ரத்த அழுத்தம் பொதுவான நோய்களில் ஒன்றாகிவிட்டது. தொழில்சார்ந்த சமூக அமைப்புகளில், நடுத்தர மற்றும் வயதானவர்களிடையே ரத்த அழுத்தம் பரவலான நோயாகிவிட்டது.
ரத்த
அழுத்தம் சீராக இயற்கை மருத்துவம்
ரத்த அழுத்தம் என்பது அளவிற்கு மேல் ரத்தம் இருதயத்தை அடைந்து ரத்த நாளங்களின் சுவர்களில் பாய்வதிலும், இரத்தம் சென்று திரும்புவதில் ரத்த நாளங்களில் தடையின்றிச் செல்வதில் ஏற்படும் சிரமத்தையும் குறிக்கும். ரத்த அழுத்தத்திற்கும் உணவுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விளக்கினாலும் முடிவில் உணவுக் கட்டுப்பாடு ரத்த அழுத்த நோய்க்கு பெரிய அளவில் இல்லை என்பதையும் கூறலாம்.
இப்படியாக தடைகள் ஏற்பட வேண்டாத, தேவையற்ற கசடுகள் ரத்ததில் சேர்வதும், ரத்த நாளங்களின் சுவர்களில் இக்கசடுகள் ஒட்டிக்கொள்வதும், இது மாதிரியான வேலையை ரத்தத்தில் தங்கிவிட்ட அதிகரித்த கொழுப்புப் பண்டங்கள் செய்வதில் ரத்தத்தில் உப்பு அதிகரித்தாலும், நீர் தேங்கிவிடுவதும், வயது முதிர்ச்சியின் காரணமாக நாளங்கள் தடித்து உட்சுவர் சுருங்கி விடுதலும் காரணங்களாக அமைந்துவிடுகிறது.
இவையனைத்துமே உடலியல் இயக்கச் சார்பானவை. உணவு, பயிற்சி, ஒழுக்கம், உடற் பயிற்சி தொடர்பானவையாகும். உடற்பக்குவம் மீறுகிற அளவு ரத்த அழுத்தநோயும் ஆரம்பிக்கத் 98 10 ரூபாய் செலவில் 100 வயது வாழலாம் தோன்றும். இவைகளை விட உளவியல் காரணமாகக் கூட இந்நோய் தோன்ற வாய்ப்புகள் அதிகம்.
சுருங்கக் கூறின் உடலியல் காரணத்தைவிட உளவியல் காரணங்களாலேயே ரத்த அழுத்த நோய் விரைவாகத் தோன்றுகிறது.
இவ்வாறாக எந்தக் காரணங்களினால் நோய் தோன்றி னாலும் ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்து சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் நோயினின்று விடுபட்டு நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்.
ரத்த அழுத்தம் பொதுவான நோய்களில் ஒன்றாகிவிட்டது. தொழில்சார்ந்த சமூக அமைப்புகளில், நடுத்தர மற்றும் வயதானவர்களிடையே ரத்த அழுத்தம் பரவலான நோயாகிவிட்டது. ரத்த அழுத்த நோய் அதிகரித்த நிலையில் கீழ்கண்ட நோய்கள் வரலாம்.
1. இதய நோய்கள்
2. பக்கவாதம்
3. சிறுநீரகச் செயலிழப்பு
4. கரோனரி இதய நோய்கள்
1. ஆட்டிறைச்சி, மீன், கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை தவிர்த்தல் வேண்டும்.
2. எண்ணெயில் வறுத்த உணவுகள், உப்பு பதார்த்தங்கள், ஊறுகாய் வகைகள், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட துவையல்கள் ஆகியவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
3. முள்ளங்கி, பீட்ரூட், கேரட் ஆகிய காய்கறிகளை மிதமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
4. உலரவைத்த இறைச்சிகள், உலரவைத்த உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.
5. உப்பு, சோடா உப்பு போன்றவற்றைச் சமையலில் மிகக்குறைந்த அளவே உபயோகித்தல் வேண்டும்.
6. நெய், வனஸ்பதி, வெண்ணெய், கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
1. பெற்றோர்களுக்கு ரத்த அழுத்த நோய் இருந்து, பாரம்பரிய முறையில் (Hereditary) பிள்ளைகளுக்கும் நடுத்தர வயதில் இந்நோய் வரலாம்.
2. உடல் எடை அதிகரித்த நிலையில் (Obesity) இந்நோய் வரலாம்.
3. முறையற்ற உணவுகள், மாமிச உணவுகளை அதிகம் உண்பதாலும் இந்நோய் வரலாம்.
4. மன அழுத்தம், உளைச்சல், பிதற்றல் போன்ற காரணிகளாலும் இந்நோய் வரலாம்.
5. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும் ரத்த அழுத்தநோய் உண்டாகலாம்.
6. இடைவிடாமல் புகைப்பவர்களுக்கு (Chain Smokers) ரத்த அழுத்த நோயுடன் பக்கவாதமும் (Stroke) வரலாம்.
7. ஒரு நாளைக்கு 4, 5 முறை ஸ்ட்ராங்கான காபி தொடர்ந்து பருகி வந்தாலும் ரத்த அழுத்த நோய் உண்டாகலாம்.
சைவ உணவை பிரதானமாகக் கொண்டவர்களுக்கு அசைவ உணவை உண்பவர்களைவிட குறை ரத்த அழுத்த நோய் (Low Blood Pressure) உண்டாக வாய்ப்புகள் அதிகம்.
கடைகளில் பதப்படுத்தி விற்கப்படும் பாலில் சோடியம் அதிகளவில் காணப்படுவதனாலும் ரத்த அழுத்த நோய்க்குச் சிறுவர்களும் உட்படலாம்.
இரத்த அழுத்த நோய்க்கு உட்பட்டவர்கள் குறைந்த அளவில் புரோட்டீன், கொழுப்பு, சோடியம் ஆகியவற்றை உணவில் உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
உடல் எடை அதிகரித்து, அதனால் இரத்த அழுத்த நோய்க்கு உட்பட்டிருப்பவர்கள் குறைந்த கலோரி உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
1. ஒரு நாளைக்கு 50 கிராம் அளவில் புரோட்டீன் உணவுகளைச் சேர்த்துக்கொள்ளவும்.
2. தினசரி உணவில் 40 முதல் 50 கிராம் அளவில் கொழுப்பு உணவுகளைச் சேர்த்துக் கொள்ளவும்.
3. எளிதில் ஜீரணமாகக்கூடிய கார்போ ஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை உண்ணவும்.
4. இரத்த அழுத்தத்திலிருந்து விடுபட சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்.
மருத்துவ குறிப்புகள் : ரத்த அழுத்தம் சீராக இயற்கை மருத்துவம் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Blood pressure regular natural medicine - Medicine Tips in Tamil [ Medicine ]