தர்மச் சக்கரம் என்பது வடமொழிச் சொல். இதன் பொருள், தர்மத்தின் சக்கரம் அல்லது தர்மத்தின் சுழற்சி என்பதாகும். இந்த முத்திரை, புத்தரின் வாழ்க்கையில் முக்கியமான தருணத்தில் ஏற்பட்ட ஒன்றாகும்.
பேரின்ப நிலை கொடுக்கும் தர்மச் சக்கர முத்திரை
தர்மச் சக்கரம் என்பது வடமொழிச் சொல். இதன் பொருள், தர்மத்தின் சக்கரம் அல்லது தர்மத்தின் சுழற்சி என்பதாகும். இந்த முத்திரை, புத்தரின் வாழ்க்கையில் முக்கியமான தருணத்தில் ஏற்பட்ட ஒன்றாகும்.
அந்த நேரத்தில், அவர் ஞானம் பெற்ற பிறகு
செய்த முதல் போதனையாகும். இந்த போதனை, சாரநாத் என்ற இடத்தில் உள்ள பூங்காவில் வழங்கப்பட்டது.
இந்த முத்திரை தர்மச்
சக்கரம் என்ற தர்மம் சம்பந்தமான போதனைக்கு அடையாளமாக உள்ளது. இந்த தர்மச் சக்கரம்
அல்லது கோட்பாடுகளை உள்ளடக்கிய சக்கரம், அதாவது வாழ்க்கைச் சக்கரம், நமக்கு வேறுபட்ட
சூழ்நிலைகளில் பலவித அனுபவங்களைக் காட்டும் வழிகாட்டியாக உள்ளது.
இருப்பினும், இந்த முத்திரையில்
இரண்டு சக்கரங்கள் காட்டப்படுகின்றன. நமது கரங்களே இரண்டு சக்கரங்களாக இருந்து, மறுபிறப்பு நிலையை
குறிப்பிட்டுக் காட்டுகின்றன. இடது நடுவிரல் (சனி விரல்), இறப்பு மற்றும்
பிறப்புக்கு அடையாளமாக உள்ளது.
கட்டை விரல்கள் மற்றும்
ஆள்காட்டி விரல்களை இணைக்க வேண்டும். நடு விரல், மோதிர விரல், சுண்டு விரல் ஆகிய
விரல்கள் நீட்டிய நிலையில் தளர்வாக இருக்க வேண்டும். இடது உள்ளங்கை, இதயத்தை நோக்கியபடி
இருக்க வேண்டும். வலது உள்ளங்கை, வெளிப்புறம் நோக்கியபடி இருக்க வேண்டும்.
நின்ற நிலையிலோ அமர்ந்த
நிலையிலோ இதைச் செய்யலாம். சுவாசம், மெதுவாகவும் சீராகவும் இருக்க வேண்டும். தர்மச் சக்கர
முத்திரையைத் தொடர்ந்து செய்யும் ஒருவருடைய செயல்பாடுகளில், அதாவது மன நிலையில் மாறுதல்
ஏற்படுவது உறுதி.
1. நீட்டப்பட்ட வலது
கையின் மூன்று விரல்கள், மூன்றுவித உண்மைகளை உணர்த்துகிறது.
* நடு விரல், போதனைகளைக் கேட்பவரின்
அடையாளமாகும்.
* ஆள்காட்டி விரல், போதனைகளின் உண்மைகளை
உணர்ந்தவரைக் குறிக்கும்.
* சுண்டு விரல், மஹாயானா அல்லது 'சிறந்த வாகனத்தை' (Great Vehicle) குறிக்கும்.
2. நீட்டப்பட்ட மூன்று
இடது கை விரல்கள், மூன்றுவித புத்த மத ரத்தினங்களைக் குறிக்கும் (JEWELS). அவை - புத்தம்,தர்மம்,சங்கம்.
15 நிமிடங்கள்.
1. முடிவில்லாத ஒரு
பேரின்ப நிலை உண்டாகும்.
2. மனநிலையில் நல்ல
மாற்றம் உண்டாகும்.
3. உடலுக்கு அண்டவெளி
சக்தி அபரிமிதமாகக் கிடைக்கும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : பேரின்ப நிலை கொடுக்கும் தர்மச் சக்கர முத்திரை - செய்முறை, கால அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : Blissful Dharma Chakra Mudra - Method, Duration, Benefits in Tamil [ ]