1. ப்ரோக்கோலியை நன்றாக கழுவி சிறு சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும். தண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ப்ரோக்கோலி பொரியல்
தேவையான பொருட்கள்
ப்ரோக்கோலி - 2
வெங்காயம் - 1/4 கப், பொடியாக நறுக்கியது
சீரகம் - 1/2
டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4
டீஸ்பூன்
பூண்டு பற்கள் - 4
வறுத்த வேர்க்கடலை -
2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
அல்லது 2 டேபிள் ஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை -
சிறிது
தேங்காய் எண்ணெய் - 1
டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
1. ப்ரோக்கோலியை
நன்றாக கழுவி சிறு சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும். தண்டுகளை சிறு சிறு
துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு அகலமான
பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்ததும்
ப்ரோக்கோலி பூக்களை சேர்த்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தண்ணீரை
வடிகட்டிக் கொள்ளவும். மீண்டும் தண்ணீரில் ஒரு முறை அலசிக் கொள்ளவும்.
3. ஒரு மிக்ஸி ஜாரில்
வறுத்த வேர்க்கடலை, பூண்டு பற்கள்
மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து பல்ஸ் மோடில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
4. கடாயில் தேங்காய்
எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம்
சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் சிறிது கறிவேப்பிலை மற்றும்
ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.
5. பின் சிறிது
மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். ப்ரோக்கோலியில் இருக்கும் நீர்
பிரிந்து நன்றாக வற்றியதும் கொர கொரப்பாக அரைத்த விழுதை சேர்த்து நன்றாக
பிரட்டவும். அவை ப்ரோக்கோலியோடு
சேர்ந்ததும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சூடாக பரிமாறவும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
சமையல் குறிப்புகள் : ப்ரோக்கோலி பொரியல் - தேவையான பொருட்கள், செய்முறை [ ] | cooking recipes : Broccoli Fries - Ingredients, recipe in Tamil [ ]