கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம். உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்...
கந்தர் சஷ்டி கவசத்தைச்
சொல்லுவதால் ஏற்படும் பயன்கள்...
கந்தர் சஷ்டி கவசம் சொல்லும் போது நம்
உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களையும் ஒவ்வொரு வேல் காக்குமாறு பிரார்த்திக்கிறோம்.
உதாரணமாக ஒரு சில வரிகளைப் பார்ப்போம்...
கதிர்வேல் இரண்டும்
கண்ணினைக் காக்க!
விதிச்செவி இரண்டும்
வேலவர் காக்க!
நாசிகளிரண்டும் நல்வேல்
காக்க!
பேசிய வாய் தனைப்
பெருவேல் காக்க!
கன்னமிரண்டும் கருனைவேல்
காக்க!
என் இளங்கழுத்தை
இனியவேல் காக்க!
என்று இப்படியே உடலில் ஒரு அங்கம்
விடாமல் வேல் காக்க என்று கூறுகிறோம்.
இப்படி தினசரி நாம் வாயால் ஒவ்வொரு
அவயவங்களைப் பற்றி சொல்லும் போது நமது மனது அந்த அங்கத்தில் நிலை கொள்கிறது. மனது
தியானிக்கும் அங்கத்தினை நமது மூளை தானாகவே ஒருசில வினாடிகள் கூர்ந்து
கவனிக்கிறது. இப்படி மூளையின் தனி கவனத்திற்க்கு வரும் போது அந்த பாகத்திற்குரிய
மூளையின் செயல்பாடுகள் சிறப்படைகிறது. இப்படி தினசரி மிகவும் அமைதியான மனநிலையில்
நாள் இருமுறை நம் உடல் பாகத்தினை மூளையின் கவனத்திற்க்கு கொண்டு வந்தால் உடலின்
சிறு சிறு குறைபாடுகளை மூளை தாமாகவே சரி செய்து கொள்ள தூண்டுதலாக அமையும்.
மனோவைத்திய ரீதியாக உடல் நோய்களைப்
போக்க முடியும் என்று தற்காலங்களில் நாம் ஆராய்ச்சியாளர்கள் சொல்லி கேட்பதில்லையா!
இன்றைக்கு ஆராய்ச்சி என்று சொல்லி வெள்ளைக்காரன் கண்டுபிடித்ததாகச் சொல்லுவதை நம்
முன்னோர்கள் ஏற்கனவே கண்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றைப் பயன்பாட்டில்
செயல்படுத்தியும் வந்திருக்கிறார்கள்.
இந்த மனோவைத்திய முறை நம் வாழ்க்கை
முறையாகவும் இருக்கிறது.
கந்தர் சஷ்டியை தினசரி சொல்லும் போது
நம் உடல் முழுவதும் மூளை செயல்பாடு அதிகரிப்பதால் இது ஒரு பாதுகாப்பு கவசமாக
இருப்பதாலேயே இதை கந்தர் சஷ்டி கவசம் என்று கூறினார்கள்.
இந்த கவசத்தில் வரும் வரிகளில் நவகோள்
மகிழ்ந்து நன்மை அளித்திடும் என்று ஒரு வரி உண்டு. வார்த்தைகளால் சொல்லும்
மந்திரத்தினால் நவகோள்கள் எப்படி நன்மை செய்யும் என்றும் தோன்றலாம். நவ
கிரகங்களின் மாறுதல்களால் பூமியின் மீதே பாதிப்பு ஏற்படும் போது மனித உடலில்
பாதிப்பு ஏற்படாதா என்ன?
கிரகங்களின் மற்றத்தால் நமது உடலில்
ரத்த ஓட்டம் மற்றும் வாத பித்த பாதிப்புகள் ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் எந்த ஒரு
வியாதிக்கும் இவற்றில் ஏற்படும் மாற்றமே அடிப்படை. ஆனால் கவசம் படிப்பதன் மூலமாக
தினசரி மூளை நமது உடலை உற்று நோக்கி தானே தன்னைச் சரி செய்யும் வேலையை செய்து
கொண்டே இருப்பதால் நவ கோள்களால் ஏற்ப்படும் உடல் மாறுபாடு கூட பாதிப்பை
ஏற்படுத்தாது என்பதே இதன் சாரம். அதையே நவகோள்கள் கூட மகிழ்ந்து நன்மை அளிப்பதாக
கூறினார்கள்.
இப்படி கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து
படிப்பதில் மனோரீதியான நன்மைகள் உள்ளன.
ஆனால் ஆராயாமலே தற்க்காலத்தில்
எல்லாவற்றையுமே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத்தறிவாளர்களுக்கு இது புரிவது
சாத்தியமில்லை. ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை அறிவே கூட
இருப்பதில்லை என்பதே உண்மை.
ஆகையால் இந்து தர்மத்தில் சொல்லப்படும்
பல அறிவியல் மற்றும் மனோரீதியான சூட்சுமங்களை புரிந்து கொள்ளும் நீங்கள் தான்
உண்மையான பகுத்தறிவாளர்கள். ஆகையால் இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும்
ஆகும்.
நீங்களும் இதை ஏற்றுக் கொண்டால்
தாமதிக்காமல் இன்றே படிக்கத் துவங்கலாமே!
காக்க காக்க கனகவேல்
காக்க!
நோக்க நோக்க நொடியில்
நோக்க!
ஓம் சரவணபவ
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
முருகன்: வரலாறு : கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயன்கள் - குறிப்புகள் [ ] | Murugan: History : Benefits of Saying Gandar Shashti Kavas - Tips in Tamil [ ]