குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது.
குல தெய்வம் பற்றி அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்
1) குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம்
தெரியாமல் போகக்கூடாது.
2) குருவை மறந்தாலும் குல தெய்வத்தை
மறக்ககூடாது.
3) குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ
வழிபாடு.
4) சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது.
குலதெய்வத்திற்கு மிஞ்சிய தெய்வமும் கிடையாது.
5) குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை
உண்டு.
6) குலதெய்வத்தால் ஆகாத காரியமில்லை.
எமனே இருந்தாலும் ஒரு உயிரை கூட அவர்களுடைய குலதெய்வத்தின்
அனுமதி பெறாமல் உயிரை எடுக்க முடியாது அந்த அளவுக்கு குல தெய்வ சக்தி இருக்கிறது.
7) குலதெய்வத்தை வணங்குங்கள். நம்முடைய
வம்சத்தை, பரம்பரையை விருத்தியாக்க, காக்க, உருவாக்க முதலில் ஓடி வரும் தெய்வமே நம்முடைய
குலதெய்வம் தான்.
8) வாழ்வதற்கு காற்று எப்படி அவசியமோ
அதுபோலத் தான் குலம் தழைக்கவும் குலதெய்வம் ரொம்ப அவசியம்.
9) நம்முடைய மற்ற இஷ்ட தெய்வம் எவ்வளவு
சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், முதலில் குலதெய்வத்தையே நாம் வணங்க
வேண்டும்.
10) குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க
வல்லவை.
11) குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினைத் தரும். கருங்காலி கோல் மேலும் மற்ற தெய்வங்களின் வழிபாடுகளின்
பலன்களையும் பெற்றுத் தரும்.
12) குலதெய்வம் பெரும்பாலும் சிறு
தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிட முடியாது. சிறுதெய்வம் என்று
அலட்சியப்படுத்தக்கூடாது.
13) குலதெய்வம் என்பது நமது முன்னோர்கள்
தான். அவர்கள் வாழ்ந்து, தெய்வமாக மாறி நம்மை ஆசீர்வாதம் செய்யக் கூடிய புண்ணிய
ஆத்மாக்கள் அவர்கள்.
14) அப்படிபட்ட புனித ஆத்மாக்கள் தங்களுடைய
குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவர்கள்.
15) எனவே தான் அந்த தெய்வங்கள் அனைத்தும்
குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றது.
16) ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து ஆலமரம்
போல விழுதுகள் இட்டு அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக அவசியம்.
17) குலதெய்வ தோஷம் இருந்தாலே மற்ற
தெய்வங்களின் ஆசிகள் நமக்கு கிடைக்காது.
18) குலதெய்வத்தின் அனுமதி அல்லது
அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்ன தான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும்
எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம் தான்.
19) இந்த குலதெய்வம் மனிதனுடைய லௌகீக [இல்லற]
வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளித்து சீரும் சிறப்புடன் வாழச் செய்யும்.
20) குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர்
ஒழுங்காக கடைபிடித்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் எதுவும் செய்துவிட
முடியாது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
21) குலதெய்வ வழிபாட்டை முக்கியம்
என்று வலியுருத்துவதற்கு காரணமே குலதெய்வம் மட்டுமே ஒருவருக்கு நன்மை செய்யும்.
22) வேறு தெய்வங்களை நீங்கள்
வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீக வழிகளில்
முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.
23) தெய்வங்களில் மிகவும் வலிமையான
தெய்வம் குலதெய்வம் ஆகும்.
24) குலதெய்வத்தை மறப்பது நம் அம்மா,
அப்பாவை மறப்பது.
25) குலதெய்வ வழிபாட்டை மறப்பது தாயை
பட்டினி போடுவதற்குச் சமம்.
26) குலதெய்வ வழிபாட்டினால் மட்டுமே தீராத
நோய்களுக்கு வழி கிடைப்பது, பரிகாரம் பெறுவது, கல்வி,
தொழில் விருத்தி கிடைப்பது, திருமணம் அமைவது, குழந்தை
பலன் பெறுவது இது போன்ற பல பயன்களை நாம் பெறலாம்.
27) குலதெய்வ வழிபாடு இல்லாமல் எந்தவித
பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்தாலும் அவற்றின் பலன்கள் முழுமையாக கிடைக்காது.
28) குலதெய்வத்தின் அருள் இல்லை
என்றால் அந்த வீட்டில் நீங்கள் எவ்வளவு பெரிய மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு
புண்ணியமும் கிடைக்காது.
29) குலதெய்வ வழிபாட்டை நாம்
கடைபிடித்து வந்தால் நவக்கிரகங்களும் நம்முடன் துணை நிற்கும்.
30) துன்பமான காலத்தில் நம் தாயை போல நம்மை
காப்பது நம்முடைய குலதெய்வமே ஆகும்.
31) நாள் செய்யாததை கோள் செய்யும்.
கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்.
32) குலதெய்வம் சாபமிடாது. வழிபடவில்லை
என்று மனது வருத்தப்படும். அதனால் வீட்டில் நடைபெறக் கூடிய சில நல்ல விசயங்கள் கூட
தள்ளி போகும். ஆகவே அனைவரும் தவறாமல் குலதெய்வ வழிபாட்டை செய்து வர சந்தோசம் இரட்டிப்பாகும்.
33) ஒருவர் எந்த வழிபாடு
செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே
கூடாது. அது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும்
34) குலதெய்வத்தின் அருளால் நம்
இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும்.
35). குலதெய்வ வழிபாடு என்பது மிகவும்
அவசியமான ஒன்றாகும்.
36) நாம் நம் குலதெய்வத்தை வழிபடும்
போது நமக்கு வரும் வினைகள் [இன்னல்கள்] யாவுமே நல்வினையாக மாறும். குல
தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
37) உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை
அலங்கரித்து பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனமுருக
வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
38) நீங்கள் ஒரு வேளை குலதெய்வ
வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள்.
வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை.
39) மற்ற தெய்வத்திற்கும், குல தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று
நீங்கள் கேட்டால் அதற்கான பதில் தான் இது. அதாவது மற்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற
பிள்ளைகள். குலதெய்வத்திற்கு உங்கள் வம்ச வழிதான் பிள்ளைகள்.
40) குலதெய்வத்தை மறப்பது பெற்றோரை
மறப்பது போன்றது.
41) எவன் ஒருவன் இப்படி தான் வணங்கி
வந்த குலதெய்வத்தை உதாசீனப்படுத்துவார்களோ அவர்கள் தனது பெற்ற தாயாரையே
உதாசீனப்படுத்தியது போலாகும். ஆகவே அவர்களுடைய அடுத்த ஏழு வம்சாவளிகளுக்கும் நல்ல
வாழ்க்கை அமைவதற்கான வாய்ப்புகள் குறைவு..
42) குலதெய்வத்தைப் பக்தியோடு
கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம்
வாழ்வும் சிறப்பாகிறது.
43) பல தெய்வங்களை வழிபாடு செய்து
வரலாம். ஆனால் அந்த தெய்வங்கள், குலதெய்வங்கள் ஆகாது.
44) இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு
அடுத்ததுதான்.
45) மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின்
அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
46) குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல்
எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை.
47) ஆண்டியை அரசனாக்குவதும் அரசனை
ஆண்டி ஆக்குவதும் நம் குலதெய்வமே.
48) அவரவர் குலதெய்வத்தின் படத்தினை
வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.
49) குலதெய்வம் நம்மை கண்ணின் இமைபோல்
காத்து நிற்கும்.
50) குலதெய்வத்தினை விட உயர்ந்த
தெய்வம் உலகில் இல்லை.
நம்முடைய குலத்தை கண்ணைப் போல் காக்கும் தெய்வங்களை தான் குலதெய்வங்கள் என்று அழைக்கிறோம். நம் அனைவரும் குலதெய்வத்துக்குப் படையலிட்டுப் பிரார்த்தனைகள் செய்வது அனைவருக்கும் தெரிந்த வழிபாடு. குல தெய்வங்களே நமக்கு ஏற்படும் தடைகளை சரி செய்து நம்மை முன்னேற்ற வழிகளில் அழைத்துச்
செல்லும். அது மட்டுமல்ல நமக்கு மற்ற தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்கு கிடைத்திட வழி செய்யும் தெய்வமே இந்த குலதெய்வம் தான். அதனால் குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் அவசியமானது. குலதெய்வம் என்பது நம்மைப் போலவே மனிதர்களாய் வாழ்ந்த நமது முன்னோர்கள் அல்லது அடிப்படையில் நம் பூர்வீகத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பவர்களையே குல தெய்வம்
என்கிறோம். இவர்களை தான் நாம் குலசாமிகளாக வழிபட்டு போற்றி வணங்கி வருகிறோம். நாம் தினமும் குலதெய்வத்தை வணங்கி, மாதத்துக்கு
ஒருமுறையேனும் நாமும் நம் குடும்பமாக குலதெய்வக்
கோயிலுக்கு சென்று அருள் பெற வேண்டும். குறிப்பாக அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில்
குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் நல்லது. நம்மால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்தும், குலதெய்வக் கோயிலுக்கு திருப்பணிகளைச் செய்ய நம்மால் முடிந்த அளவுக்கு பண உதவி செய்தும் வர நம் வம்சம் வளமாகும். குலதெய்வ வழிபாடு
செய்வது என்பது அவ்வளவு பெரிய கஷ்டம் எல்லாம் பட வேண்டாம். தினமும் நம் குலதெய்வத்தை நினைத்து வணங்கி, வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றி
குலதெய்வத்தினுடைய பெயரை மூன்று முறை உள்ளம் உருகி
உச்சரித்தால் போதும். உடனே குலதெய்வம் உங்கள் வீட்டில் வந்து தங்கி உங்கள் குடும்பத்தை காக்கும் வல்லமை சக்தி
குலதெய்வத்தை தவிர வேற எதற்கும் கிடையாது. ஆண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே தினமும் குலதெய்வ
வழிபாடு செய்து விட்டு, வேலைகளை தொடங்கினால், நல்லபடியாக அந்த
நாள் நீங்கள் நினைத்த மாதிரி சிறப்பை தரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மேலும்
குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று அங்கு வழிபாடு செய்து முடித்து விட்டு, அங்குள்ள ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்துக் கொண்டு அதாவது குடும்ப தலைவன், தலைவி இருவரும் கையால் மண் எடுத்து மஞ்சள் நிற துணியில் வைத்து முடிந்து கட்டி பூஜை அறையில் வைத்து கொள்ள வேண்டும். மேலும் இதில் மஞ்சள் தூளை மட்டும் கலந்து, செம்புத்தகட்டில்
உங்களுடைய குலதெய்வத்தின் பெயரையும் எழுதி, வைத்து பத்திரமான ஒரு இடத்தில் வைக்க
வேண்டும். தினமும் இந்த
முடிச்சுக்கும் விளக்கு ஏற்றும் போது ஒரு சுத்து ஊதுவத்தியை
காண்பித்து பூஜை செய்து விடுங்கள். உங்கள் வீடுகளில் ஒரு கைப்பிடி மண் இருப்பது என்பது அந்த குலதெய்வமே நம் வீட்டில் நம்மோடு எப்போதும் வாசம் செய்வதாக அர்த்தம் ஆகும். எந்த தெய்வத்தையும் வழிபடுவதற்கு முன்பாக
முதலில் நாம் பிள்ளையாரை வழிபட்டு தான் அடுத்தடுத்த
தெய்வங்களை வழிபடுவது நம்முடைய வழக்கமாக வைத்து இருக்கிறோம். அதுபோலத் தான் எந்தத் தெய்வத்தை வழிபடுவதாக இருந்தாலும் நாம் முதலில்
வழிபட வேண்டியது
குலதெய்வ வழிபாடு மட்டுமே. நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். நம்மை நம்
குலதெய்வம் காக்கும்.
தமிழர் நலத்தின் சார்பாக அனைவருக்கும்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை
பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீகம் : குல தெய்வம் பற்றி அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | spirituality : Be sure to know about the family deity - Spiritual Notes in Tamil [ spirituality ]