கம்சனை அழிக்க கிருஷ்ணர் பிறக்கப் போகிறார் என்பதை கம்சனுக்கு உணர்த்திய மகா மாயையே, பெரிய பாளையத்தில் பவானியாய் அருள்கிறாள்.
பவானி என்றாலே...
கம்சனை அழிக்க கிருஷ்ணர் பிறக்கப் போகிறார்
என்பதை கம்சனுக்கு உணர்த்திய மகா மாயையே, பெரிய பாளையத்தில் பவானியாய் அருள்கிறாள். கருவறையில் சங்கு, சக்ரதாரியாக அன்னை அருளும் அழகைக் காணக்
கண் கோடி வேண்டும். அன்னைக்கு முன் சுயம்புவாகவும் தேவி அருள்பாலிக்கின்றாள்
இந்த அம்பிகைக்கு அபிஷேகம் செய்யப்படும்
நீர் அருமருந்தாகி நோய் தீர்க்கிறது. இத்தலத்தில் வேப்பஞ்சேலை கட்டி பக்தர்கள் பிரார்த்தனை
செய்கின்றனர்.
ஆடி மாதம் முதல் ஞாயிறு தொடங்கி தொடர்ந்து
பத்து ஞாயிற்றுக் கிழமைகள் இத்தலம் திருவிழாக் கோலம் கொள்கிறது. பத்தாம் வாரம் சூரிய
பகவான் தனது கிரணங்களால் அன்னையின் கேசம் முதல் உடல் வரை படர்வது அதிசயம்.
'பவானி' என்றாலே பழவினைகளை ஒட்டிவிடுவாள் இந்தத்
தாய். இந்தப் பவானித் தாயாரை மனதில் நினைத்துப் பிரார்த்தித்தாலும் உடன் வேண்டும்
வரம் தந்து, வாழ்வுக்குத் துணை நிற்பாள்.
சென்னை அருகே இருக்கும் திருவள்ளூரிலிருந்து
30 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய பாளையத்தில்
இந்த அன்னையின் ஆலயம் உள்ளது!.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : பவானி என்றாலே... - அம்மன் [ அம்மன் ] | Amman: History : Bhavani... - Amman in Tamil [ Amman ]