சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் திருத்தளி ஆலயத்தில் பைரவ மூர்த்தி வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதற்காகவே இந்த ஆலயம் 'வைரவன் கோயில்'- என்று அழைக்கப்படுகிறது.
பக்தரைக் காக்கும் பைரவர்!
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் திருத்தளி ஆலயத்தில்
பைரவ மூர்த்தி வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதற்காகவே இந்த ஆலயம் 'வைரவன் கோயில்'- என்று அழைக்கப்படுகிறது. கோரைப் பற்கள்
இரண்டுடன், முப்புரிநூலும், முத்துமாலையும் அலங்கரிக்க, இடக் கரத்தை தொடையில் வைத்து, வலக்கரத்தில் இடியை ஏந்தி யோக நிஷ்டையில்
திருக்காட்சி தருகிறார் பைரவர் இந்திரன் மகன் ஜெயந்தனின் சாபத்தைத் தீர்த்தவராம் இவர்.
அதனால் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாத முதல் வெள்ளிக்கிழமை
ஜெயந்தன் இவரைப் பூஜிக்க வருவதாக ஐதீகம்!
அதனால் அன்று ஜெயந்தன் திருவிழா இந்தப் பைரவருக்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
பைரவரை வணங்கினால் குடும்பத்தில் கணவன்
- மனைவி இடையே ஏற்படும் கருத்து வேற்றுமை நீங்கி, இல்லற வாழ்விலே இன்பம் சேரும். தம்பத்தியருக்குள்ளே ஏற்படும்
தேவையற்ற மனக் குழப்பங்கள் தீரும், சந்தேகங்கள் அகலும் என்று சொல்லப்படுகிறது. பக்தரைக் காக்கும்
பைரவராக வணங்கப்படுகிறார்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : பக்தரைக் காக்கும் பைரவர்! - வைரவன் கோயில் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Bhairav protects the devotee! - Vairavan temple in Tamil [ spirituality ]