நீராடும் பெருமாள்...

பெருமாள்

[ பெருமாள் ]

Bathing Perumal... - Perumal in Tamil

நீராடும் பெருமாள்... | Bathing Perumal...

மகாவிஷ்ணு, ஸ்ரீ மகாலட்சுமியோடு வாசம் செய்யும் வைகுண்டக் காட்சி பார்த்த மாத்திரத்தில் பரவசம் தரக்கூடியது.

நீராடும் பெருமாள்...

 

மகாவிஷ்ணு, ஸ்ரீ மகாலட்சுமியோடு வாசம் செய்யும் வைகுண்டக் காட்சி பார்த்த மாத்திரத்தில் பரவசம் தரக்கூடியது. அப்படியொரு காட்சியைத் திருப்பதி சென்றாலும் தரிசித்து மகிழலாம்!

 

திருப்பதியில் உள்ள தெப்பக்குளத்திற்கு 'சுவாமி புஷ்கரணி' என்று பெயர். மகா விஷ்ணு வாசம் செய்யும் ஸ்ரீவைகுண்டம் போல காட்சியளிக்கும் இதை கருடபகவான் ஸ்ரீவெங்கடாஜலபதிக்காக அமைத்ததாகக் கூறுகிறார்கள்.

 

திருப்பதி வரும் பக்தர்கள் இந்தக் குளத்தில் நீராடுகிறார்கள். இந்தத் தீர்த்தத்தில் மூன்று கோடி தீர்த்தங்கள் கலந்திருப்பதாக ஐதீகம்!!

 

மார்கழி மாதத்தில் 12வது நாளில் 'முக்கோட்டி துவாதசி' என்கிற வைபவம் இந்தக் குளக்கரையில் நடக்கும். அன்று ஏழுமலையான் இந்தக் குளத்தில் நீராடுவதாக நம்பிக்கை. அந்த நாளில் கங்கை நதியும் இந்தத் தீர்த்தத்திற்கு வந்து நீராடி, தன்னிடம் சேர்ந்துள்ள பாவங்களை போக்குவதாகச் சொல்லப்படுகிறது.

 

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இங்கு தெப்பத் திருவிழா நடக்கும். இது தவிர, புரட்டாசி பிரம்மோற்சவத்தின் கடைசி நாளில் 'சக்ர ஸ்தானம்' என்னும் நிகழ்ச்சி இந்தத் தீர்த்தத்தில் நடத்தப்படுகின்றது.

 

மேலும், தை மாதத்தில் ராமகிருஷ்ண தீர்த்தத் திருவிழாவும், மாசி பவுணர்மியில் குமார தாரா தீர்த்தத் திருவிழாவும், பங்குனி பவுணர்மியில் தும்புரு தீர்த்தத் திருவிழாவும், கார்த்திகை மாத துவாதசியில் சக்ர தீர்த்தத் திருவிழாவும் இந்தத் தெப்பக்குளத்தில் நடத்தப்படுகிறது!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

பெருமாள் : நீராடும் பெருமாள்... - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Bathing Perumal... - Perumal in Tamil [ Perumal ]