பிரம்மர என்பது ஒரு வடமொழிச் சொல். பிரம்மன் என்பவர் படைப்புக் கடவுள். அவரது பெயரிலேயே இந்த முத்திரை அமைந்துள்ளது.
பிரம்மர முத்திரை செய்தால் குடலில் தேங்கியுள்ள கழிவுகள்
அகற்றப்படும்.
பிரம்மர என்பது ஒரு வடமொழிச் சொல். பிரம்மன் என்பவர் படைப்புக் கடவுள். அவரது பெயரிலேயே இந்த முத்திரை அமைந்துள்ளது.
பிரம்மர என்றால் ஆண் தேனீ என்று பெயர். இந்திய நடனக் கலையில், ஒரு அபிநயம் இந்த
முத்திரையாக அமைந்துள்ளது. இந்த முத்திரை, தேனீ, கிளி, மிருகங்களின் கொம்பு, பாடும் பறவை ஆகிய வற்றின் தோற்றங்களை ஒத்து
அமைந்துள்ளது. முத்திரையைப் பல் வேறு கோணங்களில் பார்த்தால், ஒவ்வொருவிதமாகக் காட்சி
தரும்.
சுவாசம் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை
நோயைக் குணப்படுத்தும் வரப் பிரசாதமாக இந்த முத்திரை அமைந்துள்ளது. நோய்களால்
பாதிக்கப் பட்டு பலஹீனமாக உள்ள குடல் பகுதியைப் பலப்படுத்துகிறது. மருந்துகளால், குடல் பகுதியில்
அசுத்தங்களும் மூக்கில் சளியும் தேங்குகிறது. இதனால், சுவாசக் கோளாறுகள்
ஏற்படுகின்றன. இந்தக் கோளாறுகளையெல்லாம் பிரம்மர முத்திரை நீக்குகிறது.
ஆள்காட்டி விரலை கட்டை
விரலின் அடிப்பகுதியில் வைக்க வேண்டும். கட்டை விரலின் நுனிப் பகுதியை, நடு விரலின் மேல்பகுதி
ஓரத்தைத் தொடும்படி வைக்க வேண்டும். மோதிர விரலும் சுண்டு விரலும் தளர்வாக நீட்டிய
நிலையில் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் 10
நிமிடங்கள் வீதம் 4 அல்லது 5 முறை செய்ய வேண்டும். அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ, நடைப் பயிற்சியின்போதோ
இந்த முத்திரையைச் செய்யலாம். இரண்டு கைகளிலும் இந்த முத்திரையைச் செய்யலாம்.
சுவாசம் சீராக இருக்க வேண்டும்.
1. குடலில் தேங்கியுள்ள
கழிவுகள் அகற்றப்படும்.
2. ஒவ்வாமைக்கான
(அலர்ஜி) மூலக் காரணிகள் அகலும்.
3. புண், வீக்கம் ஆகியவை
குணமாகும்.
4. சுரப்பிகள் நன்கு
வேலை செய்யும்.
5. நுரையீரல் நன்கு
செயல்பட்டு,
சுவாசக் கோளாறுகள்
நீங்கும்.
6. சளி அகலும்.
7. மலச்சிக்கல் தீரும்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
யோக முத்திரைகள் : பிரம்மர முத்திரை செய்தால் குடலில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றப்படும். - செய்முறை, கால அளவு, பலன்கள் [ ] | Yoga Mudras : By doing Brahma Mudra, the waste accumulated in the intestines will be removed. - Method, Duration, Benefits in Tamil [ ]