அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியை வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்தவரும் சஷ்டி தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. நதிகளில் புனிதமானது கங்கை. மலர்களில் சிறந்தது தாமரை. விரதங்களில் சிறப்புமிக்கது கந்தசஷ்டி விரதம் ஆகும். முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப்பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.
சஷ்டி விரதத்தை கடைப்பிடிப்பதால் உண்டாகும் பலன்கள்
!!
அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியை வளர்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்தவரும் சஷ்டி தேய்பிறை சஷ்டி என்றும்
அழைக்கப்படுகிறது.
நதிகளில் புனிதமானது கங்கை. மலர்களில் சிறந்தது தாமரை. விரதங்களில்
சிறப்புமிக்கது கந்தசஷ்டி விரதம் ஆகும். முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும்
விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம்.
சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சஷ்டி விரதம் என்பது
மிகப்பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வரியத்தை தரக்கூடியது
6 என்ற வழக்கு ஜோதிடத்தில்
உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய
கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக
கருதப்படுகிறார்.
“சஷ்டியிலிருந்தால் அகப்பையில்” வரும் என்று கூறுவார்கள். அதாவது இந்த சஷ்டி தினத்தன்று குழந்தையில்லாப்
பெண்கள் விரதமிருப்பதால், அவர்களின் உடலின் குறைகள் நீங்கி முருகனின் அருளால் பெண்களின்
“அகப்பையாகிய” “கருப்பையில்” குழந்தை உருவாகும் என்று கூறப்பட்டது. இப்பழமொழியே காலவெள்ளத்தில்
“சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்று
மறுவிவிட்டது.
இவ்விரதத்தை மாதந்தோறும் வரும் சஷ்டி தினத்தன்று மேற்கொள்வதால்
நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலாரோக்கியம் மேம்பட்டு, அந்நோய்கள் படிப்படியாக நீங்கும்.
இவ்விரதத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு அந்த முருகப்பெருமானின்
அருளால் மிகுந்த செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் கிட்டும்.
குழந்தை வரம் தரும் விரதங்களில் முதன்மையான விரதமாக கந்த சஷ்டி விரதமே போற்றப்படுகிறது.
முருகப் பெருமானுக்கு உரிய சஷ்டி விரதத்தினை, நாம் முடிந்தவரை அனுஷ்டித்தால், அனைத்து நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியாக வாழலாம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
முருகன்: வரலாறு : சஷ்டி விரதத்தை கடைப்பிடிப்பதால் உண்டாகும் பலன்கள் - முருகன் கடவுள் [ ] | Murugan: History : Benefits of observing Shashti Vrat - Murugan God in Tamil [ ]