1. அரிசியை மூன்று முறை கழுவி 20 நிமிடங்கள் 1 கப் தண்ணீரில் ஊறவைத்து, பின் மீதமுள்ள 1.5 தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காய் சாதம்
Brinjal Rice
புழுங்கல் அரிசி - 1 கப்
தண்ணீர் - 2.5 கப்
கத்தரிக்காய் - 6
மஞ்சள்தூள் - 1/2
டீஸ்பூன்
கடுகு உளுந்து - 1
டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 8
பெருங்காயத்தூள் - 1/2
டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சை - 1
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் - 4 டேபிள்
ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கத்தரிக்காய் சாதம் பொடி
செய்ய
கடலைப்பருப்பு - 1
டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி விதை - 1
டேபிள் ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1
டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6
பட்டை - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 3
டேபிள் ஸ்பூன்
1. அரிசியை மூன்று முறை கழுவி 20 நிமிடங்கள் 1 கப் தண்ணீரில் ஊறவைத்து, பின் மீதமுள்ள 1.5 தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை
வேகவைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, உளுத்தம்பருப்பு, வெந்தயம் மற்றும்
மிளகாய் வற்றல் சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்
தேங்காய் துருவல் சேர்த்து ஈரம் வற்றும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் ஒரு
தட்டில் மாற்றி ஆறவைத்து மிக்ஸியில் நைஸாக பொடித்துக் கொள்ளவும்.
3. கத்தரிக்காயை கழுவி காம்புகளை நீக்கி நீளவாக்கில் நறுக்கிக்
கொள்ளவும். வேகவைத்த சாதத்தை ஒரு தட்டில் மாற்றி மேலே சில துளிகள் எண்ணெய் விட்டு
ஆறவைத்துக் கொள்ளவும்.
4. கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கிய
கத்தரிக்காயை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். நடுவே திருப்பிக் கொண்டே
இருக்கவும். கத்தரிக்காய் பத்து நிமிடங்கள்
மிதமான சூட்டில் சுருள வதங்கியதும் ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும்.
5. கடாயில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு
உளுத்தம்பருப்பு மற்றும் உடைத்த முந்திரி பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்
பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேகவைத்த சாதத்தை சேர்த்து
மெதுவாக கிளறவும்.
6. அதோடு தேவையான அளவு உப்பு, வதக்கிய கத்தரிக்காய், மஞ்சள்தூள் மற்றும்
பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து மெதுவாக கிளறவும். சாதம் பொடியுடன் நன்றாக
கலந்ததும் எலுமிச்சை சாறை பிழிந்து
மெதுவாக கிளறி அடுப்பை அணைக்கவும். பத்து நிமிடங்கள் மூடி வைத்து பரிமாறும் பாத்திரத்தில்
மாற்றிக் கொள்ளவும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
சமையல் குறிப்புகள் : கத்தரிக்காய் சாதம் - தேவையான பொருட்கள், செய்முறை [ ] | cooking recipes : Brinjal Rice - Ingredients, recipe in Tamil [ ]