வாழ்க்கையில் நாம் எவ்வளவோ பிரச்சினைகளுக்கு நடுவே வாழ வேண்டியிருக்கிறது.
மூளையில் ஏற்படும் கிளர்ச்சியும் நரம்பியல் நோய்களும் வாழ்க்கையில் நாம் எவ்வளவோ பிரச்சினைகளுக்கு நடுவே வாழ வேண்டியிருக்கிறது. ஏதாவது ஒரு சிக்கல், குழப்பம் வாழ்க்கையில் ஏற்படும்போது அவற்றை எளிதில் சமாளிக்க முடியாத நிலையை அடைந்தால் நமது மனத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு விடுகிறது. அந்த அழற்சி மூளையின் 'கார்டெக்ஸ்' என்னும் பகுதியை அடைகிறது. பெருமூளையின் மேற்பகுதியினைத் தான் கார்டெக்ஸ் என்று கூறுவார்கள். மனத்திலே ஏற்படும் அழற்சி இந்த கார்டெக்ஸ் பகுதியைப் பாதித்து அங்கே ஒருவித கிளர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. இந்தக் கிளர்ச்சி மூளையின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. இம்மாதிரி, மூளையில் ஏற்படும் கிளர்ச்சியினைக் கட்டுப்படுத்துவதற்கும் ஓர் அமைப்பு உண்டு. இதற்கு ஆதாரமாக இருக்கும் நரம்புச் செல்கள் உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மூளையின் பிற்பகுதியில் அது பரவாமல் தடுக்கிறது. சில சமயம் இந்தக் கட்டுப்பாட்டு செல்களையும் உணர்ச்சிக் கிளர்ச்சி மீறி செயற்பட்டு விடுவதும் உண்டு. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் செல்கள் பலவிதத்திலும் மனித ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. பகல் முழுவதும் நாம் நமது உடல் உழைப்பையும், உணர்ச்சிகளையும் செலவிட்டு கடுமையாக செயற்படுகிறோம். இரவில் நமது உடலை – உணர்ச்சிகளை அறவே மறந்து நிம்மதியாக உறங்குகிறோம். நமது உணர்ச்சிகள் எல்லாம் ஒடுங்கப் பெற்று எந்தவித மனச் சலனமும் இல்லாமல் நாம் உறங்குவதற்கும் வழி செய்கிறது மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் உள்ள செல்கள். அவை நமது மனச் சலனங்களைக் கட்டுப்படுத்தி தற்காலிகமாக செயற்படாமல் நிறுத்தி நிம்மதியான உறக்கத்திற்கு வழி செய்கின்றன. மனிதனுடைய சிலவகைக் கோளாறான செயல்முறைகள் காரணமாக மூளையின் கட்டுப்பாட்டுச் செயல்களும் கட்டுப்பாட்டை இழக்க வேண்டிவரும். சிலர் இரவில் நெடு நேரம் கண் விழித்து சீட்டு ஆடுவார்கள் அல்லது சினிமா போன்ற காட்சிகளைக் கண்டு களிப்பதில் ஈடுபட்டிருப்பார்கள். இரவில் வழக்கமாக - இயல்பாக வரக் கூடிய உறக்கத்தை வேண்டுமென்றே இவர்கள் விரட்டியடிப்பார்கள். ● மாணவர்களில் சிலர் பள்ளித் தேர்வினைக் கருத்திலே கொண்டு இரவெல்லாம் கண் விழித்துப் படிப்பதுண்டு. ● சிலர் அதிக வருமானம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக இரவெல்லாம் விழித்திருந்து வேலை செய்வார்கள். ● தூக்கத்தை வலிய விரட்டும் மேற்குறித்தவர்கள் தவிர வேறு மாதிரியான சிலரும் உண்டு. வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனைமயமான ஏதாவது ஒரு நிகழ்ச்சி காரணமாக மன உளைச்சலுக்கு இலக்கான சிலருக்கு இரவில் தூக்கம் பிடிப்பதில்லை. அவர்கள் தூங்குவதற்கு முயற்சியெடுத்தால் தூக்கம் வராது கஷ்டப்படுவார்கள். சிலர் அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியில் இன்ப நினைவில் திளைப்பதன் காரணமாகவும் இரவெல்லாம் தூங்க மாட்டார்கள். இந்த வகையினரில் காதலர்களைச் சேர்க்கலாம். காதலர்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் கொள்ளும் இனிய சுகமான நினைவு காரணமாக இரவெல்லாம் உறங்காமல் கண் விழித்திருப்பார்கள் என்று கூறுவது உண்டல்லவா? இரவில் மட்டுமல்ல பகலிலும் நமது உணர்ச்சிகள் காரணமில்லாமல் மிகையாகி விடாமல் மூளையின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் ஒழுங்குபடுத்துகிறது. சிலர் எவ்வளவு பெரிய விபரீதங்களுக்கு ஈடுகொடுக்க நேர்ந்தாலும் உணர்ச்சி சமநிலையை இழந்துவிட மாட்டார்கள். சுகமும் துக்கமும் இவர்களுக்கு ஒன்றாக இருக்கும். இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே கண்ணோட்டத்துடன்தான் நோக்குவார்கள். இவர்கள் மூளையின் கட்டுப்பாட்டு கேந்திரச் செயல்களைத் தாண்டாமல் இருக்கிறார்கள் என்று அர்த்தம். சிலர் அந்த நிகழ்ச்சிகளைத் தாளமாட்டாமல் மன உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் நிலைகுலைந்து விடுவார்கள் இனிய சூழ்நிலை அமையும் போது அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியடைவார்கள். துன்பம் வந்த நேரத்தில் மன உறுதி குலைந்து நிலை தடுமாறி ஓய்ந்து சோர்ந்து உட்கார்ந்து விடுவார்கள். மிகச் சாதாரண காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்வோரைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம் அல்லவா? இவர்களெல்லாம் தங்கள் செயல் முறைகள், உணர்வுகள் காரணமாக மூளையின் மன உணர்ச்சிக் கட்டுப்பாட்டு கேந்திரத்தின் முறை யான செயற்பாட்டினை சீர்குலைத்து விடுவார்கள். மூளையின் உணர்ச்சிக் கட்டுபாட்டுக் கேந்திரம் ஒரேயடியாக பலவீனமடைந்துவிடும் காரணத்தால்தான் பலவிதமான மன நோய்கள் தோன்றுகின்றன. சிலர் பைத்தியம் பிடித்து அலைவது இதனால் தான். பைத்தியம் பிடித்தவர்களுக்கு இரவில் உறக்கமே வராது என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். மூளையின் உணர்ச்சிக் கட்டுப்பாட்டு செல்கள் செயற்பட முடியாதவாறு பலவீனமடைந்து விடுவதுதான் இதற்கான காரணமாகும். மேற்சொன்ன குறைபாடு காரணமாக மூளைப் பகுதியிலே தோன்றும் அதிர்ச்சியும் கிளர்ச்சியும் நரம்பு மண்டலத்தில் பரவி அதனைப் பலவீனப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது நரம்பு தொடர்பான பலவிதமாக பிணிகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது. ஆகவே நரம்பியல் நோய்கள் தோன்றுவதற்கான இந்தக் காரணத்தையும் சிந்தையில் கொள்ள வேண்டும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்பைத்தியம் ஏன் பிடிக்கிறது?
மருத்துவ குறிப்புகள் : மூளையில் ஏற்படும் கிளர்ச்சியும் நரம்பியல் நோய்களும் - பைத்தியம் ஏன் பிடிக்கிறது? [ மருத்துவம் ] | Medicine Tips : Brain agitation and Neurological diseases - Why do you get mad? in Tamil [ Medicine ]