அம்மனை வேண்டி பக்தர்கள் விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால் இந்த அம்மன் பக்தர்களுக்காக விரதம் இருக்கிறாள்.
ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம் அம்மனை வேண்டி பக்தர்கள் விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால் இந்த அம்மன் பக்தர்களுக்காக விரதம் இருக்கிறாள். அந்நிய படையெடுப்புக்கு அஞ்சிய விஜயநகர பக்தர்கள். இந்த அன்னையை சமயபுரத்திற்கு பல்லக்கில் வைத்து தூக்கி வந்தனர். இன்றைய சமயபுரத்தில் சிலையை வைத்து விட்டு களைப்பு நீங்கி மீண்டும் தூக்கும்போது அதை அவர்களால் தூக்க முடியவில்லை. அங்கேயே அன்னை உறுதியாக அமர்ந்து விட்டாள். பின்பு அந்த இடத்திலேயே சிலையை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டப்பட்டது. பக்தர்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றும் இந்த அம்மன், கண்ணொளி வரம் தருவது தனிச்சிறப்பு மிக்கது. சங்கு சக்கர தாரிணியாக காட்சியளிக்கும் அன்னை மூகாம்பிகை இவள். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சுயம்பு ஜோதிர்லிங்கம் இங்கு உள்ளது. கிழக்கு வாசலில் உள்ள வீரபத்திரர் இத்தலத்தை காவல் புரிகிறார். கருவறை விமானம் முழுவதும் தங்கத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம் அர்த்தநாரி பீடம். பக்தர்களுக்கு அர்த்த ஜாமத்தில் நடைபெறும் பூஜையில் கஷாயம் நிவேதனமாக வழங்கப்படுகிறது. புற்றுமண்ணால் உருவான மாரியம்மன் இவள். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது தேவியின் உக்கிரம் அதிகமாகும். அதைத் தணிக்க இளநீர், தயிர்சாதம், நீர் நிவேதனமாக படைக்கப்படும். ஆடி மாதத்தில் அம்பிகை முத்துப் பல்லக்கு வலம் வரும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சிங்கத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தரும் சக்தி வாய்ந்த அம்மன் இவள். திருமணமாகாதவர்கள் இங்குள்ள குளத்தில் நீராடி அம்மனை வணங்கினால் விரைவில் திருமணம் கைகூடும். தீராத நோயால் வாடுபவர்களும் குடும்பப் பிரச்சினையில் சிக்கித் தவிப்பவர்களும் இந்த அம்மனை வணங்கினால் நலமும், வளமும் பெறலாம். ஆடி மாதத்தில் திருவிளக்கு வழிபாடும் செவ்வாய்க்கிழமை தோறும் விசேஷ வழிபாடும் நடைபெறும் கோவில் இது. ஆக்ரோஷமான கோலத்தில் காணப்படு இங்குள்ள தேவியை வணங்கினால் நம் மனதில் உள்ள அச குணங்கள் அழிந்துவிடும் என்கிறார்கள். ராவணனைக் கொன்ற தோஷம் நீங்க எடைக்கு என எள்ளை ராமனிடமிருந்து தானமாக வாங்கிய அந்தணர் ஒரு பிரம்ம ராட்சசர் ஆனார். அவரை சிருங்கேரியில் உள் சாரதைக்கு காவல்புரியுமாறு ஆதிசங்கரர் கூறினார். அவர்தா பிரம்மபட்டா என்ற பெயருடன் காவல் தெய்வமாக இருக்கிறார் அமாவாசையை பவுர்ணமி என்று கூறிய அபிராமி பட்டரின் கூற்றை மெய்ப்பிக்க தன் தடாங்கத்தை வானில் வீசி முழு நிலவை உருவாக்கியவள் இங்குள்ள அபிராமி அன்னை. அந்த அன்னையை வணங்கினால் 16 செல்வங்களையும் பெறலாம். காலனிடம் இருந்து மார்க்கண்டேயனைக் காத்த காலசம்ஹாரமூர்த்தியின் சக்தி வடிவமும் இவள்தான். சக்தி பீடங்களில் வாராகி பீடம், ஞான பீடம் என்று அழைக்கப்படும் தலம் இது. ஆதி சங்கரரால் உருவாக்கப்பட்ட சிவசக்கரங்கள் அம்மனின் காதுகளை அலங்கரிக்கின்றன. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்சமயபுரம் மாரியம்மன்:
கொல்லூர் மூகாம்பிகை:
புன்னைநல்லூர் மாரியம்மன்:
பட்டீஸ்வரம் துர்க்கை:
அம்பகரத்தூர் பத்ரகாளி:
சிருங்கேரி சாரதா:
திருக்கடையூர் அபிராமி:
திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி:
ஆன்மீக குறிப்புகள் : ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம் - சமயபுரம் மாரியம்மன், கொல்லூர் மூகாம்பிகை, புன்னைநல்லூர் மாரியம்மன், திருக்கடையூர் அபிராமி [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Blissful Goddess Darshan - Samayapuram Mariamman, Kollur Mookambikai, Punnainallur Mariamman, Thirukkadaiyur Abhirami in Tamil [ spirituality ]