பிரதோஷத்தின் பலன்கள்

சிவன் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Benefits of pradosha - sivan - Spiritual Notes in Tamil

பிரதோஷத்தின் பலன்கள் | Benefits of pradosha

பிரதோஷ பூஜை செய்பவர்கள் அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.

பிரதோஷத்தின் பலன்கள்


பிரதோஷ பூஜை செய்பவர்கள் அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள். பதினோரு பிரதோஷங்கள் தொடர்ந்து பூஜிப்பவர்கள் ஒரு கும்பாபிஷேகத்தைக் கண்ட பலனைப் பெறுவார்கள். நூற்று இருபது பிரதோஷங்களைத் தொடர்ந்து பூஜிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று அருளாளர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள்.

பிரதோஷ தினத்தன்று பகல் முழுதும் உபவாசம் இருந்து, சிவ சிந்தையுடன் சிவபுராணம், சிவ நாமாவளி களைப் படித்து, முடிந்தவர்கள் மௌன விரதம் இருந்து, மாலையில் சிவாலயம் சென்று, பிரதோஷ வைபவத் தில் கலந்து கொண்டு, நந்திக்குப் பச்சரிசி வெல்லம் படைத்து, நெய் தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும்.

பிரதோஷ வைபவம் முடிந்து வரும் பொழுது, வேதம் ஓதும் வேதியர்க்குத் (பிராமணர்களுக்கு) தானம் வழங்குதல் நலம்.

சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே உணவுண்டு பிரதோஷ விரதத்தை முடிக்கவும்.

பிரதோஷ விரதத்தைத் தவறாமல் அனுஷ்டிப்பவர்கள் கடன் தொல்லைகளாலும் வறுமையாலும் அல்லல் படுபவர்கள் செல்வச் செழிப்பை அடைவார்கள்.

தீராத நோய் நொடிகளிலிருந்து விடுபட்டு நோயற்ற வாழ்வைப் பெற்றுச் சுகமாக வாழ்வார்கள்.

மாணவர்கள் நினைவாற்றல் பெருகி, மனமயக்கம் விலகி, தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பிரதோஷத்தின் பலன்கள் - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Benefits of pradosha - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]