பிரதோஷ பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள்

சிவன் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Benefits of doing Pradosha Puja - sivan - Spiritual Notes in Tamil

பிரதோஷ பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் | Benefits of doing Pradosha Puja

குறைகள் பல உடைய இந்த மனித வாழ்வை நிறைவுடையதாக்கிக் கொள்ளவே நாம் கடவுளை வழிபடுகிறோம்.

பிரதோஷ பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள்


குறைகள் பல உடைய இந்த மனித வாழ்வை நிறைவுடையதாக்கிக் கொள்ளவே நாம் கடவுளை வழிபடுகிறோம். சிவனாருக்குச் செய்யப்படும் வழிபாடுகளில் முக்கியமான பிரதோஷ வழிபாட்டால் கிட்டும் பலன்கள் பலப்பல.


1. நோய் நீங்கி நலம் பெறுவர்


2. கடன் நீங்கி தனம் பெறுவர் 


3. துன்பம் நீங்கி இன்பவாழ்வு பெற்றிடுவர்


4. முக்தி அடைந்திடுவர் 


5. பாவங்கள் ஒழிந்து புண்ணியம் பல கோடி கிட்டும்


6. அறியாமை இருள் நீங்கி ஞானம் பெறுவர்


7. மழலைச் செல்வம் கிட்டும்


8. செல்வச்செழுமை கிட்டும்.


சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினங்களில் (மாலை 4.30 முதல் 7 மணி வரை) ஆலயத்தில் வழிபாடு செய்தால் ஒரு வருடம் தினமும் ஆலயம் சென்ற பலன் கிட்டும்.


பிரதோஷ தினங்களில், அன்று முழுவதும் உபவாசம் இருத்தல் அவசியம்.


பிரதோஷ பூஜை செய்யும் முறை!

இங்கு கொடுக்கப்பட்டுள்ள "பிரதோஷ பூஜை' முறையானது, ''சாண்டில்ய முனிவர்" அருளிச் செய்த முறையாகும்!

ஒவ்வொரு மாதத்திலும் இரு பக்ஷங்களிலும் அஸ்தமனம் ஆவதற்கு மூன்று நாழிகைக்குன் ஸ்நானம் செய்து ப்ரதோஷ விரத பூஜையை ஆரம்பிக்க வேண்டும். முறையோடு அனுஷ்டிக்க வேண்டும். அன்று மௌனமாக இருப்பது மிக விசேஷம்.

வில்வம் சிவனுக்கு மிகப் ப்ரியமானதால் பூஜைக்கு சிவனுக்கு ப்ரியமான வில்வ தளத்தை உபயோகிப்பது மிகவும் விசேஷமாகும்.


விக்நேச்வர பூஜை

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்நோப சாந்தயே

ஓம்பூ: ஸுவரோம். மமோபாத்த ஸமஸ்த துரி க்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: அவிக் நேநீ பரிஸமாப்யர்த்தம் ஆதௌ மஹா கணபதி பூஜாங்க ரிஷ்யே. (கை அலம்ப வேண்டும்) மஞ்சளால் பிள்ளையார் பிடித்து அதில் ஷோடச உபசார பூஜை செய்ய வேண்டும். 


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷ பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Benefits of doing Pradosha Puja - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]