
251. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?
புலால் மறுத்தல்
251. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
தன் உடலைப் பெருக்க
மற்றொன்றின் உடலை உண்பவன் எவ்வாறு அருளுடன் வாழ முடியும்.
252. பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை;அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
பொருளைப்
போற்றாதாருக்குப் பொருளால் வரும் பயனில்லை. அதுபோல, ஊண் உண்பவர்களுக்கு கருணையால் வரும் நன்மை இல்லை.
253. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
கொலைக் கருவியைப்
பிடித்தவர் மனம் கொலையை நாடுவதைப் போல. பிறவற்றின் உடலை உண்பவர் மனம், ஊனையே நாடும். கருணையை நாடாது.
254. அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
பிற உயிர்களைக்
கொல்லாமல் இருப்பதே அருள். பிற உயிர்களைக் கொல்லுவதே அருள் இல்லாமையாகும். அறமற்ற
செயல் ஊன் தின்பதாகும்.
255. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
ஊன் உண்ணாவிட்டால் உடலில் உயிர் நிலைத்திருக்கும். ஊன் உண்பவனைப் பற்றிய பாவம் அவனை விடுவதற்கு இடந்தராது.
256. தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
உலக மக்கள் உண்ணும் பொருட்டு
உயிர்களைக் கொல்லவில்லையென்றால் பொருள் வேண்டி யாரும் ஊனை விற்கமாட்டார்கள்.
257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.
புலால் என்பது ஓர்
உடம்பின் புண் என்று உணருபவன், புலாலை உண்ணாது இருக்க வேண்டும்.
258. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
குற்றமற்ற அறிவினை
உடையவர்கள் ஓர் உயிர் நீங்கிய உடலை உண்ணமாட்டார்கள்.
259. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செடுத்து உண்ணாமை நன்று.
நெய் முதலியாகப்
பொருட்களை வேள்வியில் ஆயிரமிட்டு வேள்வி செய்வதை விட ஒன்றின், உயிரைப் போக்கி, அதன் ஊனைத் தின்னாது இருப்பது
மேலானது.
260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
கொல்லாதவனாகவும், புலாலை உண்ணாதவனாகவும் 'இருப்பவளை எல்லா உயிரும் தொழும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
திருக்குறள்: பொருளடக்கம் : புலால் மறுத்தல் - அதிகாரம் 26 [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : Bull's Denial - Chapter 26 in Tamil [ Tirukkural ]