அறத்துப்பால்

அதிகாரம் : 1, கடவுள் வாழ்த்து

[ திருக்குறள்: பொருளடக்கம் ]

By charity - Authority : 1, God bless you in Tamil



எழுது: சாமி | தேதி : 15-07-2023 09:04 pm
அறத்துப்பால் | By charity

1. அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு.

திருக்குறள்

பொருளடக்கம்


1. அறத்துப்பால்


அதிகாரம்


1. பாயிரம்


2. இல்லறவியல்


3. துறவறவியல்


4. ஊழியல்


2. பொருட்பால்


1. அரசியல்


2. அமைச்சியல்


3. அரணியல்


4. கூழியல்


5. படையியல்


6. நட்பியல்


7. குடியியல்


3. இன்பத்துப்பால்


1. களவியல்


2. கற்பியல்


அறத்துப்பால்

அதிகாரம் : 1

கடவுள் வாழ்த்து

1. அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி 

பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாவதைப் போல. உலகிற்கெல்லாம். இறைவன் முதன்மையானவர் ஆவார். 


2. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் 

நற்றாள் தொழாஅர் எனின்.

மெய்யறிவனாகிய இறைவனின் திருவடிகளைத் தொழாதார் என்றால் கற்றதால் ஆகிய பயன் என்ன. 


3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நீலமிசை நீடுவாழ் வார்.

மலாமீது மணமாக தங்கிய, கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்கள். நிலவுலகில் நீண்ட நாள்கள் வாழ்வார்கள். 


4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பற்ற இறைவனது திருவடிகளைச் சேர்ந்தவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.


5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவனது மெய்யான புகழினை எப்பொழுதும் கூறுபவரிடம் நல்வினைத் தீவினைகள் சேரா.



6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். 

மெய், வாய், கண், மூக்கு செவியாகியவற்றினால் தோன்றும் ஐந்து வேட்கைகளை நீக்கியவனின் நெறியில் நின்றவர்கள் நெடுநாள் வாழ்வார்கள்.


7. தளக்குஉவமை இல்லாதான்தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.

எவ்வகையாலும் தனக்கொப்பில்லாதவனின் அடிகளைப் பற்றியவரே மனக் கவலையை மாற்ற வல்லவர்கள். 


8. அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

பிறஆழி நீத்தல் அரிது.

அறக் கடவுளாகிய அழகிய அருள்நிறைந்த இறைவனது திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு அல்லாமல் துன்பக்கடல்களை நீந்திக் கடத்தல் அரிதாகும்.


9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத தலை.

தமக்குரிய செயல்களைக் கொண்டிருக்காத உறுப்புகள் பயனற்றவையே. அதுபோல இறைவனது திருவடிகளை வணங்காத தலைகள் பயனற்றவையே.

 

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.

இறைவனது திருவடிகளாகிய தெப்பத்தைப் பற்றியவர்களே பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர் மற்றவர் கடக்கமாட்டார்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

திருக்குறள்: பொருளடக்கம் : அறத்துப்பால் - அதிகாரம் : 1, கடவுள் வாழ்த்து [ திருக்குறள் ] | Tirukkural: Table of Contents : By charity - Authority : 1, God bless you in Tamil [ Tirukkural ]



எழுது: சாமி | தேதி : 07-15-2023 09:04 pm