிதிக்கு
முன்புறத்தில் சுவாமி சன்னிதியும், அம்பாளுக் சூரிய கொடி மரம், பலி பீடங்கள் இருக்கின்றன.
கோவிலின் உட் பிரகாரத்தில் வட கிழக்கில்
நடராஜர் சன்னிதியும். கருவூலமும், நவக்கிரகங்களும், சண்டிகேஸ்வரர் சன்னிதியும் உள்ளன. தெற்கில்
ஜேஷ்டாதேவி, நால்வர், அறுபத்து மூவர், சேக்கிழார் சன்னிதிகளும், மேற்கில் விஸ்வநாதர், விநாயகர், சுப்ரமணியர், சோமாஸ்கந்தர், கஜ லட்சுமி சன்னிதிகளும் காணப்படுகின்றன.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ கடம்பவனேஸ்வரர்
வீற்றிருக்கிறார். மூலவரின் பின்புறத்தில், ஏழு சப்த கன்னியர்கள் வீற்றிருக்கிறார்கள்.
ஒருசமயம் துர்க்கைக்கும், 'தூம்ரலோசன்' என்கிற அரக்கனுக்கும், கடும்போர் நடந்தது. அப்போரில் அரக்கனின்
கை ஓங்கியது/ இதனைக் கண்ட ஏழு சப்த கன்னியர், அரக்கனை மிகுந்த கோபத்துடன் எதிர்த்துப் போரிட்டனர். ஏழு கன்னிகளது
கணைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அரக்கன் போர் புரிவதை நிறுத்தி விட்டு ஓடலானான்.
அவ்வாறு ஓடும்போது கடுந்தவம் இயற்றிக்
கொண்டிருந்த காத்தியாயன முனிவரது ஆசிரமத்தினை அடைந்து மறைந்தான். துரத்திச் சென்ற சப்த
கன்னிகள் அரக்கனே முனிவராக வேடம் பூண்டு உள்ளான் என எண்ணி முனிவரை வதம் செய்தனர். இதனால்
அவர்களைப் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது! எங்கு சென்று தரிசித்தும் அந்த தோஷம்
நீங்காமல் போக, கடைசியாக கடம்பனேஸ்வரரின் ஆலயம் வந்து, இறைவனை தரிசித்து பிரம்மஹத்தி தோஷம்
நீங்கப் பெற்றனர் என்பது தலவரலாறு. இன்றும் இக்கோவிலின் மூலஸ்தானத்தில் மூலவருக்குப்
பின்புறத்தில் ஏழு கன்னிகளது உருவங்கள் அடங்கிய கல் உள்ளது. மூலவரைத் தரிசிக்கும் அனைவரும்
ஏழு கன்னிகளையும் தரிசிக்கின்றனர்.
இத்திருத்தலத்திற்கு 'வடமதுரை' என்கிற பெயரும் உண்டு. அம்பாளுக்கும், சுவாமிக்கும் முறையே ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீசுந்தரேஸ்வரர் என்கிற திருப்பெயரும்
உண்டு.
கோயில் நடை காலை 5.30 மணிக்கே திறக்கப்படுகிறது. வட இந்தியாவில் உள்ள காசியைப் போல் தென்னிந்தியாவில் வடக்கு நோக்கியுள்ள சிறந்த தலம் இது என்பதால், 'தட்சிண காசி' என்றும் இவ்வாலயம் அழைக்கப்படுகிறது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : குளித்தலை - கடம்பவனேஸ்வரர் ஆலயம்! - தட்சிண காசி [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Bathing - Kadambavaneswarar Temple! - Dakshina Kashi in Tamil [ spirituality ]