விளாம் பழம்

பித்த சம்பந்தமான வியாதிகள் குணமாக

[ ஆரோக்கியம் குறிப்புகள் ]

Blam fruit - Cure diseases related to bile in Tamil

விளாம் பழம் | Blam fruit

விளாம் பழம் பல வியாதிகளைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

விளாம் பழம்

விளாம் பழம் பல வியாதிகளைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

விளாம் பழத்தை உடைத்து. அதன் சதைப் பகுதியை எடுத்து, அத்துடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துப் பிசைந்து சாப்பிடுவதுதான் வழக்கம். விளாம் பழத்திற்குத் தனிப்பட்ட ஒரு வாசனை உண்டு.

நன்றாகப் பழுத்த விளாம்பழம் தான் சாப்பிட ஏற்றதாக இருக்கும். பழுக்காத செம்பழமான விளாம் பழமோ விளாங்காயையோ சாப்பிடுவதற்கு ஏற்ற தல்ல. நன்றாகப் பழுக்காத விளாம்பழத்தின் சதை பாகம் துவர்ப்பு ருசியாக இருக்கும். விளாங்காயின் உள்பாகத்திலுள்ள சதை பாகம் வெண்ணிறமாக சற்று பழுப்பு நிறமாக இருக்கும். அது முழு துவாப்பு ருசியாக இருக்கும் செம்பழத்தையோ, காயையோ தின்றால் அதன் துவர்ப்பு தொண்டையைக் கடடும். இவைகளைச் சாப்பிடுவது சரியல்ல.

விளாம் பழத்தின் மேல் பாகம் கெட்டியான ஓட்டுடன் கையினால் இருப்பதால் அழுத்திப் மேல் பார்வையிலோ பார்ப்பதினாலோ, அது நன்றாகப் பழுத்த பழமா என்று அறிய முடியாது. எனவே, விளாம்பழத்தைக் கையிலெடுத்து அதைக் காதருகே கொண்டு போய் குலுக்கினால், தேங்காயை ஆட்டினால் தண்ணீர் குலுங்குவது போல விளாம் பழத்தின் உள்ளேயுள்ள ஓட்டுடன் ஒட்டாத உருண்டையான சதைப் பகுதி கொடக் கொடக்' என்று ஆடும் சத்தம் கேட்கும். இதுதான் நன்றாகப் பழுத்த பழம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக விளாம் பழத்தைக் கையில் எடுத்து கெட்டியான தரையின் மேல் சுமார் ஒரு முழ அளவிற்கு உயர்த்திப் பிடித்து பழத்தைக் கீழே விழும் படி போட்டால், நன்றாகப் பழுத்த பழமானால் அது "சொத்" தென்று கீழே விழுந்த இடத்திலேயே நிற்கும். செம்பழம் அல்லது காயானால் அது இரப்பர் பந்துபோல சிறிதளவு குதித்து விழும். இந்த வகை யிலும் நன்றாகப் பழுத்த பழத்தை தேர்ந்தெடுக்கலாம்.

'விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட' என்ற ஒரு பழமொழி நம் நாட்டில் வெகு காலமாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு கதையும் உண்டு. ஒரு தனவான் ஒரு பெண்ணுடன் நட்பு கொண்டு, தன் வீடு, நிலம், நகை ரொக்கம் அத்தனையும் இழந்து ஓட்டாண்டியான நிலையிலும் அவள் நட்பை விட மனசில்லாமல் அவள் வீடு சென்று அவமானப்பட்டு வருவாராம். ஒரு நாள் கவலையோடு வீதிவழியே வந்தபோது ஒரு முனிவரைக் கண்டாராம். அவரிடம் தன் நடத்தையையும் இப்போதுள்ள நிலையையும் கூறி பரிகாரம் கேட்டாராம். அதற்கு அந்த முனிவர், "பயப்படாதே, உன் நிலையை மாற்றலாம். நான் சொல்லுகிறபடி செய். பிறகு சுகமாய் வாழ்வாய். நாளை முதல் தினசரி 9 தினங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு விளாம்பழம் வீதம் ஓட்டையும் சேர்த்துத் தின்று வா. பிறகு சுகமடைவாய்'' என்று கூறிச் சென்றாராம். இதைக் கேட்ட ஓட்டாண்டியான தனவான் முனிவர் சொன்னபடி ஒரு நாளைக்கு ஒரு விளாம்பழம் வீதம் ஓட்டோடு 9 நாட்கள் சாப்பிட்டு வந்தாராம். முனிவர் சொன்னபடி இவருக்கு அந்தப் பெண் மேலிருந்த மோகம் மாறி அவள் வீட்டையும், அவளையும் அறவே வெறுக்க ஆரம்பித்து தன் வாழ்க்கை நிலையில் உயர்வடைந்து பிற்காலத்தில் சுகமே வாழ்ந்தாராம். இந்த தனவான் கூறிய வார்த்தைதான் இந்தப் பழமொழி.

 

விளாம்பழத்தில் கீழ்க்கண்ட உயிர்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன :

வைட்டமின் A உயிர்ச்சத்து 2.3 மில்லி கிராம்.

வைட்டமின் B-1 A உயிர்ச்சத்து இல்லவே இல்லை.

வைட்டமின் B-2 உயிர்ச்சத்து இல்லவே இல்லை.

வைட்டமின் C உயிர்ச்சத்து இல்லவே இல்லை.

சுண்ணாம்புச்சத்து - 6 மில்லி கிராம்.

இரும்புச்சத்து - 40 மில்லி கிராம்.

 

பித்த சம்பந்தமான வியாதிகள் குணமாக

பித்தத் தலை நோய், கண் பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை ஏற்பட்டு சில்லென்றுப் போகுதல், பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

தினசரி காலை ஆகாரம் முடிந்தவுடன் நன்றாகப் பழுத்த ஒரு விளாம்பழத்தை உடைத்து சதைப் பகுதியை ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு விட வேண்டும். இந்தப் பழத்தில் மற்றவர்களுக்கு சிறிதளவும் கொடுக்கக் கூடாது. இந்த விதமாக தொடர்ந்து 21 தினங்கள் சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தமான சகல கோளாறுகளும் குணமாகும்.

 

இடு மருந்து எடுபட

சில கெட்ட பெண்கள் வசதியான ஆண்களை தன் வசம் இழுத்துக் கொள்ள. தன் மீது பாசமாக இருந்து தான் சொன்னபடி எல்லாம் நடந்து வர, ஒரு வகை மருந்து உள்ளுக்குக் கொடுத்து விடுவதுண்டு. இந்த மருந்து உள்ளே சென்று வேலை செய்ய ஆரம்பித்தால் அந்த மனிதனுக்கு குடும்ப பாசம், மனைவி பாசம், குழந்தைப் பாசம், தாய் தந்தையர் பாசம் எல்லாம் மறந்து போகும். அவள் ஒருத்தி மேலே நாட்டம் ஏற்படும். அவள் சொற்படி நடப்பார்கள். மற்றவர்களின் பேச்சு ஏற்காது. அவளைக் கவனிக்கத் தோன் றுமே தவிர மற்றவர்கள் மேல் நாட்டம் கொள்ளாது. வெறுப்புத்தான் ஏற்படும். இந்த வகையில் சிக்கிய அநேகர் குடும்பத்தை இழந்து சொத்து சுகத்தை இழந்து வெறுங்கையானவுடன் அவள் வெறுக்கத் தொடங்கி அவமானமடைவார்கள். இப்படிப்பட்டவர்களை மீட்க இந்த விளாம்பழம் ஒரு அரிய சஞ்சீவியாகப் பயன்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் நன்றாகப் பழுத்த விளாம்பழத்தின் சதையையும் ஓட்டையும் சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு விளாம்பழம் வீதம் 21 தினங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இடுமருந்தின் வேகம் குறைந்து அதன் சக்தி முறிந்து விடும். மனிதர் நல்ல வழிக்கு வந்து விடுவார்.

விளாம்பழத்தைப் பற்றி மேலும் சில விஷயங்கள் விளாம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். உடல் வளர்ச்சியடையும். அறிவு விருத்தியாகும். பித்த சம்பந்தமான வியாதிகள் குணமாகும். இரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்கள் மடிந்து விடும். ஆகையால் உடலை எந்த நோயும் தாக்காது.

வளரும் சிறுவர்கள் அடிக்கடி விளாம்பழம் சாப்பிட வேண்டும். எலும்புகளுக்கு உறுதியையும் அளித்து உடலை நன்றாக வளரச் செய்யும், அவர்களை எந்த நோயும் தாக்காது. சுகமாக வாழ்வார்கள். ஞாபக சக்திக்குறைவு காரணமாக ஆசிரியர்கள் சிரமத்துடன் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை உடனுக்குடன் மறந்துவிடும் சிறுவர்களுக்கு விளாம்பழம் கொடுத்து வந்தால், அவாகளுக்கு நல்ல ஞாபகசக்தி உண்டாகும்.

அஜீரணக் கோளாறை விளாம்பழம் போக்கி விடும். பசி தீபனத்தை உண்டு பண்ணும்! வயோதி கர்களுக்கு விளாம்பழம் ஒரு டானிக் போல பயன் படும். மூன்று நாட்களுக்கு ஒரு விளாம்பழம் வீதம் சாப்பிட்டு வந்தால், எலும்புகள் புதிய பலம் பெறும். கற்கள் ஆட்டம் காணாமல் உறுதியாக நிற்கும். புதிய இரத்தம் உற்பத்தியாகும். நல்ல ஞாபக சக்தியை தரும். வயோதிகத்திலும் இதயத்துடிப்பை ஒரேசீரான நிலையில் வைத்திருக்கும். மனக் கலக்கம் மறைந்து மனதில் சந்தோஷ உணர்வு ஏற்படும். நடையில் புதிய தெம்பு ஏற்படும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

ஆரோக்கியம் குறிப்புகள் : விளாம் பழம் - பித்த சம்பந்தமான வியாதிகள் குணமாக [ ஆரோக்கியம் ] | Health Tips : Blam fruit - Cure diseases related to bile in Tamil [ Health ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்